Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label வேஷம். Show all posts
Showing posts with label வேஷம். Show all posts

பால்தாக்ரே எனக்கு கடவுள் மாதிரி 12

தாஜுதீன் (THAJUDEEN ) | October 07, 2010 | , ,

பால் தாக்கரே எனக்கு கடவுள் போன்றவர் : ரஜினிகாந்த் பேட்டி

மும்பை, அக்.5,2010

பால் தாக்கரே தனக்கு கடவுள் போன்றவர் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

'எந்திரன்' படத்தை பிரபலப்படுத்துவதற்காக மும்பை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று (செவ்வாய்க்கிழமை) சிவசேனை தலைவர் பால் தாக்கரேவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார்.

அதன் பின் நிருபர்களிடம் ரஜினிகாந்த் கூறுகையில், "அவர் (பால் தாக்கரே) எனக்கு கடவுளைப் போன்றவர்," என்றார்.

மேலும், மராத்தி மொழி படம் ஒன்றில் நடிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, மும்பையில் நடைபெற்ற பாலிவுட் நட்சத்திரங்களுக்கான 'எந்திரன்' சிறப்புத் திரையிடலில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.

அதில், ரஜினிகாந்தின் பாலிவுட்டின் முன்னணி கலைஞர்களான அமிதாப் பச்சன், தேவ் ஆனந்த், அமீர் கான், தர்மேந்திரா, அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

நன்றி: நியூஸ் விகடன்


இந்த நடிகனை நேசிக்கும், பூஜிக்கும், புலகாங்கிதம் அடையும் என் சமுதாய சகோதரனே சிந்தித்துப் பார், உடனே உதறி எரித்துடு இந்த நடிகனை உன் உணர்வுகளிலிருந்து, திருந்திடு !

சிலவரிகள் இந்த சந்தர்ப்பவாத கூத்தாடி நடிகரைப் பற்றி இங்கே:-

என்னை வாழ வைத்த தெய்வங்கள் தமிழ்நாட்டு மக்கள் என்று நடிகர் ரஜினி அடிக்கடி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சொல்லிவருவது தமிழர்களை அடித்து துரத்திய துரோகியை சென்று பார்த்து ஆசி பெற்று "அவர் கடவுள் மாதிரி" என்று பரைசாற்றிய கூத்தாடி ரஜினி இன்று தமிழக மக்களை இளிச்சவாயன்கள் என்ற மெத்தனத்தில் சொல்லியிருக்கிறார், இதனை இன்றளவும் எந்த ஒரு அரசியல் அல்லது தமிழனுக்கு குரல் கொடுக்கிறோம் என்று கூக்கிரலிடும் ஒரு தலைவனும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

நம் முஸ்லீம் சகோதரர்களை குறிவைத்து கொன்று குவித்த அரக்கனை சென்று பார்த்து ஆசி பெற்று கடவுள் என்று சொல்லத் துணிந்த இந்த நடிகர் ரஜினிக்கு இன்றும் நம் சமுதாய மக்கள் நடிகர் ரஜினியின் அன்றைய / இன்றைய ரசிகர்களாக உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் சுயபுத்தியும் சுரனையும் இருக்குமானால் இவரைப் போன்ற பாசிஸ அயோக்கிய வேடதாரிக்கு அறவே முக்கியத்துவம் கொடுக்ககூடாது.

எத்தனையோ எழை குழந்தைகள் பால் கிடைக்காமல் தினம் தினம் பசியில் ஏங்குகிறது, இந்த நடிகனின் திரைப்படம் வெளியாகும் அன்று எத்தனை லிட்டர் பால் வீணடிக்கப்படுகிறது, எல்லாவற்றைவிட கொடுமை என்னவென்றால் எந்த சரித்திர ஏடுகளிலோ அல்லது புறான புளுகுப் புத்தங்களிலோ இல்லாத பழக்கம் பால் பாக்கெட்டை பிதுக்கி அவரின் ஒரு கட்டிட உயர புகைப்படத்துக்கு அபிசேகம் வெட்கக் கேடு.

தமிழனுக்காக இந்த நடிகர் உறுப்படியா என்னதான் செய்தார் என்பதை யராவது சொல்லத்தான் முடியுமா?

ரஜினியிடம் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேள்வி கேட்டால்..

"வருவேன் ஹாஹா ஹாஹா ஆனா வரமாட்டேன்" பதில் இப்படித்தான் எப்போதும் உள்ளது, சாவப்போற நேரத்தில் இவர் அரசியலுக்கு வந்து இருப்பவர்களை சாகடிப்பதைவிட வராமல் இருப்பதே மேல். அது தான் தமிழ்நாட்டுக்கு நல்லது. மனத் தைரியம் இல்லாத இந்த கோழை அரசியலுக்கு வருவேன் ஆனா வரவேமாட்டேன் என்று பூச்சாண்டிதான் காட்டமுடியுமே தவிர ஒரு முடிவுக்குள் வரத்தெரியாதவர்.

சமீபத்தில் கேவலம் திருட்டு விசிடி விற்பவர்களை பிடிக்க ரஜினி ரசிகர்களின் உதவியை நாடி இருக்கிறது தமிழக காவல்துறை, இது லேட்டஸ்ட் நியூஸ். இதன் மூலம் நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது திருட்டு விசிடி விற்பவர்கள் யார் யார் என்ற விபரங்கள் ரஜினி ரசிகர்களுக்குதான் தெரியும் என்பதை தெரிந்துள்ள காவல்துறை ஏன் மற்றவர்களின் திரைப்படங்களின் திருட்டு விசிடிக்கு இவர்களை நாடவில்லை. ரஜினி ரசிகர்கள் இந்த மாதிரி வேலைகளுக்கு தகுதியானவர்கள் என்பதை காவல்துறையின் வேண்டுகோளால் நம்மால் உணரமுடிகிறது.

ஒரே ஒரு காரணம்தான் இந்த நடிகர் தான் நடித்த திரைப்படம் கடந்த வருடங்களில் கர்நாடகாவில் திரையிட அங்கே ஒரு நாடகம் நட்த்தினார் அங்கே அவர்களின் விசுவாசியாக வேஷம் கட்டினார் இன்று வடநாட்டில் (மும்பையில்) திரைப்படம் ஓட விட வேண்டாமா? அங்க தமிழன் நடிச்ச படம்னு அவிங்க அரசியல்பண்ணினா என்ன பண்றது. இதற்கு என்ன என்ன பண்ணவேண்டி இருக்கு பாருங்க.

மொத்தத்தில் மொழி இனவெறி பிடித்த பால்தாக்ரேயை சந்தித்து " பாலதாக்ரே எனக்கு கடவுள் மாதிரி" சொல்லியதோடு அல்லாமல், மாராட்டிய மொழியில் தன் கருத்தை செய்தியாளர்களிடம் சொன்னதன் மூலம் தான் தமிழன் இல்லை நான் ஒரு மராட்டியன் என்பதை தன்னை வாழவைக்கும் தெய்வங்களுக்கு மீண்டும் ஒருமுறை தெரியப்படுத்திவிட்டார். இனியாவது திருந்துவார்களா?

நன்றி: மின் அஞ்சல் வழி அனுப்பிய நண்பருக்கு


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு