H.G.wells ஆங்கில எழுத்துலகில் விஞ்ஞானக் கற்பனைக் கதைககள் எழுதியவர்களில் இவரும் ஒருவர். இவரின் Time Machine, wars of the World, Food of the Gods, Invisible Man ஆகியவை ஆங்கில இலக்கிய பீடத்தை அலங்கரித்த ஆபரணங்களில் அடங்கும். Outline of History என்னும் வரலாற்று நூல் ஒன்றும் இவருடைய கை வண்ணம் பட்டு பிறந்தது. இவர்எழுதிய பலபுத்தகங்கள் பள்ளி பாடநூல் வரிசையில் இடம் பிடித்தன.H.G.wellsஎழுதிய Outline of History யில் பலநூறு ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்து இஸ்லாமீயர்கள் பாய்மரக் கப்பலில் எகிப்து நாட்டுக்கு சென்று அங்கு பல ஆண்டுகள் வாழ்ந்த வந்ததாகவும் பின் அந்நாட்டை ஆண்ட மன்னனின் கொடிய ஆட்சிக்கு பயந்து மீண்டும் பாய்மரக் கப்பலிலேயே அதிராம்பட்டினம் திரும்பிய வரலாறு குறிப்பு இருப்பதாக http://adiraihistory.blogspot.ae/2010/09/blog-post_29.html என்ற வலைப்பூவில் சகோதரர் ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் எழுதிய 'ஒரு பட்டினத்தின் கதை' புத்தகத்திலிருந்து பதிந்திருந்தார்கள்.
Allex Halley என்பவர் எழுதிய The Roots என்ற ஆங்கில மொழி புத்தகத்தை "வேர்கள்" என்ற பெயரில் இவர் மொழியாக்கம் செய்து வெளியிட்டு இருப்பதாகவும் படித்த நினைவு. அந்த வலைத்தளமும் அதிராம்பட்டினம் சார்ந்ததாகவே இருந்தது.
Carl Jung [1875-1911] சுவீடன் நாட்டுக்காரர். இவர் ஒரு மனோவியல் ஆய்வாளர் Sigmand Freud “குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்” என்று சொன்ன ஆசாமி இவர்தான். இவரோடு கூட்டாக கொஞ்ச நாள் ஆய்வு நடத்திய பின் Freud-டின் கருத்துக்களில் உடண்பாடு கொள்ளாமல் விலகி தனியாக மனோவியல் ஆய்வை தொடங்கினார். அதன் விளைவு Psychology of Unconscious‘’ சுய உணர்வு இழந்த மனோநிலை’’ என்ற ஒரு புத்தகம் எழுதினார். அதில் தன் ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். இது மனோவியல் துறையில் ஒரு வேத நூலாக கருதப்படுகிறது.
George Bernard Shaw [1856-1950] இவர் ஒரு பழுத்த சோஷலிச வாதி. Fabian Party ஆதரவாளர். 'அறிஞர் பெர்னாட்ஷா’ என்றே எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் பிரிட்டனில் பிறந்த இவர் ஒரு சித்தாந்தவாதி, எழுத்தாளர். 'Arms and the Man', 'The Devil’s Disciple', 'Candida, Caesar and Cleopatra', 'The Apple cart' நாடகங்களை எழுதி புகழ் பெற்றவர். இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1925லும் ஆஸ்கார் விருது 1938லும் பெற்றார். இந்த இரண்டு விருதுகளையும் பெற்ற ஒரே ஒரு நபர் அறிஞர் பெர்னாட்ஷா மட்டுமே! இவருடைய நாடகங்கள் கதைகள், கட்டுரைகளில் சமுதாய சீர்திருத்த கருத்துகள் மேலோங்கி நிற்கும், இவர் சமூக சீர்திருத்த சிந்தனை கொண்டவர்.
1950-ஆம் ஆண்டு இவர் உலக வாழ்விலிருந்து விடை பெற்றுச் சென்றார். "அவர் கைபட்டு மை தொட்டு எழுதிய "பேனா" என்னை கைவிட்டு போனானே என் காதலன்!’’ என்று கண்ணீர் விட்டு கதறி அழுதது. உலகில் மனிதன் பிறந்த நாள் முதல் மறைந்த நாள் வரையிலான நாட்களை விரல் விட்டு எண்ணி சரித்திரம் அவனுக்கு இடம் கொடுப்பதில்லை. உலகில்அவன் ’செய்த சாதனை என்ன?’’ என்ற கேள்விக்கு கிடைக்கும் விடையை ஆரஅமர எடை போட்டு பார்த்த பின்தான், சரித்திரக் கோட்டை கதவுகள் திறக்கும். சாதனையாளர்களை தவிர வேறு யாரையும் அது அனுமதிப்பதில்லை. அந்தக் கோட்டையின் கதவுகள் பெர்னாட்ஷாவுக்கு திறந்தே இருந்தது.
பிரபல திரைப்பட நடிகை எலிசபெத் டைலர் பெர்னாட்ஷாவை ஒரு பார்ட்டியில் சந்தித்தபோது.
"மிஸ்டர் பெர்னாட்ஷா! நீங்கள் ஒரு அறிவாளி! நான் ஒரு பேரழகி. நீங்களும் நானும் கல்யாணம் செய்து கொண்டால் நமக்கு பிறக்கும் பிள்ளை உங்களைப் போல் அறிவும் என்னைப் போல் அழகும் உடையதாய்இருக்கும்அல்லவா? ஆதலால் நாம் ஏன் திருமணம்செய்து கொள்ளகூடாது ?" என்றாள்.
"ஆமாம்! நீ சொல்வதும் சரிதான். ஆனால், என்னைப் போல அழகும் உன்னை போல அறிவும் கொண்ட பிள்ளை பிறந்து விட்டால் என்ன செய்வது?" என்றார்.
அங்கிருந்த எல்லோரும் "கொள்" என்று சிரித்தார்கள். இப்படி நகைச்சுவைபட பேசுவதில் பெர்னாட்ஷா வல்லவர்.
Dr. Zhivago இது ஒரு எழுத்தாளர் பெயர் என்று நினைத்து விடாதீர்கள். 1957களில் உலகம் முழுதும் பரபரப்பு காட்டிய நோபல் பரிசு பெற்ற புத்தகம். போரிஸ் பாஸ்டர்னாக் Boris Pasternak ரஷ்ய எழுத்தாளர். இவர் எழுதிய ‘டாக்டர் சிவாகோ’ என்ற புத்தகத்திற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால் 'பரிசை' வாங்க கூடாது’ என்று ரஷ்யா கம்யூனிச அரசு ஆசிரியருக்கு தடைபோட்டது.
1905-லிருந்து இரண்டாம் உலகப் போர் வரையிலான ரஷ்யாவின் பின்புலத்தை கதை மையமாக கொண்டு உருவான ‘டாக்டர் சிவாக்கோவை’ வெளியிட ரஷ்யஅரசு தடை போட்டது.
பின்னர் கதையின் கையெழுத்துப் பிரதிஒன்று இத்தாலி மிலான் நகருக்கு கடத்தப்பட்டு 1957ஆண்டு "டாக்டர் சிவாகோ" வெளி உலகம் வந்தார்.இந்த புத்தகம் வாசகர் வட்டத்தில்பெரும் வரவேற்ப்பை பெற்று விற்பனையில் சக்கை போடு போட்டது.
ரஷ்ய அரசு புத்தக ஆசிரியருக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தது. ‘இம்சை’ தாங்க முடியாத ஆசிரியர் போரிஸ் பாஸ்ட்டர் நாக்கை 1960–ம் ஆண்டில் சுவாசப்பை புற்று நோய் மண்ணகம் விட்டு வின்னகம் கொண்டு சென்றது.
19-ம் நூற்றாண்டின் ரஷ்யாவின் சிறந்த இலக்கிய படைப்பாளர்களில் Foydor Dostoevisky என்பவரும் ஒருவர். Crime and Punishment -‘குற்றமும்-தண்டனயும்’ என்ற நாவல் அவர் படைப்புகளில் மிகச் சிறந்த ஒன்றாகும்.
19-ம் நூற்றாண்டின் ரஷ்ய இலக்கியங்களில் "குற்றமும் தண்டனையும்" தவிர வேறு சிறந்த படைப்புகள் ஏதும் இல்லை. 1846-ல் டெஸ்ட்டோ விஸ்கியின் முதல் படைப்பான Poor Folk, வெளியானது. அவர் அரசுக்கு எதிராக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டில் 1848-ஆண்டு கைதாகி, கடும் தண்டனை பெற்று சைபீரிய சிறையில் அடைக்கப்பட்டார். 1858ஆம் ஆண்டு விடுதலை பெற்று ரஷ்யா திரும்பினார். Crime and Punishment, குற்றமும் தண்டனையும் சைபீரியா சிறை விடுதலைக்குப் பின் அவர் எழுதிய முதல் நாவல். இதைத் தொடர்ந்து The Gambler, The Idiot, The Brothers of Karamazov ஆகிய நாவல்களையும் எழுதினார்.
19ம் நூற்றாண்டில் அவர் படைப்புகளுக்கு தகுந்த பரிசு கிடைக்கவில்லை. ஆனால், இருபதாம் நூற்றாண்டு அவரை கை விடவில்லை. புகழும் பாராட்டும் அவரை தேடித் தேடி அலைந்தது. எங்கெங்கு தேடினும் புகழின் கையிலும் பாராட்டின் கையிலும் அவர் அகப்படவே இல்லை! ‘இன்று வரும் நாளை வரும்’என்று வருகின்ற வழி மீது கண்வைத்து கதவோரம் காத்திருந்தபோது வராத புகழும் பாராட்டும், அவரை தேடித் தேடி அலைந்த போது அவர் எங்கே போனார்!? தேடிய போதும் வயிற்றுப் பசியால் வாடிய போதும் வராத செல்வமும் புகழும் தேடாத போது வருவதெல்லாம் கலைஞனிடமும் தேசத் தொண்டனிடமும் காலம் விளையாடும் வாடிக்கையான கண்ணா மூச்சி விளையாட்டுகளே!
புகழும் பாராட்டும் தேடி வரும் வரை காலம் காத்திருப்பதில்லை. காலம் தன் கடமையில் கண்ணும் கருத்துமாய் இருக்கும். டேஸ்டோ விஸ்கி தன் மண்ணுலக பயணத்தை முடித்து வின்னுலகம் போய் ரெம்ப நாளாச்சுங்க! பரிசு பிந்தியதா? அல்லது டெஸ்ட்டோ விஸ்கி முந்தினாரா? விடை கிடைக்காத கேள்வி. Inbox சில் இதை போட்டு வைப்போம். ஒரு நாள் பதில் கிடைக்கலாம்!
டெஸ்ட்டோ விஸ்கியின் படைப்புகளில் பல உலக மொழிகளில் வெளிவந்த போது இலக்கியக் காதலர்கள் ஆச்சரியத்துடன் கேட்ட கேள்வி "யார் இவர்?". இலை மறை காயாக இருந்த ஒரு இலக்கியச் சிற்பி குன்றின் மேல் தீபமாக உலகெங்கும் ஒளிவீசி புகழ் பெற்றார். அதுமட்டுமே அவர் ஆன்மாவின் சாந்திக்கு உலகம் கொடுத்த சன்மானம்.
தொடரும்...
S.முஹம்மது ஃபரூக்





