Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கற்க கசடற கற்பவை நீ!. கவர்மென்ட் வேலைக்கு மட்டுமினி! 19

அதிரைநிருபர் | January 08, 2011 | , ,

சுதந்திரத்திற்கு தியாகம் செய்தோம்!
வறுமையோ நிரந்திரமாச்சு!
தந்திரமாய் சூழ்ச்சி செய்தோருக்கெல்லாம்,
அரசாங்க வேலை நிரந்திரமாச்சு!.

திட்டம் போட்டு திருடிய கூட்டம்,
திருடுது, திருடுது, உன் உரிமையினை!.
தடுத்து அதை நீ நிறுத்தாவிட்டால்!.
அடுத்த தலைமுறைக்கும் தொடருமிது!.

அப்பன் பாட்டனெல்லாம் அயல்நாடாச்சு!
அம்மா, அக்காவெல்லாம் ஊரில் தனிமையாச்சு!.
கணவனிருந்தும் மனைவியின் வாழ்க்கை விதவையாச்சு!.
கருவே காணாமல், கற்ப பையும் கசங்கி போச்சு!.

பர்மா, சிலோனெல்லாம் சிதைஞ்சு போச்சு!.
பாரம்மா, அரபுநாடும் அசைஞ்சு போச்சு!.
உழைச்சே தேகம் சோகமாச்சு!
ஊருக்கு திரும்பினால், நோயாலே காசும் போச்சு!

அன்பான மனைவி உன்கூட இல்லையென்றால்!,
அயால்நாட்டு வேலை, உனக்கோ வேண்டாமினி!.
அரசாங்க வேலையை நீ எட்டிப் பிடி!.
அதற்கு நீ படிக்கணும், சட்டப்படி!.   

பட்டம் படிக்காத என்னிடமினி, நீ
சட்டம் பேசி என்ன பயன்?.
அப்பன் படிக்காத படிப்பையெல்லாம்,
அன்பான மகனே படித்திடு நீ,

கற்க கசடற கற்பவை நீ!
கவர்மென்ட் வேலைக்கு மட்டுமினி!
சமுதாயம் ஏங்குது, உன்னை எண்ணி!
தூங்காதே என்மகனே கல்வியில் இனி.....!

கற்க கசடற கற்பவை நீ!........

அதிகார படிப்பை நீ அதிகம் படி!.
அசராதே, வாழ்க்கையை முன்னேறப் படி!.
அணைபோடு அயல்நாட்டின் அடிமைப்பணி!
அதனால்தானே அதிரையில் கல்வி மாநாட்டுப்பணி!

-- அதிரை முஜீப்.


Thanks: http://adiraimujeeb.blogspot.com/2011/01/blog-post_08.html


19 Responses So Far:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரர் முஜீப்

எல்லோரையும் தட்டி எழுப்புகிறது தங்களின் கவிதை, இதை படித்து ரசிப்பதோடல்லாமல் ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச்செல்லவேண்டும்.

கல்வி மாநாட்டில் நோட்டீசாக வெளியிடலாம்,

நன்றி, வாழ்த்துக்கள் சகோதரரே

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கற்க கசடற கற்றவைகளை கற்பித்திடு கயவர்களிடமிருந்து காத்திட…

நானும் சேர்ந்தே உங்களோடும் என் கவிக் காக்காவோடும்… (yes mee too ன்னு சொன்னா எங்களுக்கும் தமிழில் சொல்லத் தெரியுமே)

Excellent MUJEEB,

Ahamed irshad said...

சிற‌ப்பான‌ வரிக‌ள் ச‌கோ.முஜீப்... அருமை..

sabeer.abushahruk said...

ஊறிக்கிடந்த உள்ளக் கிடக்கை, நிறைவேறும் தருணத்தில் என்ன செய்யும்? பொங்கி வழியாதா?
பிறவிக் கலைஞனிடமிருந்து பீறிட்டுக் கிளம்பியிருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தாருங்கள் தீன்குலக் கண்மணிகளே!

வேறென்ன சொல்ல!

ZAKIR HUSSAIN said...

முஜீப் உங்கள் கவிதையை இப்போதுதான் வாசிக்கிறேன்....[ இவ்வள்வு நல்லவிதமாக எழுதும் நீங்கள் எப்படி இவ்வளவு நாள் ஒரு Blogger ஆக மட்டும் எனக்கு அறிமுகமானீர்கள்?]

ஜலீல் நெய்னா said...

ஆஹா...அருமை முஜிப்
சபீர் சொன்னது போல் உள்ளக்கிடங்கிள் தேக்கி வைத்ததால் பொங்கிவழிந்துவிட்டது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//ஊருக்கு திரும்பினால், நோயாலே காசும் போச்சு!//

நிறைய நம் மக்களுடை வாழ்க்கை இப்படித்தான் உள்ளது என்பது நடைமுறை உண்மை. விதிவிளக்காக 1, 2 விரல் விட்டு எண்ணலாம்..

வெளிநாட்டு வாழ்க்கை ஒரு மாயை என்பதை வருங்கால சந்ததியினருக்கு சொல்லி புரியவைக்க வேண்டும்.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
முஜீப் கவிதை
நெருப்பு பறக்கின்றது

Unknown said...

சகோதரர் முஜீப் அவர்களின் கவிதை புதிய வாசலை திறந்திருக்கிறது.

"சுதந்திரத்திற்கு தியாகம் செய்தோம்!
வறுமையோ நிரந்திரமாச்சு!
தந்திரமாய் சூழ்ச்சி செய்தோருக்கெல்லாம்,
அரசாங்க வேலை நிரந்திரமாச்சு!."
நிதர்சன வரிகள்...

"திட்டம் போட்டு திருடிய கூட்டம்,
திருடுது, திருடுது, உன் உரிமையினை!.
தடுத்து அதை நீ நிறுத்தாவிட்டால்!.
அடுத்த தலைமுறைக்கும் தொடருமிது!."

கொதிக்கும் வரிகள்...விழித்துக்கொள்ள வேண்டிய காலமிது.

சகோதர் முஜீப் அவர்கள் இன்னும் எழுதவேண்டும்!

crown said...

சுதந்திரத்திற்கு தியாகம் செய்தோம்!
வறுமையோ நிரந்திரமாச்சு!
தந்திரமாய் சூழ்ச்சி செய்தோருக்கெல்லாம்,
அரசாங்க வேலை நிரந்திரமாச்சு!.

திட்டம் போட்டு திருடிய கூட்டம்,
திருடுது, திருடுது, உன் உரிமையினை!.
தடுத்து அதை நீ நிறுத்தாவிட்டால்!.
அடுத்த தலைமுறைக்கும் தொடருமிது.
------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.சுதந்திரத்திற்கு தியாகம் செய்து நம் சுதந்திரம் போயே போச்சு! நரி தந்திர கூட்டம் திட்டம் போட்டு சட்டம் இயற்றும் என்ற நிலையாச்சு.திட்டமிட்டு திருடும் கூட்டம் ,உன் உரிமைதனைப்பறிக்குது.அதன் கொட்டம் அடக்காவிட்டால் அடுத்த தலைமுறைக்கும் வினையாய் போகும் என்கிற ஆரம்ப வரிகளிலேயே எச்சரிக்கை சமிங்கை ,சங்கை ஊதிவிட்டார் சகோ.முஜிப் அவரின் கவலையுடன் கூடய ,அக்கறை கவனிக்கப்படவேண்டும்.

emhibrahim said...

அஸ்ஸலாமு அழைக்கும்
சகோதர்ரின் கவிதை அருமை……………

crown said...

அப்பன் பாட்டனெல்லாம் அயல்நாடாச்சு!
அம்மா, அக்காவெல்லாம் ஊரில் தனிமையாச்சு!.
கணவனிருந்தும் மனைவியின் வாழ்க்கை விதவையாச்சு!.
கருவே காணாமல், கற்ப பையும் கசங்கி போச்சு!.

பர்மா, சிலோனெல்லாம் சிதைஞ்சு போச்சு!.
பாரம்மா, அரபுநாடும் அசைஞ்சு போச்சு!.
உழைச்சே தேகம் சோகமாச்சு!
ஊருக்கு திரும்பினால், நோயாலே காசும் போச்சு!

அன்பான மனைவி உன்கூட இல்லையென்றால்!,
அயால்நாட்டு வேலை, உனக்கோ வேண்டாமினி!.
அரசாங்க வேலையை நீ எட்டிப் பிடி!.
அதற்கு நீ படிக்கணும், சட்டப்படி(இஷ்டப்படி)!.
-------------------------------------------------------------
நம் கையாகாலதனம்,தனம் வேண்டி நம் பயணம்,அவையாவும் திசை மாறிய பயணம்.இதனால் இல்லத்தில் சலனம்,பின் பிணி வந்து விரைந்து வந்திடுதே மரணம்.இந்த நிலை ஏன் வரனும்? காரணம் அறியாமையும்,அவசர புத்தியும்.துணையில்லா தொலைதூர பயணம் ,தொலைந்து போய்விடும் வாழ்வின் இன்பம்,இளமை எல்லாம் மிக அருமையாக சொல்லபட்ட எச்சரிக்கை.
------------------------------------------------------------------

crown said...

பட்டம் படிக்காத என்னிடமினி, நீ
சட்டம் பேசி என்ன பயன்?.
அப்பன் படிக்காத படிப்பையெல்லாம்,
அன்பான மகனே படித்திடு நீ,

கற்க கசடற கற்பவை நீ!
கவர்மென்ட் வேலைக்கு மட்டுமினி!
சமுதாயம் ஏங்குது, உன்னை எண்ணி!
தூங்காதே என்மகனே கல்வியில் இனி.....!

கற்க கசடற கற்பவை நீ!........

அதிகார படிப்பை நீ அதிகம் படி!.
அசராதே, வாழ்க்கையை முன்னேறப் படி!.
அணைபோடு அயல்நாட்டின் அடிமைப்பணி!
அதனால்தானே அதிரையில் கல்வி மாநாட்டுப்பணி!
-----------------------------------------------------------------
மகனே(மகளே) நான் இழந்தைதை நீ இனி இழக்க வேண்டாம்.பேரனும்,பேத்தியும் அப்படியே இருக்க வேண்டாம். தலை முறை நிமிர ,தலையில் கல்வியை சுமந்திடு,எதிர்காலம் உன்னை ,சந்தைதியை சீராட்டி சுமந்திடும். நம் சமுதாயம் பாரட்டி மகிழ்திடும். திட்டம் போட்டு படி,அறிவை தீட்டி படி,இப்படி நீ படித்தால்தான் நாளை நாட்டில் உனக்கு இருக்கும் வரும் படி,அதை தடை இன்றி பெரும்படி பெறும் படிப்பு படி.
படி ,படி, படிப்படியாய் முன்னேறப்படி. நம் சமுதாயம் முன்னேறும் படி.அதற்கான முதல் படிதான் கல்வி மானாடு,அதில் மகிழ்வோடு கலந்து,வெற்றி பெற அனைவரும் வாரீர், நாளைய சமுதாம் நிமிரட்டும். அவர்கள் வாழ்வு மிளிரட்டும். ஆமீன் ,ஆமீன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

''இன்று அதிரையில் பொறிக்கப்பட வேன்டிய அழகான வரிகள்.இது தவறு என்று அழிக்கப்பட வேன்டும் நாளைய சந்ததிகள்''.

Yasir said...

புத்துணர்ச்சி தரும் புரட்சிக்கவிதை...நாம் சமுதாயத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல விதைக்கப்பட்டு இருக்கும் விதை...வரிகள் அனைத்திலும் பீறிட்டு வரும் ”லாவா” வேகம்...இன்ஷா அல்லாஹ் நாம் கனவுகள் மெய்ப்படும்...அருமையாக நமது உள்ளக்குமுறலை எழுத்தில் வடித்து உள்ளீர்கள் காக்கா...உங்களை போன்ற புரட்சிக்கவிகள் நாம் சமுதாய விடுதலை போராட்டத்திற்ககு தேவை

Yasir said...

சகோ.கிரவுன்...”கோனர்” பிறப்பதற்க்கு முன்னர் நீங்கள் பிறந்து இருந்தால் உங்கள் விளக்கவுரை நன்கு பிரபலமாகி இருக்கும்...அவ்வளவு தெளிவாக கவிதைகளை அனலய்ஸ் செய்து, உங்கள் பாசிட்டிவ்வான கருத்தையும் பதித்து,படிப்பவர்கள் ரசிக்கும் படி செய்யும் உங்கள் பாங்கு அருமை..தொடருங்கள் எப்பொழுதும் இப்படியே

Unknown said...

Yasir சொன்னது…
சகோ.கிரவுன்...”கோனர்” பிறப்பதற்க்கு முன்னர் நீங்கள் பிறந்து இருந்தால் உங்கள் விளக்கவுரை நன்கு பிரபலமாகி இருக்கும்...அவ்வளவு தெளிவாக கவிதைகளை அனலய்ஸ் செய்து, உங்கள் பாசிட்டிவ்வான கருத்தையும் பதித்து,படிப்பவர்கள் ரசிக்கும் படி செய்யும் உங்கள் பாங்கு அருமை..தொடருங்கள் எப்பொழுதும் இப்படியே

-------------------------------------------------------
தஸ்தகீர் ஒரு நேர்மையான ரசிகன் ........படிப்பதை உள்வாங்கி
விமர்சிக்கும் வாசகன் ...சிலநேரங்களில் ஆக்கங்களை விட
தஸ்தகீரின் பின்னூட்டம் பின்னி எடுக்கும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கருத்துக் குவியலுக்கு சிகரம் வைப்பவர்கள் யார் என்ற கேள்வியே எழுதுவதில்லை இங்கே... யாருக்கும் யார் சலைத்தவர்களல்ல... மாஷா அல்லாஹ் ! சாதிக்கப் பிறந்தவர்கள் அயல் நாடுகளில் அசத்தும் மன்றம் இது !

மாணவமணிகளைக் காட்டிலும் ஆசான்களின் ஆர்வம் அதிகமும் அவர்களின் ஆதங்கமும் என்னால் இங்கே காண முடிகிறது... துஆச் செய்யுங்கள் உங்களால் முடிந்தவரை வீட்டிலிருக்கும் பெற்றோர்க்கும் சுற்றாத்தார்க்கும் ஆங்காங்க தகவல்கள் கொடுத்து மாநாட்டு அறிவிப்பு நோட்டீஸில் கொடுத்திருக்கும் அலைபேசிக்கு தொடர்பு கொண்டு தங்களின் வருகையை ஊர்ஜிதம் செய்து கொள்ளச் சொல்லுங்கள் இது நம் யாவரின் அவசியக் கடமை !

அதிரை முஜீப் said...

கவிதையை விட, அதற்கு கருத்துக்களால் பெருமை சேர்த்த சகோதரர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். உங்களின் உற்சாக வார்த்தைகள் எனக்கு ஊக்கமளிக்கின்றது. அணைத்து சகோதரர்களுக்கும் நன்றி. குறிப்பாக கவிதைக்கு கருத்து விளக்கம் அளித்திருக்கும் கிரவுன் அவர்கள் உண்மையிலேயே கவிதைக்கு "தலைகிரீடம்" சூட்டியிருகின்றார்.

//தஸ்தகீர் ஒரு நேர்மையான ரசிகன் ........படிப்பதை உள்வாங்கி
விமர்சிக்கும் வாசகன் ...சிலநேரங்களில் ஆக்கங்களை விட
தஸ்தகீரின் பின்னூட்டம் பின்னி எடுக்கும் // என்ற வரிகள் நூற்றுக்கு நூறு உண்மையே!.

இக்கவிதையின் சாராம்சம் மக்களுக்கு விழிப்புனர்வாக கொண்டு செல்லவேண்டும். அதுதான் நோக்கமே தவிர, கவிதையைப் பாராட்டி பயன் இல்லை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு