தமிழ் இலக்கணங்கள் படிக்கும் காலங்களில் தலைக்கனமாக இருந்தபோது இல்லாத ஆர்வம், இன்றைய இணைய வலைவீச்சில் சிக்கிய நம்மவர்களில் பெரும்பாலோருக்கு எழுதத் தூண்டும் வேட்கை எழுந்தது வியப்பே.
இதற்கு தடையற்ற இணையம் மட்டுமல்ல, தட்டுத் தடுமாறி தட்டினாலும் அழகு தமிழை தட்டச்சுக் கோர்வையாக காண எழுத்துருக்களை கண்டெடுத்து கொடுத்த கொடையாளிகளின் பெருந்தன்மையும் அவர்களின் தன்னலமற்ற சேவையுமே இப்படி நம்மை எழுதவும் வாசிக்கவும் வைத்திருக்கிறது.
ஏனிந்த பீடிகை என்று யோசனையில் ஆழ்ந்திட வேண்டாம்...
கவிதையானாலும், கட்டுரையானாலும், வாழ்வியல் நெறியானாலும் அதனை எழுத்தில் கொண்டுவருவதில் அதிரையர்களின் ஆர்வமும் அவர்களின் பங்கும் அதிகமே. அப்படியென்றால் அவ்வாறான திறன் கொண்ட சகோதரார்களிடையே இரண்டு புகப்படங்களை கொடுத்து அதனைக் கண்டதும் அல்லது ரசித்ததும் என்ன தோன்றியது என்ன சொல்ல எத்தனிக்கிறீர்கள் என்று கேட்டு வைக்கலாமே என்ற தைரியத்தில்தான் இங்கே அதனை பதிந்திருக்கிறோம்.
இனி உங்கள் பாடு, கவிதையானாலும், கலக்கல் வரிக் கோர்வையானாலும், நகைச்சுவையின் நெடி தூக்கலாக இருந்தாலும், சாரலின் வருடலாக இருப்பினும் எதுவாக இருந்தாலும் வரம்புக்குள் வேலியடைத்து உங்களின் எழுத்தாற்றலை பின்னூட்டங்களாக பின்னியெடுங்களேன்...
வண்டுக்கு சொல்லித்தான் கொடுக்கனுமா தேன் எங்கிருக்கிறது என்று !?
நெறியாளர்
புகைப்பட கலைஞர் : Sஹமீது
புகைப்பட கலைஞர் : Sஹமீது