மலைமகன்
கார்மேகக் கூட்டத்தை வானில் கண்டு காதல்வயப் பட்டவனாய் முத்த மிட்டுப்
பார்மீது தனக்குள்ள பிணைப்பி னாலே
பதிவிரதை மேகமகள் அணைத்த போது
நீர்விந்தை அவளுக்குள் மலையும் பாய்ச்ச
நிலமெல்லாம் மகிழ்ச்சியினால் உணர்ச்சி பெற்றுச்
சீர்மிக்க மணப்பரிசாய் நமக்குத் தந்தான்
சிறப்பான அருவியெனும் மகனைத் தானே!
அதிரை அஹ்மத்


