அல்லாஹ்வின் திருப்பெயரால்,...
அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா நல்லா இருக்கியலா? எத்தனை வருசமாச்சு?
அஸ்ஸலாமு அலைக்கும், மாப்புளே எப்புடிடா இருக்கே? எத்தனை வருசமாச்சு?
அஸ்ஸலாமு அலைக்கும், என்ன தம்பி எப்படி இருக்கிய? எவ்வளவு வருசமாச்சு?
அஸ்ஸலாமு அலைக்கும் என்னை ஞாபகம் இருக்கா?
என்று இது போன்ற உணர்வுகளோடு உரசும் கேள்விகளும் அதற்கான பதில்களுமாக அனைவரின் முகத்திலும் புன்னகை மலர்ந்து கலகலவென்று குவிந்த அதிரைச் சகோதரர்களின் வருகையோடு நேற்று 30.09.2011 துவங்கியது அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதல் பொது குழு கூட்டம் துபையில்.
அல்ஹம்துல்லில்லாஹ் !. அல்லாஹு அக்பர்.
நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதல் பொதுக்குழுக்கூட்டம் அற்புதமான ஏற்பாட்டுடன் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. அமீரகத்தில் வாழும் அனைத்து முஹல்லா மக்கள், குறிப்பாக குடும்பத்துடன் வசிக்கும் அதிரை நேசங்கள் தங்களின் மனைவி பிள்ளைகளுடம் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள். கலந்துக்கொண்ட அனைத்து மக்களிடமும் புன்னகை. இது அதிரை மக்களின் அமீரக வரலாற்றில் மறக்கமுடியாத நிகழ்வு என்று சொன்னால் மிகையில்லை. இந்த முக்கிய நிகழ்வுக்கு நூற்றுக்கணக்கான அதிரை நேசங்கள் கலந்துக்கொண்டார்கள் என்பது மிகச்சிறப்பு.
கூட்டம் சரியாக மாலை 06:30 மணியளவில், துபாய் அல்கிஸ்ஸ்ஸ் பகுதியில் உள்ள கிரஸண்ட் பள்ளி வளாகத்தில் துவங்கியது, இந்த கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்பே மக்கள் அனைவரும் வந்துவிட்டார்கள். முதலில் இறைவசனம் ஓதப்பட்டது. நிகழ்ச்சிகளை தலைமை ஏற்று சகோதரர் ஜமீல் அவர்கள் மிகச்சிறப்பாக கூட்டத்தை நிறைவுவரை வழிநடத்திச் சென்றார்கள். இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக அதிரையிலிருந்து பேராசிரியர். அப்துல்காதர் அவர்கள் வந்திருந்தார்கள் மிக அற்புதமான சொற்பொழிவை நிகழ்த்தினார்கள், அதிரை இதயங்களை இணைக்கும் வகையில் இனிப்பாக இருந்தது பேராசிரியர் அவர்களின் கணீர் குரல் சொற்பொழிவு.
நிகழ்சியில் முத்தாய்ப்பாக நம் அதிரைநிருபரின் ஆஸ்தான கவி, சகோதரர் சபீர் அவர்கள் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் பொது குழு கூட்டத்தை சிறப்பிக்கும்விதமாக கவிதை வாசிக்கப்பட்டு வந்திருந்த எல்லோரையும் ரசிக்கவைத்து ஆழ்ந்து சிந்திக்க வைத்துவிட்டது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பேராசிரியர் அப்துல்காதர் அவர்கள் இந்த கவிதை வரிகளுக்கு தன் உரை இறுதியில் விளக்கமளித்து நம் அதிரைநிருபர் கவியின் கவிதைகளை வந்திருந்த எல்லா வயதினருக்கும் புரியும்படி ஒரு பாடமே எடுத்துவிட்டார்கள். நல்ல வரவேற்பை பெற்ற நம் அதிரைநிருபரின் ஆஸ்தான கவி சபீர் அவர்களின் அந்த கவிதை விரைவில் நம் அதிரைநிருபரில் வெளிவரும் இன்ஷா அல்லாஹ்.
மேலும் நிகழ்சியில் அனைத்து முஹல்லா பொது குழு உறுப்பினர்கள் சிலர் சிறப்புரையாற்றினார்கள். தீர்மானங்கள் வாசிக்கபட்டது (விபரம் விரைவில்), தொடர்ந்த நிகழ்சியில் அதிரையில் உள்ள முஹல்லாக்களின் துபை கிளையின் நிர்வாகிகள் முஹல்லா வாரியாக மேடையில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்கள். இறுதியாக தேர்ந்தெடுப்பட்ட அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் அனைவரும் மேடையில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்கள். சகோதரர் தமீம் (ஏர்லிங்க்) அவர்கள் தலைவராக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள் மற்ற நிர்வாகிகள் பற்றிய விபரம் இன்ஷா அல்லாஹ் புகைப்படங்களுடன் விரைவில் வெளியிடப்படும்.
இடைவிடாமல் நடைப்பெற்ற இந்த நிகழ்சியின் நடுவில் வந்திருந்தவர்களுக்கு தேநீர் மற்றும் சமூசா வழங்கப்பட்டது. கூட்டம் முடிந்தவுடன் வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவும் பார்சலாக வழங்கப்பட்டது.
இந்த மறக்கமுடியாத நிகழ்வு இனிதே நிறைவுற்றது. கலந்துக்கொண்ட அனைவரின் புன்னகையே அவர்கள் அனைவரின் உணர்வுகளின் வெளிப்பாடாக காணப்பட்டது. அல்ஹம்துல்லில்லாஹ்.
இந்த நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்த அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் அனைத்து சகோதரர்களுக்கும் நம் அதிரைநிருபர் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்றைய நிகழ்வுகளின் நிறைவாக நம் அதிரைநிருபர், அதிரைபிபிசி, மற்றும் பல அதிரை வலைத்தளங்களில் நேரலை செய்ய உதவிய சகோதரர் U. மெய்னுதீன் மற்றும் அதிரைபிபிசி சகோதரர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
அல்லாஹ் போதுமானவன்.
-அதிரைநிருபர் குழு.
புகைப்படங்கள்:








