அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) - (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தாங்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!).
ஆந்திராவைச் சேர்ந்த சினிமா டைரக்டரின் மகன்
இஸ்லாத்திற்கு வந்த அனுபவத்தை ஒரு பயான் நிகழ்ச்சியில் பேசியிருந்தார். சில வருடங்களுக்கு
முன் அவர் பேசிய சிடியை கேட்க வாய்ப்பு கிடைத்தது. அவரின் அனுபவத்தை உங்கள் முன் இப்பொழுது
பேச இருக்கிறார். (தமிழை அழகாக புரியும்படியே பேசினார். அவர் பேசியதை அப்படியே பதிவு
செய்வதால் சென்னை பேச்சும் கலந்து வரும்).
வல்ல அல்லாஹ்வை புகழ்ந்து விட்டு நபி(ஸல்)
அவர்கள் மீது ஸலாவத் கூறி, பிறகு இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன் என்று
கூறிய பிறகு அவரின் பேச்சை ஆரம்பம் செய்கிறார்.
இந்த ஊர் மக்களைப் பார்த்து மிகவும் சந்தோஷம்
அடைகிறேன். மதராஸில் தாவா பணிக்கு முயற்சி செய்தேன். உதவி செய்ய யாரும் முன் வரவில்லை.
இது ஒரு கிராமம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பெரிய நகராக இருக்கிறது. காயல்பட்டணம்
மக்கள் தாவா பணிக்கு நிறைய ஒத்துழைப்பு கொடுக்கிறீர்கள். நான் கூட இப்படி ஒரு சமுதாயத்தை
பார்ப்பேனா? என்று நினைக்கவில்லை. அல்லாஹ் ஒரு வாய்ப்பு
கொடுத்துள்ளான். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
நான் இஸ்லாத்திற்கு வந்தது என்ன காரணம்னா? 'எல்லா மனிதர்களின்
இதயத்திலும் நான் ஏன் பிறந்தேன் என்ற ஒரே ஒரு சந்தேகம் வரனும்.' ஏன் பிறந்தேன் என்ற சந்தேகம்
வரும்பொழுது உள்ளத்தில் ஒரு பயம் வரும். பிறப்பு எதற்காக சார் இருக்கிறது. எல்லா மனிதர்களும்
ஏன் பிறந்தீங்க? இறக்கிறதுக்காகத்தான் பிறந்தீங்க. அதற்கு மேல் எதுவுமே இல்லை. அப்ப பிறந்தது, இறப்பது எதற்காக? அதனால்தான் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்.
என் பெயர் சத்தியப் பிரசாத் என் சிறுவயது
முதல் சத்தியத்தையே பக்தியாக என் தாயார் ஊட்டி வளர்த்தார்கள். திருப்பதி பிரசாதம் சாப்பிட்டவுடன்
பேச ஆரம்பித்தேன் என்று சொல்வார்கள். பிரசாதம் என்றால் முஸ்லிம்கள்; தப்ரூக் என்று சொல்வார்கள்.
அம்மா சொல்வாங்க தவறு செய்தால், பாவம் செய்தால், நரகத்திற்கு போவாய்.
நன்மை செய்தால் சொர்க்கத்திற்கு போவாய் என்று சொல்வார்கள். எனக்கு தெய்வ பக்தி முத்தி
போச்சு! நரகம் என்றால் என்னம்மா என்று கேட்பேன்.
நரகம் என்றால் இரண்டு சூழல் இங்கு உள்ளது.
ஒன்னு போலீஸ் ஸ்டேஷன், அங்கு வந்து கம்பால் அடிக்கிறாங்களே! அதுபோல நரகத்தில் இரும்பு
வைத்து அடிப்பாங்க. இன்னொன்னு என்னான்னா ஹாஸ்பிடல்,
இங்கு ஆப்ரேஷனுக்கு அறுத்து போடுவார்கள். நரகத்தில் ஊசி போடாமலேயே அறுப்பான், பாவம்
செய்தவர்களை துண்டு துண்டா வெட்டிப்போட்டுடுவான் ஆண்டவன். அந்த வயசுலே கூட ஒரே பயம்
எனக்கு, பாவம் செய்யக்கூடாதுனு நிறைய கோயிலுக்கு போய்கினே இருப்பேன்.
இங்குள்ள நிறைய சகோதரர்கள் கோயில்களைப் பற்றி
நிறைய சொன்னீங்க (பேசினீர்கள்) . ஆனால் உண்மை ஒன்னு, இறைவன் படைச்சவன் அந்த உண்மையைப்
பற்றி சிந்திக்கிறவர்களுக்குத்தான் ஹிதாயத் கொடுப்பான். யார் ஹிதாயத் பெற்றவர்கள் சிந்தனை
செய்பவர்கள்தான். அவர்களுக்குள் உண்மையான சிந்தனை வரனும் நான் ஏன் பிறந்தேன், யாருக்கு நான் வணக்கம் செலுத்தனும், அது போல எனக்கும்
சிந்தனை வந்தது. வர்ரதுக்கு காரணம் என்ன? என் தாயார்தான் அவர்கள்
காட்டிய அந்த பக்தியால் எல்லா கோயில்களிலும் சுத்திகினே இருப்பேன் சின்ன வயசில்.
அப்போ எனக்கு அஞ்சு வயசு அப்பயே எனக்கு பக்தி.
வயசு வர வர பக்தியிலேயே ஒரு ரிசர்ச், ஆண்டவனை பத்தி தெரிஞ்சுக்கனும்லே அதனால் இராமயணம், பாரதம் எல்லாம் படிச்சிருக்கேன். அது போல சிவபுராணம் படிக்கும்போது
சிவனுக்கு சனி புடிச்சிக்கிடிச்சு எனக்கு ஒரே ஒரு தாட் சிவனுக்கே சனி புடிச்சிக்கிடிச்சின்னா
சிவனுக்கு மேலே ஒரு சக்தி இருக்குது. இருக்கா? இல்லையா? அந்த ஒரு சிந்தனையில் அம்மாகிட்டே சொன்னேன்.
அம்மா சொன்னார்கள் சிவாலயத்தில் போய் சிவானந்த
ஆச்சாரியார் இருக்கிறார் அவரிடம் போய் கேள் என்றார்கள்.
அவருகிட்ட கேட்டேன் ஐயா, ஐயா இதுபோல விஷயம்
என்ன விஷயம் என்று கேட்டார், சிவன் பெரியவனா? சனி பெரியவரா? என்று கேட்டேன் அவர்
அபச்சாரம்.. அபச்சாரம் கண்ணு போய்டும்டா படுவா ராஸ்கல் என்ன ஆச்சு உனக்கு பைத்தியக்காரன்
மாதிரி கேள்வியெல்லாம் கேட்காதே என்றார்.
என்னடா இப்படி சொல்லிட்டாரே ஆண்டவனை பத்தி
தெரிஞ்சுக்கலாம்னு பாத்தா கண்ணு போய்டும்னு சொல்றாரே ''யார் பெரிவருனா அவரை வணங்கலாமே''.
அப்புறம் இன்னொரு சிந்தனை இவங்க எல்லாம் பொய் சொல்றாங்க. திங்கள்கிழமை ஒரு கோயில், செவ்வாய்க்கிழமை ஒரு கோயில் என்று எல்லா நாளும் கோயிலுக்கு போறேன்
என்னென்னமோ செய்றேன். எங்க போனாலும் என் மனசுக்கு ஒரு நிம்மதி வரலை. ஐ யம் நாட் சேட்டிஸ்ஃபைடு வித் திஸ் ரிலீஜன். அப்ப நான்
ரிசர்ச் பண்ணினேன். என்ன வேதங்களை படிக்கலாம்
என்று, சம்ஸ்கிருதத்தில் இருந்து என்ன படிக்க? பிறகு என் பிரண்ட்
ஒருத்தர் இருந்தார், புரோகிதர் அவரிடம் போய் கேட்டேன், அவர் சொன்னார்:
பிரம்மம் எ கஹா விஸ்வம் நாஸ்தி - ரிக் வேதம் நாலாவது அத்தியாயத்தில்
இருக்குது. என்னா இப்படி சொல்றாறே இதற்கு அர்த்தம் என்ன? இறைவன்
ஒருவனே அவன் தவிர வேறு எவனுமே இல்லை. இதை கோயில் கும்பாபிஷேகத்தில்
ஓதுவார்கள். (கோயில் மேலே அமர்ந்து அபிஷேகம் செய்யும் நேரத்தில்).
பிரம்மம்
எ கஹா விஸ்வம் நாஸ்தி!
ஓ நிராகாரயா
நமஹா!
ஓ ஜோதிர்காயா
நமஹா!
இந்த மூன்று வார்த்தைகளும்
என் மனதில் பதிந்து விட்டது. இறைவன்
ஒருவனே! அவன் தவிர வேறெதுவுமில்லை! அவன் உருவமற்றவன்!.
அப்ப உருவ
வழிபாடு இல்லாத இறைவன் யார்? என்ற சிந்தனை எனக்கு. இஸ்லாத்தை எனக்கு கற்று கொடுத்தது யார் என்றால் இந்து வேதங்கள்தான், வேறு யாருமில்லை. என்னுடைய சிந்தனையும், என்னை படைச்ச இறைவன் யார் அவனதான் நான்
வணங்கனும், வேறு யாரையும் நான் வணங்கக்கூடாது என்று இருந்தது.
ஓ நிராகாரயா
நமஹா! : உருவமே கிடையாது இறைவனுக்கு. அப்ப எல்லா 'கோயில்களிலும் விக்கிரகங்கள் இருக்கு, இது சரியில்லை'.
ஓ ஜோதிர்காயா
நமஹா! - பாருங்க இது எங்க இருக்கு இஸ்லாத்திலேயும் இருக்கு நூருன் அலா
நூர் - குர்ஆன் சொல்கிறது லா வஜூஹூ - குல்ஹூவல்லாஹூ அஹது - சொல்லுங்கள் இறைவன் ஒருவனே.
ஆனால் மொழி வேறு வார்த்தைகள் ஒன்று. மொழி வேறாக இருப்பதால் இஸ்லாம் தெய்வம் வேறு, இந்து தெய்வம் வேறு என்று
நாம் நினைக்கிறோம். (இந்துக்களுக்கும் இறைவன் ''அல்லாஹ்தான்'' என்று சொல்கிறார்).
தேவுடு என்று தெலுங்கில் சொல்வார்கள். தேவுடு
என்றால் -தெய்வத்துவம். தெய்வத்துவம் - என்றால் உருவாக்குகிறவன்
இறைவன் என்று அர்த்தம். மனிதர்களின் இதயத்தில் அந்த சந்தேகம் வரணும்
என்னை படைச்ச இறைவனை திருப்தி படுத்துனுமா? பெரியவர்களை திருப்தி
படுத்தனுமா? அப்ப எனக்கு ஒரு தைரியம்
வந்திச்சி ஆஹா! என்னை படைத்த இறைவன் எனக்கு கண்ணை கொடுத்திருக்கான், வாய் கொடுத்திருக்கானே, அவன்தான்
எனக்கு சோறு போடுவான் என்ன இருந்தாலும் அவன்தான் இருக்கிறான்.
அம்மா அப்பா
ஒரு வழிகாட்டி அவ்வளவுதான். தே மே பி மிஸ் கைடு டு மீ - என்னை தவறான பாதையில் வழி நடத்துகிறார்கள். ஒரு நம்பிக்கை வந்தது
எல்லா தெய்வமும் ஒன்னுதான். நான் இங்கிலீஸ் கான்வென்டில் படித்ததால் அவர்கள் சொன்னார்கள்
கிறிஸ்டின் இஸ் ய பெஸ்ட் ரிலீஜன் தி வோல்டு - உலகத்திலேயே பெரிய சமுதாயம் கிறிஸ்டியன்ஸ்.
இது உண்மை.
என்ன கிறிஸ்டின் இஸ்
ய பெஸ்ட் ரிலீஜன் அப்படிதான் நினைத்தார்கள். கம் டு ஜீசஸ். ஜீசஸ் வில் சேவ் யூ! என்ன
பாவம் செய்தாலும் நீ வந்து விடு. அவங்க
சொன்னதையெல்லாம் கேட்டு அவர்கள் பின்னால் சென்றேன். ஆசிரியர் எல்லாம் ஆஸ்திரேலியன்ஸ்
சின்ன வயசிலிருந்து அங்கு படித்ததால் நான் 'டுரூத்' என்று நினைத்தேன்.
அப்ப அவர்களிடம், நான் ஒன்று கேட்டேன், நீங்க சொல்றீங்க தெய்வம் மனித
குமாரனாக பிறந்திருக்கிறார் என்று அதற்கு 'வாட் ஐ ஹேவ் த ப்ரூப்' உண்மை இருக்கனுமே
நான் நம்புவதற்கு என்று கேட்டதற்கு - ப்ரூப் தருகிறேன் என்று சொன்னவர்கள் ஒரு
வருஷமாயி போச்சு, இரண்டு வருடமாகியும் தரவில்லை.
பிறகு கிறிஸ்துமஸ் வந்தபொழுது என்னை கிறிஸ்டியனாகி விடு என்று ஃபோர்ஸ் பண்ணினார்கள்.
என்ன செய்யனும் என்று கேட்டேன் எதுமே இல்லை. இங்க பாரு கிளாஸில் திராட்சை ரசம் (ஒயின்)
உள்ளது. இதை குடிக்கும்பொழுது
யேசுவின் இரத்தத்தால் என் பாவங்களை கழுவுறேன் என்று சொல்லிக் கொண்டே குடி என்றார்கள்.
நான் பயந்து விட்டேன். என்னாட இது ரத்தம் குடிக்கிறது
ஷைத்தானோடு செயல் என்று பைபிள் சொல்லுது. இவர்கள் ரத்தம் குடி.., என்று சொல்கிறார்கள்
அதுவும் யேசுவோட ரத்தம் என்று சொல்கிறார்களே. மனிதனுக்கு இந்த மாதிரி என்னமே வரக்கூடாது
என்ன இப்படி சொல்றீங்களே என்று ஆச்சரியமாக கேட்டேன்.
அது என்ன என்று கேட்டேன் அது கேக் துண்டு.
அது கேக் என்றேன். ஆ. . . அது கேக் இல்லப்பா இயேசுவுடைய சதை, இதை சாப்பிட்டு என் உடலை சுத்தப்படுத்தி கொள்கிறேன் என்று நினைக்கனுமாம்.
அடப்பாவிகளா? என்னா? இது ரொம்ப மோசமான
மார்க்கம்பா எனக்கு வேணாம் (ஹா.ஹா.ஹா. ஒரு சிரிப்பு சிரிக்கிறார்) இப்படி சொல்றதை விட
இந்துவாக இருப்பது பெட்டர் என்று வந்து விட்டேன்.
இஸ்லாத்தைப் பற்றி
விசாகப்பட்டிணத்தில் நான் இருந்தபொழுது முஸ்லிம்களிடம் கேட்டேன். அவர்கள் ஒரு சமாதியை
(தர்கா) காட்டி அதுதான் தெய்வம் என்றார்கள். என்னடா இது தெய்வம் என்று சொல்கிறீர்கள்.
நம்ம கோயிலே பரவாயில்லையே! நிக்க வச்சி உயிரோடு இருக்கிறார்
என்று நினைத்து கும்பிடுகிறோம். இங்க என்னடான்னா படுக்க வச்சி இறந்துட்டார், உயிரோடு இருக்கிறார்? என்று சொல்கிறீர்கள் ரொம்ப ஆச்சரியமாக!
இருக்கிறதே. அதனால் திஸ் இஸ் நாட் ட்ரூ ரிலீஜன் என்று விட்டு
விட்டேன். இது உண்மையான நடந்த நிகழ்ச்சி.
அப்புறம் நான் மெட்ரிக் பள்ளி முடித்தவுடன்
என் அப்பா பிலிம் (சினிமா) லைனில் கொண்டு வந்து விட்டார். அப்ப எனக்கு 15 வயது. என் குடும்பத்தில்
ஆறு பேர் அண்ணன், தம்பி சினி பீல்டில் உயர்ந்த இடத்திற்கு நடிகர், டைரக்டராக வரவேண்டும் என்ற கனவு எனக்கு. (என் அப்பாவும் ஒரு
டைரக்டர்தான்) உண்மையிலேயே நான் இன்று சூப்பர் ஸ்டார்தான்
இத்தனை பேருக்கு மத்தியில் பேசுகிறேன் அல்லவா! அல்ஹம்துலில்லாஹ்!
ரஜினிகாந்தை நேரில்
பார்க்காதவர்கள் இங்கே இருப்பீர்கள். என்னைப் பார்ப்பதற்காக இவ்வளவு பேர் இங்கு கூடி
இருக்கிறீர்கள். அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வுடைய
ரஹ்மத்! உண்மையும் இதுதான். ஒருவன் இஸ்லாத்தை புரிந்து ஏற்றுக் கொண்டால் (அவனுக்கு
மேல் யாரும் இல்லை) அவன் மிகச்சிறந்தவனாக இருக்கிறான். ஏன் இஸ்லாம்தான்
சொர்க்கத்திற்கு செல்வதற்கு சுலபமான வழியைக் காட்டித்தருகிறது. உலகத்தில் எத்தனையோ
மார்க்கம் இருக்கிறது. ஆனால் இஸ்லாத்தில் மட்டும்தான் நேர்வழி
இருக்கிறது.
ஆனால் எனக்கு
வழிகாட்டியது அல்லாஹ்தான் என்று நம்புகிறேன். த்ரூ தி வேதாஸ் (இந்துக்களின் வேதங்கள்
வழியாக) இந்து வேதங்களை வச்சிதான் இன்னைக்கு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்.
இஸ்லாத்திற்கு வந்து விட்டேன். ஆனால் ட்ரூ
மார்க்கம் எனக்குத் தெரியவில்லை. முஸ்லிம்ஸ் என்னன்னா
தர்கா வழிபாடு: நம்மிடம் நிக்க வச்ச வணக்கம். இங்கே படுக்க வைச்சு வணக்கம் எல்லாம்
ஒன்னுதானு விட்டுவிட்டேன்.. 'அது சரியா' என் மனசுக்கு படல அதையும் விட்டுவிட்டேன்.
கிறிஸ்டியன் 'இயேசு இறைவன்' என்று சொல்றீங்க. ஆனால் 'இயேசு மரியாளுக்கு பிறந்தார்'
என்று சொல்றீங்க. அப்ப யார் அந்த ஓர் இறைவன் மனதில் சந்தேகம், ஒரு தேடுதல் இருந்தது.
பிறகு சினி ஃபீல்டில் நுழைந்து விட்டேன்.
எல்லாம் மறந்து விட்டேன். மோசமான வாழ்க்கை சினி ஃபீல்டு. சினி ஸ்டார் வாழ்க்கை மனுசனுக்கே வரக்கூடாது. அதான் உண்மை. எல்லாம்
மறந்து பெரிய நடிகராக வேண்டும், டைரக்டராக வேண்டும்
என்ற எண்ணத்தில் அதற்கான முயற்சிகளோடு நடிச்சுகினு இருந்தேன்.
லைப்ல மனுசனுக்கு அல்லாஹூதஆலா ஒரு சின்ன சிச்சுவேஷன் கொடுப்பான். எப்படியாவது அவன திருத்த
விரும்பினால் திருத்தி விடுவான். பாவம் செய்யக்கூடாது என்று அம்மா சொல்லிக் கொடுத்திருந்தாங்க.
ஆனால் நான் இருந்த சினிமா துறை தவறானது, பாவம் என்று மனசு சொன்னாலும் அதில்தான் இருந்தேன். நான் இருந்தது ஹை சொஸைட்டியாக இருந்ததால் குடிப்பதும்
கௌரவமாக இருந்ததால் இந்த பழக்கமும் என்னிடம் இருந்தது. பூஜை எல்லாம் செய்துதான் குடிப்போம்.
அங்கெல்லாம் எதையும் தடைசெய்ய யாரும் இல்லை எந்த மார்க்கத்திலும் குடி, விபச்சாரம் தடைசெய்யப்படவில்லை. இஸ்லாத்தைத் தவிர, வேறு எந்த மார்க்கத்திலும் எதுவும் தடைசெய்யப்படவில்லை.
சொல்வதற்கு சொற்கள் இருக்கிறது தவிர, தவறு என்று புத்தகங்கள், சாஸ்திரங்கள் எழுதி இருந்தாலும், தே ஆர் இமிடேஷன் ஃபிறம் குர்ஆன். உண்மை என்னானா எங்கும்
தடை கிடையாது.
ஒரு தடவை நான் காதலில் விழுந்து விட்டேன்.
திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று என் அப்பாவிடம் சொன்னேன். என் அந்தஸ்து என்ன? என் வம்சம் என்ன? எனக்கு களங்கம் வர காரியத்தை செய்து விட்டாய், அதனால கெட் லாஸ்ட்
ஃபிறம் மை ஹவுஸ். வீட்டை விட்டு வெளியே போ, என்னை தலைகுனியச் செய்து விட்டாய். எடு
நகையை, மோதிரம் எல்லாம் கழட்டு என்றார். நான் அதற்குள் மூன்று படத்தில்
நடித்து முடித்து விட்டேன். பெரிய கதாநாயக கனவு. என் அப்பா சொன்னார் என்னுடைய பெயர்
இல்லாமல் நீ வாழ்ந்து காட்ட வேண்டும் என்றார். என் அப்பா டைனமிக் பர்சனாலிட்டி டைகர்
பிரகாஷ் என்றால் அனைவருக்கும் தெரியும் பாப்புலர் ஃபிகர். நானும் ஆத்திரத்தில்,
இளம் ரத்தத்தில் உங்கள் பெயர் இல்லாமல் வாழ்ந்து காட்டுகிறேன் என்று சொல்லி விட்டு
வெளியே வந்து விட்டேன். வெளியே வந்து யோசித்தால்
டைகர் பிள்ளை என்று தானே சொல்ல வேண்டும் சினி ஃபீல்டில். தெட் இஸ் த ஃபிளாஷ் பேக் டு மை லைப்.
இன்ஷாஅல்லாஹ்
வளரும் ..
-S.அலாவுதீன்