வர்ணச் சிக்கலை
வாழ்க்கையாகச் செதுக்கியுள்ளார்
வரை கவிஞர்
தொப்பூழ்க் கொடிச் சிக்கலைத்
தொட்டவிழ்க்காமல்
நெகிழ்த்தி
வெளியே வந்து
வாழ்க்கைச் சிக்கலில்
வீழ்கிறது குழந்தை
பெற்றோரைப் புரிந்து
புன்னகைக்கும் குழந்தை
உறவுச் சிக்கல்களில்
வீழ்ந்து மீள்கிறது
கல்வியில் சிக்கி
கரைகண்ட பின்னர்
கடைவிழியர் வலையில்
சிக்கிக் கொள்கிறது
வளைவு நெளிவுகளில்
கவனமற்றுப் போவதால்
சிக்கலாகிப் போகிறது
வாழ்க்கைப் பயணம்
துவங்கிய இடத்திற்கும்
திரும்ப முடியாமல்
தொடர்ந்து இலக்கைத்
தேடவும் இயலாமல்
சிக்கிச் சின்னாபின்னமாகி
சிதைகிறது பயணம்
இந்த
வர்ணச் சிக்கல்களுக்குள்
எத்துணை
எல்லைக் கோடுகளோ
காசாக்கும் கையெழுத்துகளோ
ஈஸீஜி தடுமாற்றங்களோ
தூக்குக் கயிறுகளோ
தேய்ந்த துடப்பங்களோ
நெடுஞ் சாலைகளோ
பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களோ
எத்துணை
நதிநீர் இணைப்புத் திட்டங்களோ
ராமர் பாலங்களோ
எத்துணை
அம்சங்களின் அடிக்கோடுகளோ
வம்சங்களின் வக்கிரங்களோ
பச்சை வயற்காட்டை வறளடடித்து
மஞ்சள் மனைக்கட்டுகளோ
நீலவானின் அமைதி குலைத்த
சிவப்பு வன்முறைகளோ
இந்த
வர்ண வழிக் கோடுகளுக்கிடையேதான்
மறைந்திருக்கிறது
வெற்றி வெள்ளைக் கோடுகளும்
சிக்கலெடுத்து
அவற்றைப் பற்றிப் பிடிப்பவர்
மீள்வர்
வர்ணங்களுக்கிடையே
சிக்கித் தவிப்பவர்
வீழ்வர்!
வாழ்க்கையாகச் செதுக்கியுள்ளார்
வரை கவிஞர்
தொப்பூழ்க் கொடிச் சிக்கலைத்
தொட்டவிழ்க்காமல்
நெகிழ்த்தி
வெளியே வந்து
வாழ்க்கைச் சிக்கலில்வீழ்கிறது குழந்தை
பெற்றோரைப் புரிந்து
புன்னகைக்கும் குழந்தை
உறவுச் சிக்கல்களில்
வீழ்ந்து மீள்கிறது
கல்வியில் சிக்கி
கரைகண்ட பின்னர்
கடைவிழியர் வலையில்
சிக்கிக் கொள்கிறது
வளைவு நெளிவுகளில்
கவனமற்றுப் போவதால்
சிக்கலாகிப் போகிறது
வாழ்க்கைப் பயணம்
துவங்கிய இடத்திற்கும்
திரும்ப முடியாமல்
தொடர்ந்து இலக்கைத்
தேடவும் இயலாமல்
சிக்கிச் சின்னாபின்னமாகி
சிதைகிறது பயணம்
இந்த
வர்ணச் சிக்கல்களுக்குள்
எத்துணை
எல்லைக் கோடுகளோ
காசாக்கும் கையெழுத்துகளோ
ஈஸீஜி தடுமாற்றங்களோ
தூக்குக் கயிறுகளோ
தேய்ந்த துடப்பங்களோ
நெடுஞ் சாலைகளோ
பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களோ
எத்துணை
நதிநீர் இணைப்புத் திட்டங்களோ
ராமர் பாலங்களோ
எத்துணை
அம்சங்களின் அடிக்கோடுகளோ
வம்சங்களின் வக்கிரங்களோ
பச்சை வயற்காட்டை வறளடடித்து
மஞ்சள் மனைக்கட்டுகளோ
நீலவானின் அமைதி குலைத்த
சிவப்பு வன்முறைகளோ
இந்த
வர்ண வழிக் கோடுகளுக்கிடையேதான்
மறைந்திருக்கிறது
வெற்றி வெள்ளைக் கோடுகளும்
சிக்கலெடுத்து
அவற்றைப் பற்றிப் பிடிப்பவர்
மீள்வர்
வர்ணங்களுக்கிடையே
சிக்கித் தவிப்பவர்
வீழ்வர்!
வரைந்தது: நூருத்தீன்
எழுதியது: சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
எழுதியது: சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

