வீரியம் குறைந்த
சூரியன் மறைந்து
மேற்கு வானிலே
தோற்கு மாலையில்
வேலையால் களைத்து
நாளைதான் முடித்து
இருக்கும் உறைவிடம்
திரும்பும் வாலிபம்
உச்சந்தலை வழி
உடலில் நீரூற்ற
உயிரும் குளிர்ந்திடும்
உணர்வோ கொதித்திடும்
வெள்ளித்திரையிலும்
சின்னத்திரையிலும்
நடித்த வாழ்க்கையை
ரசித்த வாலிபம்
மெல்லத் திறக்கின்றது
கணினித் திரையை
நல்லக் குடும்பத்திடம்
உள்ளம் கலக்க
வங்காள விரிகுடா
கரைதனில் வசிப்பவள்
வரும்வரை காத்திருக்கும்
வளைகுடா வாலிபம்
உயிருடல் இணைந்தவள்
உணர்வினில் கலந்தவள்
ஊடுறுவிப் பார்த்திட
உயிருறுகும் வாலிபம்
மின்காந்த அலைவழி
குசலம் விசாரிக்க
எந்திரக் குரல்கேட்டு
இயங்கிடும் வாலிபம்
அத்தனை அருகினில்
மொட்டென அவள்முகம்
திரைதனில் பிம்பத்தை
வருடிடும் வாலிபம்
இணையத் தொடர்பு
பலகீனப் படுகையில்
உறைந்திடும் பிம்பத்தை
முறைத்திடும் வாலிபம்
நிலையிலா செல்வம்
தொலைவிலே தேடல்
நிலையிலா வீட்டின்
தலைவாயில் போல
வளைகுடா நாடோ
உறைவிடம் யாதோ
துணையுடன் வாழ்தலே
முறைகெடா வாழ்க்கை!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
சூரியன் மறைந்து
மேற்கு வானிலே
தோற்கு மாலையில்
வேலையால் களைத்து
நாளைதான் முடித்து
இருக்கும் உறைவிடம்
திரும்பும் வாலிபம்
உச்சந்தலை வழி
உடலில் நீரூற்ற
உயிரும் குளிர்ந்திடும்
உணர்வோ கொதித்திடும்
வெள்ளித்திரையிலும்
சின்னத்திரையிலும்
நடித்த வாழ்க்கையை
ரசித்த வாலிபம்
மெல்லத் திறக்கின்றது
கணினித் திரையை
நல்லக் குடும்பத்திடம்
உள்ளம் கலக்க
வங்காள விரிகுடா
கரைதனில் வசிப்பவள்
வரும்வரை காத்திருக்கும்
வளைகுடா வாலிபம்
உயிருடல் இணைந்தவள்
உணர்வினில் கலந்தவள்
ஊடுறுவிப் பார்த்திட
உயிருறுகும் வாலிபம்
மின்காந்த அலைவழி
குசலம் விசாரிக்க
எந்திரக் குரல்கேட்டு
இயங்கிடும் வாலிபம்
அத்தனை அருகினில்
மொட்டென அவள்முகம்
திரைதனில் பிம்பத்தை
வருடிடும் வாலிபம்
இணையத் தொடர்பு
பலகீனப் படுகையில்
உறைந்திடும் பிம்பத்தை
முறைத்திடும் வாலிபம்
நிலையிலா செல்வம்
தொலைவிலே தேடல்
நிலையிலா வீட்டின்
தலைவாயில் போல
வளைகுடா நாடோ
உறைவிடம் யாதோ
துணையுடன் வாழ்தலே
முறைகெடா வாழ்க்கை!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்


