மின்சாரம் பதிவு இன்று அதிரைநிருபரில் வருகின்றது என்று வீட்டில் பேசிக்கொண்டு இருக்கும்போது நான்காவது படிக்கும் என் மகள் ஒரு கேள்வி கேட்டாள்.
“கட்டுரை என்றால் என்ன வாப்பா?” என்று.
நானும் சொன்னேன் “நாம் படித்த மற்றும் நம்முடைய அனுபவத்தில் தெரிந்த நல்ல விசயங்களை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதிக் காட்டுவதுதான் கட்டுரை” என்றேன்.
“அப்படி நீங்கள் பகிர்ந்து கொள்வதால் என்ன பயன்!?” அடுத்த கேள்வி வந்து விழுந்தது.
“நாம ஒரு சில விசயங்களை கட்டுரையாக எழுதுறப்ப அதை மத்தவங்க படிப்பாங்க அதில் உள்ள நல்ல விசயங்களை தெரிந்து கொள்வார்கள், அப்புறமா அது விஷயமா நமக்கு தெரியாத சில செய்திகளை நமக்கு அவங்களும் சொல்லுவாங்க இதனால அதனை படிக்கின்ற அனைவருக்கும் அது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்” என்றேன்
“அப்படியா!” என்று கேட்ட என் மகள்.
“அப்போ நான் ஒரு கட்டுரை தரட்டுமா அதை அங்கே போடுவாங்களா?” என்று கேட்டதும்.
நான் சொன்னேன் “நான்காவது படிக்கும் உன்னிடம் அப்படி என்ன கட்டுரை இருக்கிறது?” என்றேன்.
“நான் படித்த நல்ல விசயங்கள் என்னிடம் நிறைய உள்ளது அதில் ஒன்றை தருகிறேன் வாப்பா அதை போடுங்கள் அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்” என்று சொல்லிக் கொண்டே ஒரு A 4 பேப்பரை எடுத்து என்னிடம் கொடுத்தாள்.
மகள் தந்த பேப்பரை வாங்கி பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அதை அப்படியே அதிரைநிருபர் சகோதர வாசகர்களாகிய உங்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. மேலும், நாம் அனைவரும் இதைப் பற்றி அறிந்திருந்தாலும் கண்டிப்பாக நினைவூட்டிக் கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணம் மேலோங்க இங்கே பதிவுக்குள் கொண்டு வருகிறேன் – அல்ஹம்துலில்லாஹ் !
Sஹமீது
பகிர்வு : செல்வி மெர்சினா த/பெ சாகுல் ஹமீது - இந்தியன் இண்டர் நேஷனல் ஸ்கூல், தமாம்
இப்போ புரிந்திருக்குமே தலைப்பில் ஏன் "இது ஒரு G3 பதிவு" என்று இட்டதற்கு !


