Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label மூளை. Show all posts
Showing posts with label மூளை. Show all posts

மூளை - இருக்கிறதே ! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | February 11, 2013 | , ,


அதிரைக்கும் ஆட்டு மூளைக்கும் ஆதிகாலத்து உறவுன்னு நான் சொல்லவில்லை என்றால், சும்மாவா இருந்துடுவீங்க ? ஆட்டு மூளை வறுவல், பொரியல், பெரட்டல், ஆட்டு மூளை ஆம்புலேட், மூளை  சூப் கடைகளை நமது ஊரில் மூலைக்கு மூலை  பார்த்த நாம் இப்போ சற்று வித்தியாசமாக!!! மனித மூளையை பற்றி பார்ப்போம்.

கழுவிப் போடும் ஒரு சட்டை உலர்வதற்கு பத்து நிமிஷம், ஆனால் பத்துப் சட்டை உலர்த்த எத்தனை நிமிஷம் ஆகும் என்பது போன்ற கணக்குகள் போடுவதும். தாளிப்பு வாசத்தை வைத்து அது இறைச்சி ஆணம், கோழி ஆணம்  என்று சொல்வது,  இவை அனைத்துக்கும் மூலக் காரணம்   அந்த  இரண்டு எழுத்து சொல்லான ‘மூளை’தான்  இப்படி   எல்லாம் அதிரைநிருபரில் எழுத சொல்வதும் அதே வகை  மூளைதான்.

பல ஆயிரம் வருஷமா  நமக்கு இருப்பது ஒரே  சைஸ் மூளைதான். இதைக் கொண்டு குதிரையை பிடித்து, பழகி அதன் மீது சவாரி செய்தோம் (இப்போ குதிரை வண்டியை கண்ணு மாசிக்கும் காணோம்). வண்டிகளுக்கு இரண்டு / நான்கு சக்கரங்கள் கண்டு பிடித்ததும் அதே மூளைதான். அதற்கு அடுத்து ஆடுகளை பழக்கினோம் அப்படியே அதனைக் கூட ஆட்டைய போடுவற்கும் பழகினோம். மாடுகளைப் பழக்கினோம், மாட்டுக் கறிக்கும் விற்பதற்கும் மசாலா தடவுவதையும் பார்த்தோம் இவை அனைத்தையும் செய்வது அதே மனித மூளைதான்.

திறந்து  பார்த்தால் ஒண்ணரை கிலோ எடை கொண்ட இந்த மூளைதான் இத்தனை வேலைகளையும் செய்கின்றது. இது மனிதனின் மிக முக்கியமான  உருப்படி. மூளையைப் பாதுகாக்கவே இறைவன் மிக நேர்த்தியாக மண்டை ஓடு படைத்து அதன் உள்ளே இந்த மூளையை மிக  பாதுகாப்பாக வைத்துள்ளான் (சுப்ஹானல்லாஹ்!).

ஆரம்பத்தில் மனிதன்  நம்பவில்லை.மூளைதான் இத்தனை காரியங்களையும் செய்கின்றது என்று, அரிஸ்டாட்டில் சொன்னார்  "இதயத்தில்தான் இருக்கிறது அனைத்து விசயங்களும் ‘மூளை’ - சும்மா ரத்தத்தைக் குளிர வைக்க மட்டுமே” என்றார். அந்த காலத்தில் (அப்போ  அந்த அளவுக்குத்தான் (அவர்களுக்கு) மூளை வேலை செய்துள்ளது).

இன்னும் சொல்லப் போனால் இந்த காலத்திலும் மூளையைப் பற்றிய முழு அறிவு  நமக்கு இல்லை.தற்போது  நவீன மருத்துவம், கம்ப்யூட்டர் (எல்லாத்துக்கும் இப்போ கம்ப்யூட்டர் தேவையா போய்விட்டது) உதவியுடன் நிறையவே தெரிந்து கொண்டுவருகிறோம். ஆனால், இன்னும் ஏராளமாக பாக்கி  இருக்கு என்பதையும் மறுக்க முடியாது.

உலகிலேயே மிக  அதிசயம் என்றால் அது   மனித மூளைதான் (அப்போ அந்த ஏழு அதிசயத்தில் இந்த மூளை கணக்கில் வரதா? ) அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள் உள்ளன. இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு தனித்தனியாக இருக்கிறது. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடமாட்டம் (பவர் கட்  இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்)  நம் சிந்தனை! மனிதன்  உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் இருந்து கொண்டே இருக்கும் (வட மாநிலங்களில் இருந்தெல்லாம் மின்சாரம் வாங்க வேண்டிய அவசியம் கிடையாது).

இப்போ உள்ள கம்ப்யூட்டருடன் ஒப்பிட்டால் நம்ம மூளை ரொம்பவே  நிதானம். கம்ப்யூட்டருக்கு இதுகொடுவா மீன் ஆணம், இது கத்தரிக்காய் போட்ட கனவா பெரட்டல், என்றெல்லாம் கண்டு பிடிக்க முடியாது. இவை எல்லாவற்றையும் விட இதற்கு மனைவி, மக்கள் கிடையாது. குறிப்பாக பாஸ்போர்ட் கிடையாது (பாஸ் வோர்ட் இருக்கு). இந்த மூளை எப்படியான ஆச்சரியம் என்பதை  அறிந்து கொள்வதற்கு முன் மூளையின் மேல் அமைப்பு, அதன் சைஸ் இவற்றைத்ப் பற்றி கொஞ்சம்  தெரிந்து கொள்வோம்.

ஒரு மனிதனுக்கு சராசரி மூளை சுமார் ஒண்ணரை கிலோ எடை இருக்கிறது மூளை அளவுகளில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபடுகிறது (இங்கையே பிரச்னைகள் தொடங்குகிறது) பெண்களுக்கு மூளை கொஞ்சம் குறைவு இதை கேட்டதும் பெண்கள் கோபித்துக் கொள்ள கூடாது குறைவு என்பது அளவில் மட்டும்தான் அறிவில் அல்ல ஆனால், சைசுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகச் சொன்னால்  அது அறிவு பூர்வமான தகவலே அல்ல.

தனிப்பட்ட மூளை கனத்துக்கும், புத்திசாலித்தனத்துக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது  ஆனால்  மூளை அளவுக்கும்  உடல் அளவுக்கும்   உள்ள உறவு மிக முக்கியம். உயரமான ஆசாமிகள் மூளை கனமாக இருக்கலாம். (தலைகனம்தான் கேள்விபட்டுள்ளோம் மூளைக்கனம் இப்போதான் விளங்குது). ஆனால், குள்ளமானவர்களின் மூளை எடை குறைவாக இருந்தாலும், உடல் எடையோடு ஒப்பிடும்போது அதே விகிதம் அல்லது அதிக விகிதம் இருப்பதால் குள்ளமானவர்கள் புத்திசாலிகளாகவும் இருக்கலாம். இதனால்தான் நம்ம ஊரில் உயரம் குறைவானவர்களுக்கு நிரந்தரமாக ஒரு பழமொழி அது நம்ம ஆளுங்க வைத்ததார்களோ !??

மூளை, ஸ்பைனல் கார்டு என்னும் முதுகுத் தண்டிலிருந்து முளைக்கிறது. ஒருவாறு முட்டைக்கோஸ் தண்டிலிருந்து மடிப்பு மடிப்பாக இலைகள் வளர்வதுபோல வளர்கின்றது இதை மூன்று பாகங்களாக மேம்போக்காகப் பிரிக்கிறார்கள். முன் மூளை, நடுமூளை, பின் மூளை. முன் மூளை என்பது ஸெரிப்ரல் ஹெமிஸ்ஃபியர் என்று இரண்டு பாதிகளாக இருக்கிறது. நடு மூளை என்பது கீழே இருந்து வரும் தண்டின் மேல்பகுதி. பின் மூளை என்பது நடுமூளையின் கீழ் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் மிச்ச சொச்ச. ஐட்டங்களை உள் அடக்கியது.

முன் மூளையில் இரட்டை இரட்டையாக தலாமஸ், ஹைப்போதலாமஸ், பேஸல் காங்லியா, மூக்கு - கண் இவற்றின் முடிவுகள் போன்றவை உள்ளன. (என்ன முடிவு அங்கே இருந்தாலும் முதலில் இது போன்ற வாயில் நுழையாமல் பெயர் வைப்பதற்கு ஒரு முடிவு கட்டணும்)

பின் மூளையில் ஸெரிபெல்லம், மெடுலா, ஒப்ளாங்கட்டா (கொஞ்சம் நிதானமா படிங்க இல்லாட்டி முன் மூளை நிதானம் இழந்துவிடும்) இந்தப் பெயர்களைப் பார்த்துப் பயப்படாதீர்கள். ஒவ்வொன்றையும் தனித்தனியா பிரித்து சூப் போட்டுருவோம்.

முதலில் ஸெரிப்ரம் என்பதை மட்டும் மேலாக லேசா  நோண்டி பார்ப்போம். முன் மூளையில் மடிப்பு மடிப்பாக மூளையின் நரம்பு அமைப்பில் முக்கால் பாகம் ஆக்கிரமிக்கும் இந்தப் பகுதிதான் நம் புத்திசாலித்தனத்துக்கு எல்லாம் காரணம். இந்த மடிப்புகளில் ஏதாவது அர்த்தம், காரணம் அல்லது ஒழுங்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இந்த மடிப்புகளால் உள்ளே அடைத்து வைக்கக்கூடிய பகுதியின் பரப்பு அதிகமாகிறது என்னவோ உண்மை.

இந்த மடிப்புகளில் சில, நம் எல்லோருக்கும் இருக்கிறது. மூளை ஆதி நாட்களிலிருந்து வளர்ந்த விதத்துக்குத் தகுந்தபடி இந்த மடிப்புகளின் வடிவம் இருக்கிறது. இந்த மடிப்புகளினால் இந்தப் பகுதியை இரண்டு பாதியாகவும், அவ்விரண்டு பாதிகளை நான்கு சுளைகளாகவும்(பலாப்பழம் ரேஞ்சுக்கு பிரிக்கிறாங்க) பிரிக்க முடிகிறது. இந்த முயற்சியெல்லாம் நம் வசதிக்காக, மூளையின் எல்லா இடங்களுக்கும் பெயர் கொடுத்து அவற்றை அடையாளம் கண்டுகொள்ளத்தான். ஆனால், இன்ன இடத்தில் இன்னது நடக்கிறது என்று திட்டவட்டமாக இன்னும் சொல்ல முடியவில்லை.

இந்த இரட்டைப் பகுதியைக் குறுக்கே வெட்டினால் (ஆள் காலி என்பது நிச்சயம்) ஒரு ஆச்சரியம் தெரிகிறது. மேலாக கார்ட்டெக்ஸ் என்று ஒரு சுமார் நாலரை மில்லி மீட்டர் போர்வை அல்லது மரத்துக்கு மேல்பட்டை போலிருக்கும் பகுதியில் கசகசவென்று எண்ணூறு கோடி நரம்புச் செல்கள் உள்ளன (அதையும் விட்டு வைக்கவில்லை எண்ணி பார்த்துட்டங்க). அவற்றுக்கு இடையே உள்ள இணைப்பைப் பார்த்தால் தான் பிரமிப்பு! ஒரு கன இன்ஞ்சுக்குள் சுமார் 16,000 கிலோ மீட்டர் நுட்பச் சரடுகள் உள்ளன. சிந்தனை சம்பந்தப்பட்ட அத்தனை காரியங்களும் கார்ட்டெக்ஸ் பகுதியில் நிகழ்வதால் இத்தனை அடர்த்தி மிகுந்த பகுதியான இடமா இது இருக்கு.

நம் மண்டைக்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தபோது கார்ட்டெக்ஸ் என்னும் மேல்பட்டையிலேயே கால் இன்ஞ்சுக்கும் குறைவான ஆழத்தில் 800 கோடி நரம்புச் செல்களும், 16,000 கிலோ மீட்டர் நரம்பு நூல்களும்  அதில் பின்னி பிணைந்துள்ளது இன்னும் கொஞ்சம் வெட்டிப் பார்ப்போம். இத்தனை சிக்கல் இந்த மேற்பரப்பில் எதற்காக எனில், இங்கேதான் தலைமைச் செயலகம் (அது சென்னையில் அல்லவா இருக்கு) இயங்குகிறது. இங்கேதான், கடைசி அலசல் மூலம் பார்க்கிறோம்... கேட்கிறோம்... சிந்திக்கின்றோம்... கவிதை எழுதுகின்றோம், படிக்கட்டுகள் கட்டு(எழுது)கின்றோம், வரைகிறோம், பாடுகிறோம், பேசும்படத்தை பேசவைக்கிறோம், பொருளாதார கட்டுரைகள் இவை அனைத்தும் இங்குதான் உதிக்கின்றன.

இந்த மெல்லிய மேல்பட்டையைக் குறுக்கே வெட்டினால் ஆறு வரிசை தெரிகிறது. இந்த கார்ட்டெக்ஸ் பகுதியைத்தான் பழுப்பு சமாசாரம் என்று சொல்கிறார்கள். இதற்குக் கீழே போனால் நிறைய வெள்ளைப் பகுதி தெரிகிறது. இங்கே கோடிக்கணக்கான நரம்பு நூல்கள் அதி சிக்கலாகத் தென்படுகின்றன. இதிலே மூன்று வகை கனெக்ஷன் மட்டும்தான் சொல்ல  முடிகிறது. கொஞ்சங்க் கொஞ்சம் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் போல லோக்கல் இணைப்பு. மையத் தண்டுக்கு இணைப்பு, மூளையின் இடது, வலது பாதியை இணைக்கும் கார்ப்பஸ் கலாஸ்ஸம் என்னும் நரம்புக் கயிறு. நாலு இன்ஞ்ச் நீளமிருக்கும் இந்தப் பாலம் விசித்திரமானது.

குழந்தை பிறந்தவுடன் அதன் மூளையின் மொழி சம்பந்தப்பட்ட பகுதிகளின் நியூரான் இணைப்பு அதிகமாக அடர்த்தியில்லாமல் இருக்கின்றது மேலும் மூளையில் எந்தவித மடிப்புக்களும் இல்லாமல் இருக்கின்றது வயது ஆக ஆக மூளையில் சமாச்சாரங்கள் ஏற ஏற மடிப்புக்கள் விளங்க ஆரம்பிக்கின்றது 

புத்திசாலித்தனம், அறிவு என்பதெல்லாம் இந்த நியூரான் இணைப்புகளின் சிக்கலில் இருக்கலாம் என்று மூளை சம்பந்தாட்ட ஆராய்ச்சியாளர்கள்   கருதுகின்றார்கள்.

வலது இடது பாதி மூளைகளுக்கு இடையேயுள்ள கார்ப்பஸ் கலாஸ்ஸம் இணைப்பை வெட்டிப் பார்த்தார்கள். ஒரு ஆசாமிக்கு (தினத்தந்தி செய்தியில் வரும் ஆசாமி அல்ல) கை  கால்  வலிப்பு அதிகமாகி, கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் போக, ஒரு கடைசி முயற்சியாக அதை வெட்டிவிட்டார்கள். அந்த ஆசாமிக்கு குணமாகியது. ஆனால், சுபாவத்தில் விநோதமான மாறுதல்கள் ஏற்பட்டன. நல்ல குணம் போய் கெட்ட குணங்கள் வந்தன இது போன்ற ஆராய்சிகள் எதை காட்டுகின்றது என்றால் இறைவன் படைப்பில் மனிதன் குறுக்கிட்டால் அது பல விபரிதங்களை சந்திக்க வேண்டி வரும் என்பதை மனிதர்களுக்கு உணர்த்துகின்றது.

Sஹமீது

மானிடம் 23

அதிரைநிருபர் பதிப்பகம் | January 24, 2012 | , , ,

மறைந்து கொண்டிருக்கும் மனிதத்தன்மைகள் என்ற அருமையான பதிவைக் கண்டதும் அதிரைநிருபரில் சென்றவருடம் ஜனவரி 26 அன்று சிறகு வரிகளால் வருடும் மென்மைக் கவிதை வடிக்கும் சகோதரர் அப்துல் ரஹ்மான் எழுதிய கவிதையை நினைவூட்டலாக இங்கே மீள்பதிவு செய்கிறோம்...
- அதிரைநிருபர் குழு

சுட்டெரிக்கும் கோடையில்
போகும் பாதையில்
ஒரு குழாயடி
சந்தோசம்....
உடல் வியர்க்கிறது
மூளை குளிக்கச்சொல்லுகிறது
குளிக்கமட்டுமே சொல்கிறது
மனமோ குளித்தால் தண்ணீர்
போகும் பாதையை பாத்திகட்டி
அருகில் உள்ள செடிகளுக்கு
வழியமைத்து குளிக்கச்சொல்லுகிறது .......

வழிதவறிய காட்டில்
ஒரு மாமரம் ..
மூளை மாங்காயைப் பறித்து
பசியாற சொல்கிறது
பசியாற மட்டுமே சொல்கிறது
மனமோ பசியாறிவிட்டு
சிறிது தொலைவில் மாங்கொட்டையை
மண்ணில் புதைக்கச்சொல்லுகிறது
மீண்டும் ஒரு மரம் வளர .........

அவசரமாக நடக்கையில்
பாதையில் வாழைப்பழத் தோல்
கண்ணில் படுகிறது ..
மூளை அதை ஓராமாக காலால் தள்ளிவிடச்சொல்லுகிறது
காலால் தள்ளிவிட மட்டுமே சொல்லுகிறது
மனமோ அதை கையில் எடுத்து
எதிரே வரும் ஆட்டிற்கோ ,மாட்டிற்கோ
கொடுக்கச்சொல்லுகிறது ....

வீட்டின் வாயிற்படியில்
ஒரு யாசகன் ...
மூளை சில்லறையை கொடுக்கச்சொல்லுகிறது
சில்லறையை மட்டுமே கொடுக்கச்சொல்லுகிறது
மனமோ யாசகனை உள்ளே அழைத்து
சுத்தம் செய்ய தண்ணீர் கொடுத்து
உணவு பரிமாறி வழியனுப்ப சொல்லுகிறது ....

முன்பெல்லாம் மூளையோடு
மனதும் சரிவர இணைந்து இருந்தது
இப்போ
மனதை தொலைத்து விட்டு
மூளையோடு மட்டும்
அப்படி எங்குதான்
தொலைகிறது இந்த மானிடம் ?

-அப்துல் ரஹ்மான்
-harmys

மானிடம் 14

அதிரைநிருபர் | January 26, 2011 | , , ,

சுட்டெரிக்கும் கோடையில்
போகும் பாதையில்
ஒரு குழாயடி
சந்தோசம்....
உடல் வியர்க்கிறது
மூளை குளிக்கச்சொல்லுகிறது
குளிக்கமட்டுமே சொல்கிறது
மனமோ குளித்தால் தண்ணீர்
போகும் பாதையை பாத்திகட்டி
அருகில் உள்ள செடிகளுக்கு
வழியமைத்து குளிக்கச்சொல்லுகிறது .......

வழிதவறிய காட்டில்
ஒரு மாமரம் ..
மூளை மாங்காயைப் பறித்து
பசியாற சொல்கிறது
பசியாற மட்டுமே சொல்கிறது
மனமோ பசியாறிவிட்டு
சிறிது தொலைவில் மாங்கொட்டையை
மண்ணில் புதைக்கச்சொல்லுகிறது
மீண்டும் ஒரு மரம் வளர .........

அவசரமாக நடக்கையில்
பாதையில் வாழைப்பழத் தோல்
கண்ணில் படுகிறது ..
மூளை அதை ஓராமாக காலால் தள்ளிவிடச்சொல்லுகிறது
காலால் தள்ளிவிட மட்டுமே சொல்லுகிறது
மனமோ அதை கையில் எடுத்து
எதிரே வரும் ஆட்டிற்கோ ,மாட்டிற்கோ
கொடுக்கச்சொல்லுகிறது ....

வீட்டின் வாயிற்படியில்
ஒரு யாசகன் ...
மூளை சில்லறையை கொடுக்கச்சொல்லுகிறது
சில்லறையை மட்டுமே கொடுக்கச்சொல்லுகிறது
மனமோ யாசகனை உள்ளே அழைத்து
சுத்தம் செய்ய தண்ணீர் கொடுத்து
உணவு பரிமாறி வழியனுப்ப சொல்லுகிறது ....

முன்பெல்லாம் மூளையோடு
மனதும் சரிவர இணைந்து இருந்தது
இப்போ
மனதை தொலைத்து விட்டு
மூளையோடு மட்டும்
அப்படி எங்குதான்
தொலைகிறது இந்த மானிடம் ?

---அப்துல் ரஹ்மான்
----harmys


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு