Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கம்பன் எக்ஸ்பிரஸ் வருமா? எழுதுங்கள் MLA வுக்கு கடிதம் 15

அதிரைநிருபர் | January 17, 2011 | , ,

அதிரை வாழ் பெரியவர்கள், வெளிநாட்டு வாழ் அதிரை வாசிகள் மற்றும் நண்பர்கள் கவனத்திற்கு,

"தமிழக ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற புதிய கூட்டணி அமையுமா?" என்ற தலைப்பிட்ட இன்றைய பதினேழாம் தேதியிட்ட தினமலரில் வெளியான செய்தி என் கவனத்தைக் கவர்ந்தது.

ஒப்புதலுக்கும், நிதி ஒதுக்கீட்டிற்கும் காத்திருக்கும் தமிழக ரயில்வே திட்டங்களில் திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டம் முதல் திட்டமாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ரயில்வே பட்ஜெட் தாக்கலாகவிருப்பதால் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியும் அதிகாரிகளும் அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும், எதிர்வரும் தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் மேற்கு வங்க சட்ட சபை தேர்தல்களை கருத்தில் கொண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என்ற கருத்து மத்திய மாநில அரசு வட்டாரங்களில் நிலவுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மற்ற மாநில அரசியல் வாதிகளை முன்னுதாரணம் காட்டி நம்முடைய அரசியல் வாதிகளும் கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையுடன் செயல்பட்டால் அதிக அளவில் நிதி ஒதுக்கீடும், பெரும்பான்மையான திட்டங்களுக்கு ஒப்புதலும் பெற்றுவிடலாம் என குறிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நம் ஊர் மற்றும் அண்டை ஊர் தனவந்தர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் செல்வாக்குடையோர் முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் மீண்டும் அந்த முயற்சியை முடுக்கிவிட்டு முக்கிய அமைச்சர் பெருமக்களையும் செல்வாக்குடைய எதிர்க்கட்சி பிரமுகர்களையும் உரிய முறையில் சந்தித்து முறையிட்டால் நம் நீண்ட நாள் கனவு நிச்சயம் விரைவில் நிறைவேறும் என்பது என் துணிபு.

முடிந்தோர் முயற்சிப்பார்களா?

-- அபு பஜ்லு (செ.ஒ.மு.ஹுசைன்) , ஜித்தா.

புகைப்படம்: சகோதரர் ஜாஹிர் ஹுசைன்


குறிப்பு: பின்னூட்டமாக சகோதரர் M H ஜஹபர் சாதிக் அவர்கள் சொன்ன யோசனை மிக சரியானதாக இருந்ததால் நாம் அந்த பின்னூட்டத்தையும் இந்த ஆக்கத்துடன் பதிவு செய்து இந்த ஆக்கத்தின் தலைப்பையும் மாற்றிவிட்டோம். சகோதரர் அபுபஜ்லு அவர்கள் இதற்கு சம்மதம் தெரிவிப்பார்கள் என்று நம்புகிறோம். இதை படிப்பவர்கள் அனைவரும் சகோதரர் ஜஹபர் சாதிக் அவர்கள் குறிப்பிட்டுள்ள MLAவின் மின்னஞ்சல் முகவரிக்கும் மற்ற அரசு மின்னஞ்சல் முகவரிக்கும் எல்லோரும் கோரிக்கை மடல் அனுப்ப வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  நல்ல கோரிக்கை மடலை நம் மூத்த சகோதரர்கள் யாராவது மாதிரியாக எழுதி பின்னூட்டமிட்டால் நாம் அனைவரும் தெளிவாக நம் கோரிக்கையை அனுப்ப ஏதுவாக இருக்கும்.

M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…  இன்ஸா அல்லாஹ் வரும்.இணயத்தின் மூலம் நம்மால்(தொலைவில் உள்ளவர்கள்) முடிந்தது MLA வுக்கு மெயில் அனுப்பலாமே! MLA eMail address. mlapattukkottai@tn.gov.in


-- அதிரைநிருபர் குழு.

15 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஓடிய இரயில பிடிப்பதா ? வருவதற்கு வழி கேட்பதா ? பூணைக்கு யார் மணி கட்டுவது ? நமதூரில் எல்லாமே அகலம்தான் இரும்புப் பாதையைத் தவிர.. ஆளுக்கு ஒரு தடம் தேடிய மக்களே ஆளுபவர்களின் பார்வையை அகலமாக்கிட முயற்சியெடுங்களேன்...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இன்ஸா அல்லாஹ் வரும்.இணயத்தின் மூலம் நம்மால்(தொலைவில் உள்ளவர்கள்) முடிந்தது MLA வுக்கு மெயில் அனுப்பலாமே! MLA Mail address.
mlapattukkottai@tn.gov.in

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரர் அபூ பஜ்லு அவர்கள் சரியான நேரத்தில் எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள திருவாரூர் காரைக்குடி அகல இரயில் பாதை திட்டம் விரைந்து செயல்பட, நாம் எல்லோரும் சகோதரர் ஜஹபர் சாதிக் அவர்கள் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கும், மேலும் சகோதரர் அரசாங்கத்தின் கவணத்தை ஈர்க்க தெரிந்த அரசு மின்னஞல்களை இங்கு பின்னூட்டமாக குறிப்பிட்டால் நிறையை கோரிக்கையை அனுப்பலாம் நம்மூர் அகல இரயில் பாதை விரைந்து செயல்படுவது தொடர்பாக.

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

இந்த புகை படத்தை பார்க்கும் போது கம்பன் வரும்போது இந்த இரட்டை கண் பாலத்தின் கீழ் நின்று நீச்சல் அடித்து கூச்சல் போடுவது நினைவுக்கு வந்தது

கம்பன் வருமா கம்பன் வந்தாலும் பாலத்தின் அடியில் நின்று நீச்சல் அடிக்க முடியுமா? காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

முக்கிய அட்ர்ஸ்கள்;அதிரை நிருபர் குழு கேட்டதற்க்கிணங்க,மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி email: mr@rb.railnet.gov.in & E AHAMED email: msra@rb.railnet.gov.in MINISTER OF STATE FOR RAILWAY email: msrm@rb.railnet.gov.in RAILWAY BOARD CHAIRMAN email: crb@rb.railnet.gov.in INDIAN RAILWAY WEB MASTER email: contentmanager@rb.railnet.gov.in SOUTHERN RAILWAY email: srailway@gmail.com SOUTHERN RAILWAY GENERAL MANAGER email: dgm@sr.railnet.gov.in அனுப்புவோம் மெயில்! பெறுவோம் ரெயில்!! (இன்ஷா அல்லாஹ்)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அதிரை நிருபர் குழு கேட்டதற்க்கிணங்க கோரிக்கை மாதிரி மடல்,
Honourable railway department,
We humbly request you to implement our long term supplication of Chennai--Karaikudi (via Tiruvarur-Pattukkottai-Adiram Pattinam) broad-gage on coming month budget.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அரசு சார்ப்புடைய மின்னஞ்சல் முகவரிகளை கொடுத்த சகோதரர் ஜஹபர் சாதிக் அவர்களுக்கு மிக்க நன்றி.

அகல இரயில் திட்டம் தொடர்பாக நம் அடிக்கடி சத்தம் மட்டும் தான் போடவேண்டியுள்ளது. கோரிக்கை கடிதங்கள், மாதிரி கடிதம் தயவு செய்து யாராவது முழுமையாக எழுதித்தாருங்களேன். குறைந்தபட்சம் 10 மின்னஞ்சலாவது அனுப்பலாமே.

அனுபவம் வாய்ந்தவர்கள் யாராவது எழுதித்தருவீர்களா?

sabeer.abushahruk said...

சகொ. அபு பஜுலு,

நல்ல பதிவு. இக்காரியத்தில் நல்லுள்ளம் கொண்ட நம் மூத்தோர்கள் சிலர் பல முயற்சிகள் செய்து தொடர்ந்து போராடி வருகிறார்கள் என அறிவேன். அத்தோடு தங்களின் பொறுப்புணர்வுக்கும் இந்த பதிவுக்கும் ஊர்க்காரன் என்ற முறையில் என் நன்றியும் வாழ்த்துக்களும்.

தங்களின் மற்றும் சகொ.M.H. ஜஹபர் சாதிக் அவர்களின் வழிகாட்டுதல்படி நாம் அனைவரும் மனு அனுப்புவோம்.

Yasir said...

please correct this typing mistake - gage to "gauge"

abdur rahman said...

அகல இரயில் திட்டம் தொடர்பாக நம் அடிக்கடி சத்தம் மட்டும் தான் போடவேண்டியுள்ளது. கோரிக்கை கடிதங்கள், மாதிரி கடிதம் தயவு செய்து யாராவது முழுமையாக எழுதித்தாருங்களேன். குறைந்தபட்சம் 10 மின்னஞ்சலாவது அனுப்பலாமே.


அஸ்ஸலாமு அழைக்கும், நமதூர் அகலபாதை திட்டம் சம்பந்தமாக ஜனாப் M.K.S.ஜஹபர் காக்கா அவர்கள் பல முயற்சிகள் செய்துள்ளார்கள் அவர்களிடம் பல்வேறுபட்ட அரசு துறை சம்பதமான கோரிக்கை கடிதங்கள் உள்ளன.அவர்களிடம் தொடர்பு கொண்டால் உங்களுக்கு தேவையானவை கிடைக்கும் .

abdur rahman said...

அஸ்ஸலாமு அழைக்கும், நமதூர் அகலபாதை திட்டம் சம்பந்தமாக ஜனாப் M.K.S.ஜஹபர் காக்கா அவர்கள் பல முயற்சிகள் செய்துள்ளார்கள் அவர்களிடம் பல்வேறுபட்ட அரசு துறை சம்பதமான கோரிக்கை கடிதங்கள் உள்ளன.அவர்களிடம் தொடர்பு கொண்டால் உங்களுக்கு தேவையானவை கிடைக்கும் .

abdur rahman said...

கம்பன் கனவுக்கு முன் கணினி முன்பதிவு நமக்கு தேவை.
நமதூர் சென்னை வாசிகள் பலர் தற்பொழுது தஞ்சை வழியாக தினமும் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர் ஆகையால் டிக்கெட் முன் பதிவு செய்ய பட்டுகோட்டை செல்ல வேண்டிஉள்ளது. விசேஷ காலங்களில் சென்னையில் நடுஇரவு முதலே காத்து இறுக வேண்டி உள்ளது.

abdur rahman said...

http://www.sr.indianrailways.gov.in/sr/budget2010.htm

மேல உள்ள லிங்கை சொடுக்கினால் வரும் ரயில்வே பட்ஜெட்டில் நமதூர் அகலப்பாதை திட்டம் இந்த வருடம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு