Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label அஹ்மது ஹாஜா. Show all posts
Showing posts with label அஹ்மது ஹாஜா. Show all posts

அது ஒரு பொற்காலம் – 1977 - part 2 18

அதிரைநிருபர் பதிப்பகம் | August 27, 2012 | , , ,


அதிரை புதுமனைத் தெருவில் அஹ்மது ஹாஜா என்றொரு சகோதரர் இருந்தார் (இப்போது அவர் நம்மிடையே இல்லை - வஃபாத்தாகிவிட்டார்) அடுக்கு மொழியில் சொடுக்கும் சொற்களால் சொக்க வைப்பதில் வல்லவர்.

அவரின் அசத்தல் மொழியாடலும் வார்த்தை விளையாட்டுக்களும் சில சாம்பிளுக்கு இதோ !

பெருநாள் ஒரு நாள் 
மறுநாள் வெறும் நாள் !
-------------------------------------

அஹமது ஹாஜா
அதிரைக்கு ராஜா !
-------------------------------------

மாடு மாடு முரட்டு மாடு
முடுக்குல ஓடு !
-------------------------------------

என் மாமனாருக்கு 
இரண்டு பெண்(மகள்)கள்

ஒன்னு செந்தலையிலே
இன்னொன்னு எந்தலையிலே
-------------------------------------

நோன்பு கஞ்சி வாங்க வந்த பையன் ஒருவன் கொண்டு வந்த டிப்பன் பாக்ஸ் தூக்கு சரியில்லாமல் இருந்தது.

டிப்பனும் சரியில்லை
இதை கொடுத்து விட்ட
கொப்பனும் சரியில்லை..
-------------------------------------

பள்ளிவாசல் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த அவர் திடீரென்று வேலைக்கு செல்லாமல் நின்று விட்டார் அதனை ஏன் என்று கேட்டதும் அவர் சொன்னது.

எட்டரை மணிக்கு - தெனமும்
ஒட்டடை அடிக்கனும்னு சொல்றாங்க...
-------------------------------------

இதேபோல் இன்னும் நம்மவர்களிடமும் பொதிந்து இருக்கும் அஹ்மது ஹாஜா அவர்களின் வார்த்தை வித்தைகள் போன்றே ஏராளம் அதனை பின்னூட்டங்களில் பின்னியெடுக்கலாமே !?

என் நண்பர்கள் சூழ அனுபவித்த சில சுவராஸ்யங்களின் சிதறல்கள்:-

கல்யாணம் முடிந்து 7வது நாள் தோழன் சாப்பாடு நடந்து கொண்டிருந்தது பலவகையான உணவுகள் பரிமாறப்பட்டது அதில் முட்டையை அவித்து அதனை பொரித்து (அமுக்கு முட்டையாக) வைத்திருந்தார்கள். ஒரு சஹனுக்கு மட்டும் முட்டை வரவில்லை, அந்த சஹனில் இருந்த நண்பர் ஒருவர் கோபமாக அங்கே பரிமாறிக் கொண்டிருந்தவரை பார்த்து “ஏன் எங்கள் சஹனுக்கு மட்டும் முட்ட வரவில்லை” என்று கேட்டார் அதற்கு பரிமாறிக் கொண்டிருந்தவர் “முட்ட வர்ரதுக்கு நான் என்ன மாடா” என்றார். கல்யாண வீடே சிரிப்பால் மூழ்கியது
-------------------------------------

அதே கல்யாண சூழலிருந்த வீட்டில் மற்றுமொரு நிகழ்வு.

நாங்கள் இருந்த சஹனில் சிறுவன் ஒருவனும் எங்களோடு இருந்தான் அவனுக்கு சாப்பிட்டு வயறு நிறைந்து விட்டது போலும் வலது பக்கமும் இடது பக்கமும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான். எங்கள் சஹனில் இருந்த ஒரு பெரியவர் சிறுவனைப் பார்த்து "என்னடா டேபில் ஃபேனாட்டம் திரும்பி திரும்பி பார்க்கிறே எழுத்த பார்த்து ஓதுடா (சஹனைபார்த்து சாப்பிடசொல்கிறார்)"
-------------------------------------

கீழக்கரைக்கு நண்பன் ஒருவன் கல்யாணத்துக்கு (ஒரு நாள் முன்னதாகவே) போயிருந்தோம் மாப்பிள்ளை சார்பாக. பெண் வீட்டிற்கு அழைத்து சென்றார்கள் அங்கு பேசிக்கொண்டு இருக்கும் பொழுது 8 வயது மதிக்க தக்க ஒரு பெண்பிள்ளையை அழைத்து வந்து எல்லோரிடமும் அறிமுகம் செய்கையில் இவள்தன் பெண்ணின் தங்கை இவளை பார்த்தாள் பெண்னைப் பார்க்க தேவையில்லை என்று சொல்லிக்கொண்டு எங்களருகிலும் வந்துஅதியே சொன்னார் நானும் “அப்போ இவள் பெண்ணின் கேட்லாக் என்று சொல்லுங்கள்” என்று சொன்னதுதான் தாமதம் ஒரே சிரிப்பலைகள்.
-------------------------------------

அதிரை மண்ணின் மைந்தர்களுக்கு வார்த்தை விளையாட்டுக்களில் ஸ்டார்ட்டிங்க் டிரபில் இருந்ததே கிடையாது, அதற்கு சொல்லவா வேண்டும் அவரவர்களின் அனுபவத்தை பகிந்து கொள்ளுங்கள் என்று வேறு. 

ஆக ! உங்கள் அனுபவங்களையும் சுவராஸ்யங்களையும் பட்டியலிடுங்கள் பெருநாள் ஏப்பம் இன்னும் வராமல் திட்டுமுட்டா வருதுன்னு யாரோ சொன்னதாக ஞாபகம்.

மு.செ.மு.சஃபீர் அஹமது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு