Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label வயசு. Show all posts
Showing posts with label வயசு. Show all posts

வயசு 25

ZAKIR HUSSAIN | January 28, 2011 | , ,

நோய்கள் மக்களை காவு வாங்குவதை விட மெடிக்கல்பில்கள் அதிகம் காவு வாங்குவதாக ஊரெங்கும் பேச்சு.ஆனா காலா காலமா அதுக்காக என்ன செய்ரோம்னா துப்பரவா ஒன்னும் இல்லீங்க.ஒரே குடும்பத்திலெ இருக்கிற ஏற்றதாழ்வு ஏழையா இருக்கிற நோயாளியோட பில்லை கட்டுவதற்கு மனசு வராமெ பணவசதி உள்ளவர்கள் "ஜெயிக்கிர குதிரையிலெதான் பணம் கட்டுவேன்ற மாதிரி "அவருக்குதான் வயசாயிடுச்சில அப்புரம் என்ன" என்று ஒதுங்கிக்க்கொள்ளும்போது அந்த ஏழை நோயாளியின் மனசு என்ன பாடுபடும். எழை சொல்தான் அம்பலம் ஏறாதே என்று மெளனிச்சுதான் போயிடுதில்லெ.

இத்தனைக்கும் அந்த நோயாளியும் தனது இளமையில் குடும்பத்துக்கு உழைச்சவர்தான்....எங்கே மதிப்பு இருக்கு. மதிப்பு சம்பாதிக்கிற வரைக்குதான்ற "முக்கிய விதி' தெரியாமலேயே வயசான பெறவு தெரிஞ்சு வருத்தப்படறவங்கதான் இப்போ பெருவாதியா இருக்காங்க.

சென்டிமென்ட்ல காசையும் இளமையும் தொழச்சிட்டு வயாசான பொரவு தெரிஞ்சு ....ச்சே என்னடா பெரிய தப்புபண்ணிட்டோமேனு தேம்பி மனசுக்குள் அழும்போது 'ஒன்னும் கவலைப்படாதே" வாழ்க்கைனா எல்லாம் சேர்ந்ததுதான்னு சொல்ல பக்கத்திலெ ஒருத்தரும் இல்லாத மாதிரி பொட்டவெளியில தனியா நிக்கிறாப்ல ஒரு தாய் மடி கேட்கும்ல.

பொண்டாட்டிக்காக அம்மாவிடம் சண்டை பல வருசம்...அம்மாவுக்காக பொண்டாட்டிகிட்டே சண்டை பல வருசம்...இடையில் சொந்த புத்தி எங்கெ தொலைஞ்சது?

திருச்சி தஞ்சாவூர்னு பொட்டுக்கு திருகாணி மாத்துரேன்னு போயி இந்த நகையை வாங்கிட்டேனு செல்லமாக நொந்துகொள்ளும் [ அல்லது "கொல்லும்"] பொம்பளைங்க இருக்கும் வீட்டிலேயும் மூலையில் முடங்கிப்போன நோயாளிகள். பாயும் தலகானியும் மூத்திர வாடையுடன். எங்கே போனது மனிதம்...கல்யாணம் சுன்னத் காதுகுத்திலெயெல்லாம் மாமன் மச்சான் மாப்பிள்ளைனு சொன்ன எல்லோரும் எங்கே வருமையும் நோயும் மூப்பும் வந்த உடனேயே சொல்லி வச்சாப்லெ காணாமெ போயிடுறாங்க...

மல்லியப்பூ மாதிரி மனசு உள்ளவங்கல்லாம் சம்பாதிக்கிற காலத்தில காசு கேட்டுவந்த உறவுகளெ 'நெசம்னு' நம்பித்தான் ஏமாந்துபோயிட்டாங்க. வந்தவுகளும் இந்த மனுசனுக்கு கொடுத்த மரியாதெ என்ன தெரியுமா..ஒரு ஏ.டி.எம் மிசினுக்கு கொடுத்த மரியாதெதான். பட்டனெ அழுத்தினா காசு தரப்போவுது...பொழைக்கிற காலத்துலெ கொஞ்சம் சூதானமா இருக்காமெ போனவைங்க எல்லாம் கெளரவத்தும் பசிக்கும் எடையிலெ இப்படி சர்க்கஸ் குறங்கா போச்சு அன்னாட பொழப்பு. நீங்க கொடுக்கும்போது அதிகமா மறுப்பு சொல்லாமெ வாங்கிகிர்ரவங்கள்ளெ அனேகப்பேர் நொந்துபோயிருப்பவர்கள்தான்.

ஏழை மனசு அறிய ஏழையா இருக்கனும்னு அவசியம் இல்லே.

ஊர் என்ன சொல்லும்னு கவலைப்படுற விசயங்கள்னு சிலதுகள் இருக்கத்தான் செய்கிறது..அது சமூகம் சார்ந்த அவமானங்கள் மட்டும்தான். அதை வீட்டுட்டு உழைக்காத, உடம்பு வளையாத உறவுக்கெல்லாம் அள்ளி எறெச்சிட்டு அதற்க்கு பெயர் 'ஒத்தாசை-உதவி' என நாமாவே தவறான பெயர் வைத்து கொள்கிறோம்...அதற்க்கு பெயர் ;'கடைந்தெடுத்த.. கேனத்தனம்'

இது வெளங்கும்போது வயசாகி மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாம் ரொம்ப ஹைலைட் செய்ற ரீடிங் இருக்களாம்

வாங்காமெ வெலெ ஏறிப்போன தோப்புக்கும் வயலுக்கும் வக்கெனெ சொல்லும் சிறுசுங்க சாதிச்சதுதான் என்ன?

சரி எதுதான் வாழ்க்கையிலெ சரி , தப்பு ... எதுவுமில்லெ விட்டுதள்ளுங்க.. மத்தவன்வாழ்க்கெயெ பாத்து கத்துக்கிட்டவன் புத்திசாலி... தன் வாழ்க்கையிலெ பட்டுதெறிஞ்சவன் முட்டாள்.

எப்போதும் நான் நெகடிவ் விசயங்களெ எழுதிறதில்லே... ஆனால் தெரியாமல் பாசிட்டைவா மட்டும் எழுதிட்டு வாழ்க்கையிலெ 'இதுவும் இருக்கு'னு சொல்லாம இருக்கிறது தார்மீகமா தப்பு.

மேலெ உள்ள ஒரு போட்டொவெ பார்த்து 15 நிமிசத்துலெ எழுதுனதான் இது...

-- ZAKIR HUSSAIN


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு