Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தெரு 8

அதிரைநிருபர் | January 27, 2011 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


நல்லதொரு நிலவொளியில்
வெண்மை கலந்த மணலில்
அகலமான தெருவில்
காலார நடந்தது அந்தக்காலம்!

முன்னோர்கள் சொன்னார்கள்
இரட்டை மாட்டு வண்டி பூட்டி
மாட்டின் கழுத்து மணி
சத்தம் கேட்க கம்பீரமாக
தெருவில் வலம் வந்தது அந்தக்காலம்!

தொலைக்காட்சி இல்லாத காலம்
தெருவில் அமர்ந்து படிப்பதுடன்
தெருவில் வட்டமிட்டு அமர்ந்து
வீட்டுப்பெண்கள் நல்லதையும்,
புறமையும் பேசியது அந்தக்காலம்!
தெருவில் குழந்தைகள்
ஓடி பிடித்து
ஒளிந்து விளையாடியது
சண்டை போட்டது அந்தக்காலம்!

காலை எழுந்தவுடன் பெண்கள்
வாசலில் தண்ணீர் தெளித்து
பெருக்கி தூய்மைபடுத்தியது
அந்தக்காலம்!

ஆனால்
கழிவுநீரும், பாறாங்கல்லும்
வீட்டுப்படிகளும், மாடிப்படிகளும்
கழிவுநீர் தொட்டிகளும்
என்ற ஆக்கிரமிப்பால்
தவளைப்போல் தாவி தாவி
செல்வது இந்தக்காலம்!

இப்பொழுதும் காலை விடிகிறது
தெருவை சுத்தப்படுத்தி
தன் வீட்டு வாசல் குப்பையை
அடுத்த வீட்டு வாசலில்
ஒதுக்கி வைப்பது இந்தக்காலம்!

வீட்டின் கழிவுகளை
வாசலில் கொட்டி வைத்து
மனிதர்கள் தாண்டி செல்வதை
கண்டு ரசிக்கும் பெண்களை
கொண்டது இந்தக்காலம்!

12 அடி வாகனமும்
சிறிய வாகனங்களும்
செல்ல முடியாத தெருவாக
தெருவையே வெளி
வாசலாக்கிய பேராசை
படைத்த மனிதர்களை
கொண்டது இந்தக்காலம்!

மனிதா! உனது இடத்தில்
2அடி 3அடி பக்கத்து வீட்டுக்காரன்
எடுத்துக்கொண்டான் என்றால்
உன் ஆயுள் முழுதும்
நீதிமன்ற வாசலில் காத்திருக்கிறாய்!

மனிதா!
தெரு என்பது அனைத்து
மனிதர்களுக்கும் பொதுவானது!
பட்டா போட்டுக்கொள்ள இல்லை
என்பதை எந்தப்பள்ளியில்
உன்னை சேர்த்து தெளிவுபடுத்த!

கொம்பு உள்ள ஆடு
கொம்பு இல்லா ஆட்டை
முட்டினாலும் கொம்பு
இல்லா ஆட்டுக்காக
வல்ல அல்லாஹ்
நீதி வழங்கும் நாள்
மறுமை நாள்!

மனிதா எனக்கும் உனக்கும்
வழக்கு ஒன்று இருக்கிறது!
என் இடத்தை அபகரித்த
உனக்கு இறுதிநாளின்
அதிபதியின் நீதிமன்றத்தில்
நீதி அளிக்கப்படும்!

மனிதா!
என்னை தட்டிக் கேட்க
யாரும் உண்டோ என்ற
ஆணவத்தில் அலைகிறாய்!

எந்த சிபாரிசும், எந்த ஆணவமும்
எந்த ஆள் பலமும், பணபலமும்
உன்னை காப்பாற்ற முடியாத
மறுமை நாளுக்காக
பொறுத்திரு மனிதா!
தெருவை அபகரித்த
உன் செயலுக்கு சரியான
தீர்ப்பு வழங்கப்படும் நாள்
வெகுதூரத்தில் இல்லை!

ஒவ்வொருவரும், தாம் செய்த நன்மையையும், தீமையையும் கண் முன்னே பெற்றுக் கொள்ளும் நாளில் தமக்கும் தமது(தீய) செயல்களுக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி இருக்க வேண்டும் என ஆசைப்படுவர். (அல்குர்ஆன் : 3:30).

ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். (அல்குர்ஆன் : 3:185).

-- S.அலாவுதீன்

8 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தெரு ப்பாடம் !

ஈட்டிகள் குத்தி வேலி அடைக்காமல்...
புத்தி சொல்லி அனைத்துடும் நீங்களும் ஒரு கவிதையே எங்களுக்கு !

அருமையான வரிகள்
இன்றைய தெரு(க்களின்) முகச் சாயல் !

sabeer.abushahruk said...

எனக்குத் தெறிந்து அப்படி அபகரித்தவர்கள் யாரும் இம்மையிலேயே நல்லா இல்லை என்பது கண்கூடு.

ஓடி முடிந்து ஆடி அடங்குகையில் ரெண்டடி மூனடி என அடித்தவர்கள் கால்கள் அகட்டக்கூட இடம் கிடைக்காது கபுரில் என விளங்கிக்கொள்ளட்டும்.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

கவி வார்த்தைகள் ரெண்டே வரியானாலும் பல அர்த்தங்களை எடுத்து கொட்டித்திர்த்து உள்ளீர் -

மெய்சிலிர்க்க வைத்த வரி

பாராட்டுக்கள் சகோ. அலாவுதீன்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரர் அலாவுதீன்,

உண்மை உரக்க சொல்லியிருக்கிறீர்கள்,சில மார்க்க தெளிவு உள்ளவர்களிடமும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை குறைந்து, அபகரிக்கும் போக்கே அதிகம்.. காரணம் சுயநலம்.

வாழும் நாட்களில் வேண்டுமானால் அடிகணக்கில் அபகரிக்கலாம், மரணம் வந்தபிறகு தெரியும் அடிக்கணக்கில் உள்ள நம் தங்குமிடம்.

சுகாதாரம் இன்னும் நம்மூர்களில் உள்ள தெருக்களில் மென்பட வேண்டும். வார்ட் உறுப்பினர்கள் இதில் அதிக அக்கறை செலுத்தவேண்டும், செலுத்த வைக்கவேண்டும்.

Unknown said...

நிறைய 'அடப்பு'க்கள் இருக்கிறார்கள். தன் இடத்தை யாருக்கும் கொடுக்கவேண்டாம். பொது நிலத்தையும் மற்றவர் சொத்தையும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருந்தாலே போதும்.

இது ஒரு பக்கம் நிலப்பிரச்சினை மட்டுமன்று, அப்பட்டமான மனித உரிமை மீறல்.அல்லாஹ்விடம் நாளை பதில் சொல்ல வேண்டும். சிந்திப்பார்களா?

அலாவுதீன் காக்காவின் வரிகள் எல்லாமே நிதர்சனம்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
தெரு என்பது பொதுவானது!
அதிலும் இடம் சுரன்டல் ஏன் உருவானது?
தெருவின் இடத்தைசுருக்கி,தன் இடத்தை பெருக்கி
வாழ்பவரும் (தெரு) பொறுக்கிதானே?
இதில் வெட்கம் என்பது எள் அளவும் இல்லையே!
நாளை மருமையில் சுவர்கத்தில் இடம் கிடைக்காமல்
நரகதில் இடம் பிடிக்க இப்பவே ஒத்திகையா?
வலதுபக்கத்துவீட்டில் காலடி,இடதுபக்கத்து வீட்டில் அரையடி. இப்படி எடுத்துக்கொண்டாலும் கபரில் உனக்கு ஆறடிதான்.
சிந்தித்திடு மானிடா! முன்பே தவறு செய்திருந்தால் திருந்தடா!
இல்லையெனில் நாளை உன் நிலமை நடுத்தெருவில்.......

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உன் நிலமை நடுத்தெருவில்......///

கிரவுன்(னு): அட ஏண்(டா)ப்பா !!

இதைக்கூட சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவர்கள் வீட்டருகில் எடுத்தது போதும் இனி நடுத்தெருவிலும் எடுத்தாலும் எடுக்கலாம் !

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

சுருங்க சொன்னால்
"தெரு"க்கள்
சுருங்கி விட்டன

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு