Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கல்வி விழிப்புணர்வு மாநாட்டு நிகழ்ச்சி நிரல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு 12

அதிரைநிருபர் | January 06, 2011 | , ,


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்,

வருகிற ஜனவரி 14, 15 தேதிகளில் நம்மூரில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது, அதற்கான வேலைகளை அதிரைநிருபர் குழு, அதிரை இஸ்லாமிக் மிஷன் மற்றும் அதிரை இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்து வருகிறோம். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

கல்வி விழிப்புணர்வு மாநாட்டு நிகழ்ச்சி நிரல் நோட்டீஸ் இங்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.


இந்த செய்தியை படிப்பதோடு இல்லாமல், தங்கள் வீடுகளில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களை இந்நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள வேண்டுகோள் வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இக்கல்வி விழிப்புணர்வு மாநாடு வெற்றிபெற எல்லாம் வல்ல அல்லாஹ் அருபுரிவானாக.

இக்கல்வி விழிப்புணர்வு மாநாட்டுக்கு பல நாட்களாக தன்னலம்பாராமல் உழைத்துவரும் மாநாட்டு குழு சகோதரர்கள் அனைவரையும் வாழ்த்துகிறோம்.


-- அதிரைநிருபர் குழு

-- முஜிப்.காம்

-- அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டு குழு

12 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நிகழ இருக்கும் நிதர்சன சாதனைப்படிக்கு அடிக்கல் நாட்டும் விழாவின் நிரல் கண்டு மகிழ்ச்சி - அல்ஹம்துலில்லாஹ் !

கல்வி விழிப்புணர்வு மாநாடு சிறப்புடன் நிகழ் நிஜமாகிட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம் !

sabeer.abushahruk said...

இக்கல்வி விழிப்புணர்வு மாநாடு வெற்றிபெற எல்லா வல்ல அல்லாஹ் அருபுரிவானாக.

ZAKIR HUSSAIN said...

ஒரு சின்ன விதை இன்று செடியாக வளர்ந்திருக்கிறது..இப்போது கவனம் தேவை, வளர்ந்து வரும் போது நிறைய சவால்கள் இருக்கும். ஒருமித்த நோக்கத்துடன் பயணிக்கும்போது இது இன்ஷா அல்லாஹ் விருட்சமாகும். ஊருக்கே பயனாக இருக்கும். ....விதை இன்று விதைத்தது.

இப்னு அப்துல் ரஜாக் said...

வாழ்த்துகள் நண்பர்களே,சகோதரர்களே.
இன்ஷா அல்லாஹ் மாநாடு வெற்றி பெரும்.
http://penaamunai.blogspot.com/

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

முதலாம் கல்வி விழிப்புணர்வு மாநாடு இன்ஷா அல்லாஹ் சிறப்புடன் நடந்தேறி அதன் நோக்கம் நிறைவேறிட எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீனிடம் நாமெல்லாம் து'ஆச்செய்வோம்.

அதிரை பைத்துல்மால் நடத்தும் திருக்குர்'ஆன் மாநாடு போல் வருடாவருடம் கல்வி விழிப்புணர்ச்சி மாநாடு நமதூரில் நடத்தப்பட்டு பல நூறு அறிவியல் விஞ்ஞானிகளையும், ஆராய்ச்சியாளர்களையும், மாமேதைகளையும், வழக்கறிஞர்களையும், மருத்துவர்களையும், பேராசிரியர்களையும், அரசு உயர் அதிகாரிகளையும், காவல்துறை அதிகாரிகளையும் இன்னும் பற்பல உயர் பதவிகளில் அலங்கரிக்க இருக்கும் நல்லவர்களை வருங்காலத்தில் முறையான தெரிவு செய்யப்பட்ட கல்வி என்னும் விளைச்சல் மூலம் நல்ல அறுவடை செய்து நம் ஊருக்கும் அவர் தம் பெயருக்கும் நல்ல பெருமையை தேடித்தர‌ வல்ல ரப்புல் ஆலமீனிடம் து'ஆச்செய்வோம்.


சிறிய வேண்டுகோள்: ந‌ம‌தூரில் பெரும்பாலும் ஆண்க‌ள் அர‌பு நாடுக‌ள், மேற்க‌த்திய‌ ஐரோப்பிய‌ நாடுக‌ளில் வ‌சித்து வ‌ருவ‌தால் அங்குள்ள‌ அவ‌ர்க‌ளுக்கு அனுபவ‌ப்ப‌ட்ட‌ சிறந்து விள‌ங்கும் க‌ல்வி முறைக‌ள் ப‌ற்றியும் சில‌ குறிப்ப‌ட்ட‌ பாட‌ங்க‌ளின் முக்கிய‌த்துவ‌ம் ப‌ற்றியும் அத‌னால் வாழ்வில் மிளிர்ந்து ப‌ய‌ன‌டையும் எண்ண‌ற்றோர் ப‌ற்றியும் அடிக்க‌டி அந்நாடுக‌ள் சென்று வ‌ரும் த‌ன்னார்வ‌ல‌மிக்க‌ ந‌ம்மூர்க்கார‌ர்க‌ளுக்கு இம்மாநாட்டில் ஒரு சிற‌ப்பு நேர‌ம் ஒதுக்க‌ப்ப‌ட்டு அவ‌ர்க‌ளுக்கு சிறு சொற்பொழிவாற்ற‌ நேர‌ம் கொடுத்தால் அது மிக‌வும் ப‌ல‌னுள்ள‌தாக‌ ந‌ம் மாணாக்க‌ர்க‌ளுக்கு அமைய‌லாம்.

ப‌டிப்பு, ப‌டிப்பு என்று ம‌ட்டும் த‌ன் முழு க‌வ‌ன‌த்தையும், நேர‌த்தையும் அற்ப‌ணிக்கும் ப‌ல‌ மாண‌வ‌ர்க‌ள் உள்ள‌ சூழ்நிலையில் அவ‌ர்க‌ளின் ம‌ன‌ரீதியான‌, உட‌ல்ரீதியான‌ ஒரு புத்துண‌ர்ச்சிக்கு உட‌ற்க‌ல்வி/ப‌யிற்சி முறையைப்ப‌ற்றியும் அதில் அனுப‌வ‌மும், ஆர்வ‌மும் அதிக‌முள்ள‌ ந‌ப‌ர்க‌ளுக்கு அது ப‌ற்றி மாநாட்டில் விள‌க்க‌ கொஞ்ச‌ம் நேர‌ம் ஒதுக்க‌லாம். (சில‌ர் ந‌ன்கு ப‌டித்து ப‌ல‌ திற‌மைக‌ளை த‌ன் கை (மூளை) வ‌ச‌ம் வைத்திருந்தும் த‌ன் உட‌ல் ந‌ல‌ம் பேணாத‌தால் அவ‌ர்க‌ளுக்கு வ‌ந்த‌ ந‌ல்ல‌ ப‌ல‌ அறிய‌ வாய்ப்புக‌ள் அவ‌ர்க‌ளை விட்டு ந‌ழுகிச்செல்ல‌ நேரிட‌லாம்). அத‌ற்காக‌வும் ஒரு விழிப்புண‌ர்வு வேண்டும் அல்ல‌வா?

"ச்சே எங்க‌ வாப்பா, உம்மா, காக்காமாரு எவ்ளோ கிளிப்புள்ளெக்கி சொல்ற‌மாதிரி ந‌ல்லா ப‌டி, ந‌ல்லா ப‌டி என்று ப‌டிச்சி,ப‌டிச்சி சொல்லியும், அத‌ற்காக‌ அவ‌ர்க‌ள் எவ்ளோ செல‌வு ப‌ண்ண‌ த‌யாராக‌ இருந்தும், மொபைல் போன், பைக் எல்லாம் வாங்கிக்கொடுத்தும் இந்த‌ பாழாப்போன‌ ப‌ய‌லுவொலோடெ சேந்துக்கிட்டு ப‌டிப்புளெ க‌வ‌ன‌ம் செலுத்தாமெ அரெகொறையா ப‌டிச்சிட்டு இங்கு வ‌ந்து எவ்ளோ க‌ஷ்ட‌ப்ப‌ட‌னுமா ஈக்கிதுடா பாத்தியா மாப்ளே" என்று எதிர்கால‌த்தில் ந‌ம் இன்றைய‌ இளைய‌ த‌லைமுறையின‌ர் யாரும் எங்கும் வ‌ருத்த‌ப்ப‌ட்டு க‌ண்ணாலோ அல்ல‌து உள்ள‌த்தாலோ வ‌ருந்தி க‌ண்ணீர் வ‌டிக்க‌க்கூடாது இல்லையா? இன்ஷா அல்லாஹ் அதுக்குத்தான் இவ்ளோ ஏற்பாடெல்லாம் ந‌ம் அதிரை நிருப‌ர் மூல‌மாக‌ ம‌ற்ற மேம்பாட்டு அமைப்புக‌ளுட‌ன் செஞ்சிக்கிட்டு ஈக்கிறாங்கெ....மாஷா அல்லாஹ்....

இம்மாநாடு வெற்றி பெற‌ எம் வாழ்த்துக்க‌ளும், து'ஆவும் என்றும் ந‌ம் அனைவ‌ர்க‌ளுக்காக‌வும் உண்டு.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
சகோ ஜாகிர் சொல்வது போல் சின்ன விதை செடியாக வளர்ந்திருக்கிறது நாம் அனைவரும் ஒற்றுமைய்க நின்று இதை பெரிய மரமாக வளர்க்க செயல் பட வேண்டும்.

Adirai Media said...

இந்த மா நாட்டினை நேரடி ஒளிப்பரப்பு செய்தால் வெளி நாடு வாழ் அதிரைவாசிகள் கண்டுகளிக்க வாய்ப்பாக அமையும் செய்யுமா அதிரை நிருபர்?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

எதிர்காலக் கல்வியின் அவசியத்தை விளக்குவதோடு மறுமைக் கல்வியையும் விளக்குவது மிகவும் அவசியம்.ஈமானுடன் கூடிய பெரும்பதவிகளும் அவசியம். இன்ஷா அல்லாஹ் இதன் நற் பலனை சில வருடங்களில் சந்திக்கலாம்.

Unknown said...

"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன..."புஹாரி :6689 உமர் இப்னு அல்கத்தாப் (ரலி).


நேற்று...

"அன்று கேட்கப்பட்டது !
லட்சியம்தான் என்ன?

அன்றே சொன்னது !
கல்வி மேம்பாடு உயர்கல்வி வழிகாட்டிடுவோம் !"
நன்றி: அபுஇபுறாஹிம் காக்கா(அதிரை நிருபர் குழு)

இன்று...

ஜனவரி 14, 15 தேதிகளில் நடைபெரும் கல்வி விழிப்புணர்வு மாநாடு.

நாளை...

"இது இன்ஷா அல்லாஹ் விருட்சமாகும். ஊருக்கே பயனாக இருக்கும்"
நன்றி: ஜாஹிர் ஹுஸைன் காக்கா

இன்ஷா அல்லாஹ் மாநாடு வெற்றி பெரும்.
இலக்கு மீது நம்பிக்கைதான் முதல் வெற்றி...

crown said...

எண்ணுக,எண்ணியவை செயல் புரிய வகை செய்க,செய்வற்கு இடர் வரும் ,இடர்தனை உடைத்திடுக,இடரே இடரி விழ ,இனி மாபெரும் லட்சியந்தின் பெருவிழா!வரும் காலம் இனி ஒளிரும் அதிரையும் அந்தன் சுற்றமும்.வாழ்துக்கள்.இந்த அறிய விழாவில் கலந்து கொள்ள ஊர் சென்றுள்ள அபுஇபுறாகிம் காக்காவின் சிந்தைனைக்கு அல்லாஹ் நல் அருள் புரியட்டும்.

ஜலீல் நெய்னா said...

அல்ஹம்துலில்லாஹ்..
நீன்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொன்டிருந்த நிகழ்ச்சி நிரலும் வந்து விட்டது இக்கடின உழைப்பிற்கு நிச்சயம் இதன் கூலி அல்லாஹ்வினிடத்தில் உண்டு.
இனி இத்தோடு அல்லாமல் வீடு வீடாக சென்று விபரத்தை சொல்லி அழைப்பு கொடுத்து பெற்றோர்களையும் மானவர்களையும் கொன்டுவந்து சேர்க்கவேண்டும்
அப்பொழுதுதான் இப்பனிக்கான திருப்தி ஏற்படும்.

அதிரைநிருபர் said...

// அதிரை புதியவன் சொன்னது… இந்த மாநாட்டினை நேரடி ஒளிப்பரப்பு செய்தால் வெளி நாடு வாழ் அதிரைவாசிகள் கண்டுகளிக்க வாய்ப்பாக அமையும் செய்யுமா அதிரை நிருபர்?//

அஸ்ஸலாமு அலைக்கும்,

நிச்சயம் கல்வி விழிப்புணர்வு மாநாட்டுக்கான நேரடி ஒளிபரப்பு வேலைகள் நடைப்பெற்று வருகிறது, இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ் காத்திருங்கள்...

தொடர்ந்து இணைந்திருங்கள்.....

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு