Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label அஜீஸ். Show all posts
Showing posts with label அஜீஸ். Show all posts

அதிரை அ.தி.மு.க.வின் தன்னம்பிக்கை ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | November 02, 2011 | , , ,

பேருராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவியால் அதிரைக்கு ஆளும் அதிமுக கட்சியின் நலத்திட்டங்கள் தொடர கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு இதனைக் கொண்டு அதிரைக்கு எல்லா வகையிலும் நல்லதைச் செய்ய முனைவோம் என்று அதிமுக பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு இரண்டாம் இடத்தை பெற்ற அதிரை அப்துல் அஜீஸ் அவர்கள் அதிரைநிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், மேலிட ஆட்சியாளர்களை உடனடியாகவும் நேரடியாகவும் நெருங்கிட ஆளும் கட்சியின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை தாமதாக அதிரை மக்கள் உணர்ந்தாலும் அந்த நம்பிக்கையை என்றும் காப்பாற்றுவோம், தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் பிச்சை அவர்கள் மக்களோடு மக்களாக இருப்பவர் பேதம் காணாதவர், நல்லவர், எல்லா நேரத்திலும் அவரோடு உறவாடலாம் மக்களின் நண்பனாக இருப்பார் என்றும் உறுதியளித்தார்.


அதிரை அஜீஸ் மேலும் கூறுகையில் நான் வெற்றி பெற்றிருந்தால் மேலிடத்தை நெருங்குவதிலும் நேரடியாக ஈடுபடவும் வாய்ப்புகள் அதிகம் கிடைத்திருக்கும் அதனை தக்க முறையில் பயன்படுத்தியிருப்போம், அதற்காக பிச்சை அவர்களால் செய்ய முடியாதது அல்ல அவரும் அதிரை மக்களுக்காக போராடி அனைத்து நலத்திட்டங்களையும் முறையே கிடைத்திட ஆவண செய்வார் என்றும் சொன்னார்.

பாதாளச் சாக்கடைத் திட்டம் அறிவித்தபடி முறையே அதிரைக்கு வந்திட தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுக்க முயற்சிக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆதரவு அளித்த வாக்காளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அவர்களின் வார்டுகள் சார்பாக வைத்த கோரிக்கைகளையும் முறையே செய்து கொடுக்க எல்லா வகையான ஒத்துழைப்பும் வழங்குவோம் என்றும் கூறினார்.

மேலும் கூறுகையில் அதிரை அஜீஸ் அவர்கள் அதிரை அதிமுக நிர்வாக பொறுப்பிற்குள் வருவதற்கு வாய்ப்புகள் கூடி வந்தாலும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் எவ்வகை முடிவுக்கும் நாங்கள் ஒத்துழைப்போம் என்றும் தெரிவித்தார்.



- அதிரைநிருபர் குழு


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு