வளைகுடா வாழ்வின் அன்றாடம் வருடும் பொழுதுகளில் ஓர் நாள் வழக்கமாக நான் சார்ந்திருந்த வேலையுனூடே நிகழ்வாக நடந்தேறியதை அப்படியே உங்கள் யாவரின் சமூகம் முன்னால் இதைச் சொல்லவில்லைனா ஓடிப்போன எகிப்திய அதிபர் திரும்பி வந்திடுவாருங்க !
வரைகலை வேலைக்கு ஆள் தேவையிருந்ததால் அதற்காக முறையாக விளம்பரம் செய்து அதில் சிக்கியவர்களில் சிலரை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டது, வேலைக்கு ஆள் சேர்க்கும் முறைகளில் எல்லா அலுவலகம் அல்லது தொழிற்சாலைகளில் ஒரேமுறைதான் என்றில்லாமல் அவரவர்களின் வேலைகளின் சூழலுக்கு ஏற்ப நேர்முக / பயிற்சித் தேர்வுகள் நடைபெரும் அப்படித்தான் வந்தவர்களை அந்தப் பிரிவிற்கான பொறுப்பளரிடம் அனுப்பிவைக்கப்பட்டது அவரின் கருத்து மற்றும் திருப்தியைப் பொறுத்தே அந்த நபர்களை அவருடைய மேலாளருக்கு பரிந்துரை செய்து யாரை தேர்ந்தெடுக்கலாம்னு சொல்லியும் வைப்பார். அங்கே அத்துறையின் மேலாளரின் விருப்பு வெறுப்பு அல்லது திறனைப் பொறுத்து அங்கே ஓர் முடிவுக்குள் வந்திடும்.
அடுத்து அவருக்கான சம்பள விபரங்களை நிர்ணயிக்க மற்றொருவரிடம் அனுப்பி வைக்கப்படும். அவரின் அலசல் முனுமுனுப்பு, சில சமயம் அகோரப் பார்வை, பல நேரங்களில் ஏன் வந்தாய் என்றொரு பார்வையும் இருந்திடும். அதனையும் வென்றுதான் வேலைக்கு சேரத் தகுதிச் சான்று எழுத்து மூலமான அந்த பத்திரம் கிடைக்கும் அவைகளை பெற்றதும் என்னிடமும் வருவார்கள். அது மேலோட்டமாக என்னிடம் ஒன்றுமில்லாதது மாதிரிதான் இருக்கும், வருபவருக்கு ஏன் என்றால் கைககளில் வேலைக்கு சேறுவதற்கான சான்றுப் பத்திரத்தை பெற்றுக் கொண்டதினாலதான். இங்கே அப்படியொரு நினைப்பு எல்லாமே முடிஞ்சுடுச்சு இனிமே அப்பாயிண்ட்மெண்ட் தபால்தான் மீதி என்ற நம்பிக்கை.
சரி அதனாலென்ன கேட்டுடாதீங்கோ கொஞ்சம் பொறுங்க ! நிறைவாக என்னையும் அவர் கண்டுதான் செல்ல வேண்டும் இதுவும் வழக்கத்தில் உள்ள ஒன்றுதான் ஆதலால் என்னிடமும் வந்தார், வந்தவரைக் கண்டதும் எப்படியப்பா இந்த வேலைக்கு வந்தாய் என்று கேட்டேன் (இது வழக்கமாக கேட்பதுதான்).
உடனே அவர் சட்டென்று “எனக்கு இந்த நிறுவனத்தில் இருக்கும் மேலாளரை (அவரின் பெயரைச் சொல்லி) எனக்குத் நன்றாகத் தெரியும் அவர்தான் என்னை இங்கே வேலைக்கு சேர்த்தார்” என்றார். அப்படியா என்று அமைதியாக கேட்டுவிட்டு சரி இருக்கும் பேப்பர்களையும் காட்டு என்றேன் அவரும் காட்டினார் அவருடைய பாஸ்போர்ட்டையும் பார்த்தேன் அவர்களாகவே ஒன்று கூடி விரட்டியடித்த அதிபர் ஆட்சியில் வினியோகிக்கப்பட்டது.
அவரை அப்படி கொஞ்ச நேரம் இருக்கச் சொல்லிவிட்டு, அவரின் இனர்வியூ அப்ப்ளிகேஷனில் கையொப்பமிட்டவர்கள் (மூவர்) ஒவ்வொருவரிடமும் இவரைப் பற்றி கேட்டேன் அவர்கள் சொன்னது ஒன்றே ஒன்றுதான் உங்கள் பெயரைச் சொன்னார் சரி நீங்கள் அனுப்பியிருப்பவர் சரியாகத்தானே இருப்பார் என்று கையொப்பமிட்டோம் நாங்கள் வேற ஒன்றும் கேட்டிடவில்லை... என்றனர்.
நான் மீண்டும் அந்நபரை அழைத்தேன், சரி எல்லாமே முடிந்து விட்டது நீ சொன்ன அந்த மேலாளரிடமே உன்னுடைய அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரை வாங்கிக் கொண்டு வேலைக்குச் சேர்ந்து கொள் என்று சொல்லி அனுப்பிவிட்டேன் அவர் மீண்டும் அலுவலக முகப்பிற்கே சென்று மீண்டும் என்னிடமே வந்தவரிடம் என்னவென்றும் கேட்டேன் என்னிடமும் அதனையே கேட்டார்.
நானும் அவரிடம் அந்த மேலாளரை பார்த்திருக்கிறாயா என்றும் கேட்டேன் இல்லை என்றார் அப்படியானால் எப்படி இங்கே எல்லோரிடமும் அவரைத் தெரியும் அவர்தான் இங்கே வேலைக்கு அனுப்பி வைத்தார்னு சொன்னாய் என்று கேட்டேன்.
அதற்கு அவர் இங்கே வந்ததும் முதலில் "அந்த முக்கியமான டிபார்ட்மெண்ட்" மேலாளரின் பெயரைக் கேட்டேன் சொன்னார்கள் அதனையே எல்லோரிடமும் சொன்னேன் என்றார்.
அந்தப் பெயருடைய, அவனேதான் நான் என்றதும் அப்படியே மிரண்டவர் அவசரமாக திரும்பி (அவர் நாட்டினுடைய முன்னால் அதிபரைப்போல ஓட) போகப் பார்த்தார். அப்படியே அவரைச் சமாதானம் செய்து மீண்டும் முறையாக வரைகலைத் தேர்வுக்கு அனுப்பி வைத்தேன் ஆனால் அங்கே சென்றதும் இங்கிருக்கும் கணினியில் வேலை செய்த அனுபவமில்லை என்று சொல்லிட்டு அப்படியே சென்றும் விட்டார். இவர் வேறுயாருமல்ல மேலேச் சொன்ன எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்தான்.
ஒழுங்கா படித்து, முறையான அனுபவத்துடன் வேலை தேடும் அனைவருக்கும் நிச்சயம் வேலை கிடைக்கும், போலிவேசம் போடுபவர்களைத் தவிர. மாணவர்களே நன்றாக முழுமையாக படியுங்கள் பட்டங்களை பெறுங்கள், உங்களுக்கு கிடைக்கப்போகும் முதல் வேலையை ஒரு அனுபவ படிப்பாக கருதுங்கள். அதுவே வேலை அனுபவத்தின் முதல் வாசல் என்ற எண்ணத்துடன்.
சரி எனக்கு ஓர் வேலை வேனுமுங்க ! ஆனால் இப்படியான ஆட்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்காத வேலையா வேனுமுங்கோ…
-- அபுஇபுறாஹிம்


