பாரம்பரியம், குலப் பெருமை பேசுவதில் இன்னும் அப்படியேதான் இருக்கிறோமா? அல்லது நம்மிடையே அந்தச் சூழல்களிருந்து வெளியேறி இன்றைய கால ஓட்டத்திற்கு ஏற்றார்போல் மாறிக் கொண்டிருக்கிறோமா? என்று ஆராய்வதற்கு முன்னர், அதிரையில் ஊர் கட்டுப்பாடுகள் அங்கொன்றும் இங்கொன்றும் சில மற்றும் தெருக் கட்டுப்பாடுகள் என்று ஆங்காங்கே இருப்பதை யாவரும் அறிந்ததே.
சரி, விஷயத்திற்கு வருவோம்...
உங்கள் பார்வையில் முஹல்லா சங்கங்கங்கள், தெரு சங்கங்கள் இன்றைய நிலையில் எவ்வாறு இருக்கிறது, அவற்றின் பங்களிப்பு அந்த சங்கங்களைச் சார்ந்த அல்லது கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதிகளில் எப்படி உள்ளது !?
நீங்கள் சார்ந்திருக்கும் தெரு அல்லது முஹல்லா சங்கங்கள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், அதன் நிர்வாகங்கள் இன்றைய சூழலில் எவ்வகை பங்கை சமுதாயத்திற்கு நிலைநிறுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?
வாருங்களேன்... விவாதிக்கலாம்....!
வழக்கமாக சொல்வதுதான், வரம்பு மீறல்கள், தனிமனித சாடல்கள் இன்றி உண்மையை உரக்கச் சொல்லுங்கள் ஆனால் உணர்வுகளோடு மல்லுக்கட்டடாமல் நிதானமாக கருத்துக்களை பதியுங்கள். வரம்பு மீறல், தனிமனித சாடல் இருப்பின் உடணடியாக நெறியாளுமைக்கு உட்படுத்தப்படும்.
அதிரைநிருபர் பதிப்பகம்