அவனியை ஆட்டுவிக்கும்
...அலைகற்றான் என்பதை
கவனமாய் நோட்டமிட்டுக்...கவனிக்கும் மன்பதை
கருவாகிக் கருவறையின்
....காரலையில் நீந்தி
உருவாகும் குழவியெனும்
..ஓரழகு முத்து
ஒலியலைகள் பதிவாகி
....உலகமெலாம் அலையாக
ஒலிபரப்பின் நிலையாகும்
...உளமகிழும் கலையாகும்
நீரலைகள் நிலமகளை
..நொடிதோறும் முத்தமிடும்
பேரலையாய்ச் சுழலுகின்றப்
...பொழுதானால் சத்தமிடும்
கார்குழலின் நெளிவுகளும்
....கடலலையின் சுளிவுகளாய்
பார்புகழும் கவிஞரெலாம்
...படைத்திடும்பா தெளிவுகளாம்
அலைக்கற்றை ஊழலினால்
....அரசும் கவிழுமென்றால்
அலைப்பற்றி ஊரினிலே
...அதிகம் உணருவாரே!
அனுதாப அலைகளால்
..அளந்திடும் வாக்கிருந்தால்
இனியாரும் விலையிலா
..இலஞ்சமும் நோக்கிடாரே!
காற்றின் அலைகளாலும்
..கடல்கிழிக்கும் கதிரவக்
கீற்றின் அலைகளாலும்
...கரமசைக்கும் இலைகளும்!
உதிரத்தின் அலைகள்
..உடல்கூறும் நிலைகள்
இதயத்தின் அசைவு
..இரத்தத்தின் அலைகள்!
அலைகள் வாழ்ந்தால்
...அனைவரும் வாழ்வோம்
அலையே வாழ்க
...அனைத்திலும் நீதான்!
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை), அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை), மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com


