Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label ஆங்கிலப் புத்தாண்டு. Show all posts
Showing posts with label ஆங்கிலப் புத்தாண்டு. Show all posts

Silence please ! - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட்டி - தொடர்கிறது (4) 7

ZAKIR HUSSAIN | January 25, 2015 | , , , ,


ஹெச். ராஜாவுடன் பேட்டி...

ஹெச். ராஜா ‘என்ன விசயமா என்னை பேட்டி எடுக்க வந்திருக்கீங்க" You Tube -ல் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட காமெடியில்  H.Raja Comedy இருக்கிறதே சார்..அது ஒன்னு போதாதா?

ஹெச். ராஜா: அது முஸ்லீம் ஆட்களின் வேலை... இதற்கெல்லாம் முஸ்லீம்கள்  பதில் சொல்லியே ஆக வேண்டும்."

'சார் இதற்க்கு பதில் சொல்ல வேண்டியதே நீங்க தான் சார்.'

ஹெச். ராஜா' இந்த பாரதம் ரத்தம் சிந்தி / உதிரம் சிந்தி / குருதி சிந்தி சுதந்திரம் அடைந்த நாடு. அதில் மற்ற மதத்தினர் உரிமை கொண்டாடுவது தவறு. அது  முழுக்க முழுக்க அண்ணல் காந்தியின் தியாகம். காந்தி ஒரு ஹிந்து."

'சரி சார்...காந்தி சுதந்திரம் வாங்கி தந்தார்...அதற்கு ஏன் சார் உங்க ஆட்கள் அவரை ஒரு மிருகத்தை சுடுவது மாதிரி சுட்டுத்தள்ளிய கோட்சேவுக்கு சிலை வைக்கிறீங்க?...அதையும் நீங்கள் எல்லாம் ஆதரிக்கிறீர்கள்.? கோட்சே...ஒரு ஆர் எஸ் ஏஸ் மெம்பர்  என்பதால் கோட்சேவுக்கு இவ்வளவு மரியாதையா?


அடுத்து  ஜாலியன் வாலாபாக்  படுகொலையை நிகழ்த்திய ஜெனரல் டையருக்கு சிலை வைப்பீர்களா?..

ஹெச். ராஜா: எங்கள் ஆட்சியில் ஜெனரல் டையருக்கும் சிலை வைப்போம்.

'சார்... அவன் ஒரு வெள்ளைக்கார நாய்... நம் நாட்டு சீக்கிய சகோதரர்களையும் சகோதரிகளையும் ஏறக்குறைய 2000 பேர் [அதில் ஹிந்து / முஸ்லீம் மக்களும் சேர்ந்திருந்தனர்] ..கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி சுட்டுத்தள்ளப்பட்டனர். அத்தனை உயிர்களும் தப்பிக்க நினைத்தும், சுவற்றில் ஏற முயற்சித்த போதும் அனைவரும் பிணமாக விழுந்தனர்..பிரிட்டீஸ் நாய்களின் துப்பாக்கிக்கு...அந்த கொடுமையை செய்த ஜெனரல் டையருக்கு சிலை வைப்பீர்களா?...

ஹெச். ராஜா: எங்கள் ஆட்சியில் சிலை வைப்போம்... உங்களுக்கு என்ன பிரச்சினை... போய் பாருங்கள்...பென்னி குயிக் என்ற வெள்ளைக்காரனுக்கு சிலை வைக்கும்போது ஜெனரல் டையருக்கு வைத்தால் என்ன...??

பென்னி குயிக் தனது சொத்து அனைத்தையும் விற்று இந்தியர்கள்... குறிப்பாக தமிழர்கள் விவசாயம் செய்யவும், குடிதண்ணீருக்கு கஷ்டப்படாமல் இருக்கவும் அணை கட்டியவர்... அவரைப் போய் ஜெனரல் டையருக்கு ஒப்பிடுவது எப்படி உங்களால் முடிகிறது..?

ஹெச். ராஜா: நான் எது செய்தாலும் முஸ்லீம்கள் / கிறிஸ்தவர்களுக்கு பிடிக்காதே..

ஜாலியன் வாலாபாக் படுகொலையில்  நிறைய சீக்கியர்கள் மரணம் அடைந்திருக்கினர்.

ஹெச். ராஜா: ஜாலியன் வாலாபாக்கில் இறந்தது சீக்கியர்கள் அல்ல.. சீக்கியர்கள் இந்திய விடுதலைக்கு பாடுபடவில்லை.

அப்டீனா... பகத் சிங் [பஞ்சாப் சிங்கம்] போன்ற விடுதலை வீரர்கள்...??

ஹெச். ராஜா':  யோவ் அவன் சீக்கியர் அல்ல... அவன் பெயர் “பகவதி S/O சிங்காரம்”... எங்க ஊர் பக்கம்தான் அவன்…… சீக்கியர்கள் தனக்கு விளம்பரம் தேடி அப்படி பெயரை மாற்றிவிட்டனர்.

சரி இதற்கு மேல் எங்களை கோபாலபுரம் அழைப்பதால் ....கோபாலபுரம் நோக்கி பயணம்.

முன்னால் முதல்வர் கலைஞர் தனது உடன் பிறப்புக்கு கடிதம் எழுத பேப்பர் தேடிய நேரம்... நாங்கள் போவதற்கும் சரியாக இருந்தது.

ஐயா... சமீபத்தில் இலங்கையில் ஆட்சி மாறிய போது தமிழர்கள் இனிமேல் சந்தோசமாக வாழ புதிய ஆட்சி வழிவகுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கீங்களே..?

கலைஞர் :நான் சொன்னேன்...என் தமிழ் என்னை சொல்ல வைத்தது...எங்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இருக்கும் உறவு...துணிக்கும் / கொடிக்கும் இருக்கும் உறவு. நரம்புக்கும் சதைக்கும் இருக்கும் உறவு...ஒன்றோடு ஒன்று எப்போதும் ஒட்டியே இருக்கும்.

அவர்களுக்கு குரல் கொடுக்க நானும் கழகமும் எப்போதும் முன்னால் நிற்கும்...புறமுதுகு காட்டி ஒடாது.

அப்டீனா முல்லிவாய்க்காலில் சிங்கள ராணுவம் அப்பாவி இளைஞர்களை சுடும்போது உங்களுக்கு / உங்கள் கழகத்துக்கும் குரல் கட்டியிருந்துச்சா?

கலைஞர் 'இல்லை...இது சில புல்லுருவிகளின் கூற்று. நான் அலுவல் காரணமாக தலைநகரம் டெல்லியில் இருந்தேன். அப்போது கழக்கண்மனிகள் கணிமொழிக்கும் / அழகிரிக்கும் அமைச்சர் பதவி கிடைக்க வேண்டிய தருணம். அதை தவற விட்டால் தமிழ்நாட்டுத்தமிழர்கள் சோற்றுக்கு வழியில்லாமல் சோம்பி விடுவார்களே என்ற ஆதங்கம் கழகத்தை இதுவரை காப்பாற்றும் எனக்கு இருக்காதா?.

சரி ஐயா...இனிமேல் உங்களின் பணி ஒய்வில் யார் உங்கள் கழகத்தை நடத்தி செல்வார்கள்...?


கலைஞர் :அது நிச்சயம் என் குடும்பத்தில் உள்ளவர்கள் இருக்க மாட்டார்கள். செயலாளர் ஸ்டாலின் இருக்களாம். முன்னால் அமைச்சர் அழகிரி இருக்களாம். முன்னாள் அமைச்சர் தயாநிதி இருக்களாம். ஏன் மகளிருக்கும் ஆட்சி அதிகாரம் உண்டு என்று குரல் கொடுக்க கனிமொழியே வரலாம். இதில் என் குடும்பம் இல்லை ..பெரியாரும் அண்ணாவும் கட்டிக்காத்த கொள்கை பிடிப்புள்ள இந்த இளைஞர்களே இனிமேல் தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றும் தன்னிரகரில்லா தலைவர்கள்.

ஸ்ஸப்பா முடியலே...என்று ஒட்டம் எடுத்தோம்.

விஜய்காந்த் வீட்டுக்கு...


அங்கு போனவுடன் அவரது மனைவி 'அவர் இப்போது வீட்டில் இல்லை... எதாவது கேள்வி கேட்பதாக இருந்தால் என்னிடமே கேளுங்கள்...பொதுக்கூட்டங்களில் கூட அதிகம் பாயின்ட் எடுத்துச்சொல்லி நான் தான் பேசுகிறேன். என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒருவர் தடியான உருவத்துடன் கருப்பாக / தலை முடியில் கலர் "டை"அடித்து  கண் சிவக்க ..."டேய் ..எனக்கு தமிழிலில் பிடிக்காத வார்த்தை "கேள்வி"...ஓடிப்போய்டு...இங்கே ஏன் வந்தே...உனக்கு சம்பளம் தர்ரவன்ட்ட போய் கேள்வி கேளுடா' என்று நாக்கை துறுத்திக்கொண்டு அடிக்க கையை ஓங்கினார்...

எங்களுக்கு சந்தேகம் தான் விஜய்காந்த் வீட்டில் இல்லை என்று சொன்னார்களே... இவர் இப்படி விஜய்காந்த் மாதிரி பேசுராறே...ச்சே இருக்காது... உங்களுக்கு ஏதாவது வெளங்குதா ???

விட்டோம் ஜூட்...

ZAKIR HUSSAIN

Silence please ! - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட்டி - தொடர்கிறது (3) 10

அதிரைநிருபர் பதிப்பகம் | January 15, 2015 | , , , ,

"ஆம் ஆத்மி கட்சியைப் பற்றி உங்கள் கருத்து என்ன?"

"ஆம் ஆத்மி கட்சி ஓர் ஆறிப்போன ஆனியன் பச்சி! சரக்குக்குத் தொட்டுக்கொள்ளும் சைட் டிஷ்ஷாகத்தான் நாட்டின் 'குடி'மக்கள் அதைப் பார்க்கிறார்கள். அர்விந்த் கெஜ்ரிவால் பெயரில்கூட வாலை ஆட்டாமல் இருக்க கெஜட்டில்கூட அவர் பெயரை 'அறுந்தவால் கெஜ்ரி' என்று மாற்றம் செய்யப் பரிந்துரைக்கப் போகிறோம். காமெடி ட்றாக்குக்குக் க்ளைமாக்ஸில் என்ன வேலை என்பதை அவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பெட்டிக்கடை வைக்கப் போதுமான முதலை மட்டும் போட்டு கட்சி ஆரம்பித்தால் இப்படித்தான் ஜாமீன் எடுக்கக்கூட காசில்லாமல் சிறைச்சாலையில் கிடந்து நொந்து நூடுல்ஸ் ஆகி அங்கு கொடுத்தத் தொப்பியைக்கூட விடாமல்  லவட்டிக்கொண்டு வந்து கட்சிக்காரர்களிடம் கொடுக்க வேண்டி வரும். ஜனநாயகம் என்பது எவ்வளவு செல்வ செழிப்பான சித்தாந்தம் என்பது பா ஜ கவுக்கு மட்டுமே தெரிந்த மந்திரம்.

தலைநகரை குஜராத்துக்கு மாற்றும் வரைத்திட்டம் தயாரானதும் டெல்லியே 'ச்சப்'பென்று போய்விடும்; ஆம் ஆத்மி எம்மூத்திரம்...ஸாரி எம்மாத்திரம்?

ஃபயர் ப்ரூஃப் ரயில்கள் கோத்ராவில் ஓடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை என் சொந்தக் கருத்தாகப் பதிகிறேன்.

ஜெய் மோடி!

"காங்க்ரஸ்?"

"அது ஒரு காலாவதியாகிப்போனக் கட்சி. 'கட்சியை சீர்படுத்த வேண்டிய தருணம் இது' என்று ப.சிதம்பரம் பேட்டி கொடுக்கிறார். அடிபட்டால் சீர் படுத்தலாம்; வயசாகிப்போனால்? சுயநல அரசியலால் செத்துவிட்டது காங்க்ரஸ். மக்களும் மறந்து விடுவார்கள். க.கெ.பி.சூ.ந.? கல்வெட்டுகளில் மட்டுமே இனி காங்ரஸைப் பார்க்க முடியும்.

அதிலும் தமிழக காங்ரஸ்ஸைப்பற்றிச் சொல்லவே வேண்டாம். ஈவிகேஎஸ் இளங்கோவன்...ஒரு நிமிஷம், அவர்தானே இந்த நிமிடம்வரைத் தலைவர்? ஏன் கேட்கிறேன் என்றால் கோஷ்டிச் சண்டைக்குப் பெயர்போன த.கா. எந்த நேரம் வேண்டுமானாலும் இவர் காலை வாரலாம். மேட்டருக்கு வாறேன். ஈவிகேஎஸ் ஒரு அப்பிராணி. காலைல எழுந்தமா கருத்துச் சொன்னமா கம்பி நீட்டினமா என்று அமைதி அரசியல் செய்பவர். காமராஜர் மந்திரக்கோல் இனி கதைக்காகாது; கருப்பு வெள்ளைப்படம் கலராகாது. தற்காலத்தில் உள்ள தலைவர்கள் பெயரை முன்வைத்து மக்களைச் சந்தித்தாக வேண்டிய கட்டாய தருணம் இது. ஆனால், ஐயகோ அந்த ஆள் வாசனுக்கு காங்ரஸ்மீது என்ன காண்டோ தெரியல, தன் தகப்பனார் வழியான மூப்பனார் வழியில் த.காவை டர்ரென்று கிழித்து த.மா.கவை விட்ட இடத்திலிருந்து மீண்டும் துவக்கி விட்டார். உடனே ஆச்சியைப் பிடிக்க காரைக்குடி போய்விட்டதாக எங்கள் தமிழகத்தின் தலைவி, தலையைச் சரியாக வாரிக்கொள்ளக்கூட நேரமில்லாத அம்மா நம்பர் 2 தமிழிசை சொல்லியிருக்கிறார்கள். டெல்லி ஆட்சிக்கும் காரைக்குடி ஆச்சிக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பும் காங்ரஸ்லாம் ஒரு கட்சியா?"

"பேச்சு பேச்சாக இருக்க சந்தடி சாக்கில் 'தலைநகரைக் குஜராத்துக்கு மாற்றப்போவதாகச் சொன்னீர்களே... என்ன திடீர்னு?"

"நான் அப்படிச் சொல்லவே இல்லை. நீங்கள்தான் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்.

"ஙே!"

அந்தர் பல்ட்டி பதில்களை அடுத்ததாக வேறு யாராவது தொடருங்களேன், பளீஸ்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

Silence please ! - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட்டி - தொடர்கிறது (3) 13

அதிரைநிருபர் பதிப்பகம் | January 08, 2015 | , , , ,

கேப்பையில் நெய் வடியும் பதில்கள் தொடர்கின்றன….

“தமிழ்நாட்டில் 2016ல் உங்கள் ஆட்சிதான் அமையும் என்று முழங்கி வருகிறீர்களே. என்ன வியூகம் வைத்திருக்கிறீர்கள்?”

“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அலை அடியோ அடியென்று நாடு முழுக்க அடித்தாலும் தமிழ்நாட்டில் மட்டும் அம்மா புயலால் மோடி அலைக்கு மவுசு இல்லாமல் போய்விட்டது.  இந்தக் கசப்பான உண்மைக்குத் தேன் தருவதுபோல் அமைந்து விட்டது அம்மாவின் சொத்துக் குவிப்பு வழக்கிற்கான தீர்ப்பு.  அது தீர்ப்பல்ல, தீர்த்துக்கட்டிய ஆப்பு.  அதனால், தற்போது தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது. அதை நிறப்ப எங்களைப்போன்ற தேசியக் கட்சியால்தான் முடியும்.  கடந்தத் தேர்தலில் ஒரு சாம்ப்பிளுக்காகக் கூட்டணி சேர்த்துக்கொண்ட அல்லக்கைக் கட்சிகளுக்கு ‘கொட்டி அழுதது’ போதும் என்ற முடிவுக்கு வந்து, தமிழ்நாட்டில் தேர்தல் தோல்விக்குத் தார்மீக பொறுப்பேற்றுக் கொள்ளச் சொல்லி கொடுத்த நிதியைத் திருப்பிக் கேட்டோம். ஆனால், அவர்கள் என்ன சூப்பர் ஸ்டாரா, படம் ஓடலேன்னா காசை திருப்பித் தர? மறுத்தது மட்டுமல்லாமல் எங்களைக் கேள்விகள் கேட்டு தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கி  அவர்களுக்கும் எங்களுக்கும் இனி எந்த காலத்திலும் கூட்டணி கொண்டாட்டம் ஏற்படாத வகையில் கொட்டகையைத் தகர்த்து விட்டார்கள்.

எனவே, எதிர்வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் தனித்தே நின்று, தாய் இல்லாமல் தளர்ந்து போய் நிற்கும் இலைக் கட்சியையும் தகப்பனார் தனயன்கள் சண்டையால் தகர்ந்து மண்ணோடு மண்ணாகக் கல்ந்து விட்ட அஸ்தமன சூரியன் கட்சியையும் இலகுவாகத் தோற்கடிப்போம்.  காங்கிரஸ் என்றொரு புராதனக் கட்சி இருந்ததை மக்களும் மறந்து விட்டிருப்பார்கள்.  மோடி உள்ளிட்ட கட்சித் தலைவர்களை வரவழைத்து நிறைய பொதுக்கூட்டங்கள் நடத்துவோம். சினிமா நடிகைகளை விட்டு ஓட்டு சேகரிப்போம். சு.சாமியை மட்டும் இங்கு அனுப்ப மாட்டோம். ஏனெனில், அவருக்கு ஏர்ப்போர்ட்டில் வைத்து துணியைத் தூக்கிக் காட்டிய மகளிர் அணியை இதுவரை மறக்க முடியவில்லை.  நடு ராத்திரியில் எழுந்து அலங்கமலங்க முழிக்கும் வியாதி இன்னும் அவரை விடவில்லை.  எனவே, அவர் இம்முறை தமிழகத்திற்கு வந்தால் அரவாணிகளைக் கொண்டு திரும்பி நின்று வரவேற்கும் திட்டம் ஆளும் கட்சியிடம் இருப்பதாக உளவுத்துறை செய்திகள் தெரிவிக்கின்றன. அப்படி ஏதும் நடந்தால் அதைத் தாங்கும் சக்தி சு.சாமிக்கு இல்லை. 

இன்னும், வாக்குச்சீட்டின் விலையை இம்முறை ரகசிய ஏல முறையில் தீர்மாணிப்பது என்று உள்கட்சி பேச்சுவார்த்தையில் முடிவெடுத்து இருக்கிறோம். இந்த வியூகங்களைக் கொண்டு வெற்றியை உறுதி செய்து ஆட்சியைக் கைப்பற்றுவோம்.”

"எலெக்ஷனுக்காக மட்டுமே கறிவேப்பிலையைப் போல தமிழக பிராந்தியக் கட்சிகளை உபயோகித்து விட்டுத் தேர்தல் முடிந்ததும் தூக்கிக் கடாசி விட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுகிறதே?"

"பிரதான பிராந்திக் கட்சியான... மன்னிக்கவும், சான்ஸ்கிரிட்னா சரளமா பேசிடுவேன், டமிள் பேசும்போதுதான் சற்று டங் ஸ்லிப்பாயிடுது... பிரதான பிராந்தியக் கட்சியான தேதிமுக-வுடனான கூட்டணி தள்ளாடியது உண்மைதான்.  ஆனால், அதற்கு முழுக் காரணமும் அக்கட்சியின் தலைவர் விஜய்காந்த்தான். அவர் பழக்க தோஷத்தில் எங்கள் கட்சி ஆட்களையும் ஆதரவாகப் பேசுவதாகச் சொல்லி படார்னு அடிச்சிடறார். எங்காட்கள் டெல்லிக்கு வந்து அழறாங்க. குவாட்டரும் கோழி பிரியாணியும் குத்தாட்ட நிகழ்ச்சி ஒன்றும் லைவ்வா காட்டி அவர்களைக் கூல் பண்ணி அனுப்பிவிட்டு, "ஏன் அடிச்சீங்க?"ன்னு கேட்டா, "நானா? அடிச்சேனா? மீடியா கிராஃபிக்ஸ்ல காட்றதையெல்லாம் நம்பாதீங்க"ன்றார். கிராஃபிக்ஸ்னா "இவர்களுக்கு முதுகு எப்படி வீங்கியது?" என்னும் கேள்வி, பதில் அளிக்கப்படாமல் இன்னும் நிலுவையில் நிற்கிறது.

இது இப்படி இருக்க, ம.தி.மு.க.க்காரர் 'ஆன்னா ஊன்னா' சென்னைலேர்ந்து கெளம்பி மோடி எங்கிருந்தாலும் தேடி நடையா நடந்தே வந்துட்றார். நாட்டு நலனுக்காக எந்தத் திட்டத்தைச் சொன்னாலும் உடனே எதிர்த்துக் கருப்புக்கொடி காட்டிடறார். அதுக்குத் தோதா எப்போது பார்த்தாலும் தோளில் ஒரு கருப்புத் துண்டை போட்டுக்கிட்டே அலைகிறார். இலங்கையில் நடத்த வேண்டிய கட்சியை இந்தியாவில் நடத்துகிறார். என்னெத்தச் சொல்ல?

அப்புறம் அந்த பா ம க. பணப்பெட்டியைக் கொடுத்ததும் பழக்க தோஷத்தில் படப்பெட்டியைத் தூக்கிட்டு ஓடின மாதிரி ஓடிப்போனவங்கதான். அப்புறம் காணவே இல்லை.

இந்த ‘அண்ட் சோ ஆன்’ புள்ளிகள் மாதிரியான கட்சிகளோடு கூட்டணி வைத்தது நங்கள் செய்த வரலாற்றுப் பிழை.

இனி, நாங்கள் தனித்தே போட்டியிட்டு தமிழகத்தைக் கைப்பற்றுவோம்.

உங்கள் கட்சி மற்றும் உங்களை ரிமோட்டில் இயக்கும் தீவிரவாத் இயக்கங்கள் எதற்கும் தமிழில் பெயர் இல்லாதபோது உங்கள எப்படி தமிழகம் ஆதரிக்கும் என்கிறீர்கள்?”

“குதர்க்கமாகவும் உள்நோக்கோடும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்பதை முதலில் தெளிவு படுத்தி விடுகிறேன்.  எங்களை எந்தத் தீவிரவாத இயக்கமும் இயக்கவில்லை என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவர்.  பாரத்ய ஜனதா பார்ட்டி, ராஷ்ட்ரிய சுயசேவக் சங், பஜ்ரங் தள், விஷ்வ ஹிந்து பரிக்ஷத் போன்றவை மிக சாதுவான இயக்கங்கள்.  இந்த அனைத்து கட்சிகளிலும் தமிழை உயிர் மூச்சாய்க் கொண்ட தமிழர்களே இருக்கும்போது தமிழகம் ஏன் ஏற்காது?  தமிழகத்தின் மகா பிரபலங்கள் கங்கை அமரன், நெப்போலியன் போன்றோர் பாஜகவில் இணைந்ததற்கான காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்?  திராவிடக் கட்சிகளில் பல ஒருத்தரை ஒருத்தர் வெட்டிக் கொள்வதாலும், சில டாலர் மற்றும் ஈரோவுக்கு ஆசைப்பட்டு இலங்கையில் அரசியல் நடத்துவதாலும், தமிழ காங்க்ரஸில் இருந்த உருப்படியான ஒரே தலைவர்கூட தன்னோடு சேர்த்து எஞ்சியிருந்த 20,30 காங்க்ரஸ்காரர்களையும் இழுத்துக் கொண்டு தனிக் கட்சி துவங்கிவிட்ட படியாலும் இனி, பாஜக மட்டுமே தமிழர்களுக்கான ஒரே ஆபத்பாந்தவன் என்பதை உணர்ந்துதான் இந்த இரண்டு மெகா ஸ்டார்களும் பாஜகவில் இணைந்தனர் என்பது உல்லங்கை நெல்லிக்கனி.”

“ஆம் ஆத்மி கட்சியைப் பற்றி உங்கள் கருத்து என்ன?”
தொடரும் *ஹிஹி*
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

Silence please ! - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட்டி - தொடர்கிறது (2) 7

அதிரைநிருபர் பதிப்பகம் | January 03, 2015 | , , ,

அல்ட்டிமேட் கேள்வி பதில் நிகழ்ச்சி தேமே என்று தொடர்கிறது... (2)

நாட்டில் விலை வாசியைக் குறைப்போம், கட்டுக்குள் வைப்போம் என்றீர்களே?”

சொன்னோம், இல்லை என்று சொல்லவில்லையே.  ஆனால், அதற்கான துவக்கம் யாரிடமிருந்து வரவேண்டும் என்று சிந்தித்தீர்களா? பொறுப்பான வாக்காளப் பெருமக்களிடம் இருந்தல்லவா வரவேண்டும்.  வந்ததா? இல்லையே!  வரலாற்றின் ஏடுகளைப் புரட்டிப் பாருங்கள். 20 வருடங்களுக்கு முன் ஒரு பிரியாணி பொட்டலத்திற்கும் குவாட்டருக்கும் விற்ற வாக்குகளை 10 வருடங்களுக்கு முன் 100க்கும் 200க்கும் விற்றார்கள்.  ஆனால், கடந்த தேர்தலில் நடந்ததென்ன? ஒரு வாக்கு 1,000 ரூபாய் வரை விலை போனதை வரலாறு, சரித்திரம், பூகோலம், புள்ளியியல், பெளதிகம், மெஞ்ஞானம் என்று எல்லா துறைகளும் பதிவு செய்து வைத்துள்ளன.  நாட்டில் விலைவாசி கூடினாலும் அதை லஞ்சம் வாங்கியோ கொள்ளை லாபம் சம்பாதித்தோ ஊரை அடித்து உலையில் போட்டோ கந்து வட்டியில் சம்பாதித்தோ பொதுமக்கள் சமாளிக்கவே செய்கிறார்கள்.  ஆனால், விலை கூடிப்போன வாக்குச்சீட்டை வாங்கி ஜெயிப்பதற்குள் நாங்கள் பணப்பெட்டிகளோடு லோல்பட்டதையும் அதை விநியோகிக்க பட்ட அவதிகளையும் யார் அறிவர்? இலைக்கு ஓட்டுப்போடச்சொல்லி காசு கொடுத்தக் காட்சிகளை கலைஞர் தொலைக்காட்சியும்; சூரியனுக்கு ஓட்டுப் போடச்சொல்லி காசு கொடுத்தக் காட்சிகளை ஜெயா தொலைக்காட்சியும் மாறிமாறி காட்டிக்கொண்டிருந்த சந்தடி சாக்கில்தான் எங்களால் தேர்தல் கமிஷனுக்கு டிமிக்கிக் கொடுத்து வாக்குச்சீட்டுகளை வாங்க முடிந்தது.  

அது மட்டுமா? விலைவாசி ஏறிப்போனாலும் ‘ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம், இரண்டு வாங்குங்கள் மூன்றைப் பெருங்கள், 25%, 50% தள்ளுபடி, ஆடித் தள்ளுபடி, பரிசுக் கூப்பன்கள் போன்ற சலுகைகளை பொதுமக்கள் அனுபவிக்கிறார்கள். ஆனால், ஓர் அப்பா ஓர் அம்மா வாக்குகளுக்கு ஒரு மாமியார் வாக்கு இலவசம் என்றோ, ஐந்து வாக்குகளுக்கு மேல் ஒரு குடும்பத்தில் இருந்தால் நான்கு வாக்குகளுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும் என்றோ ஏதாவது சலுகைகளை வாக்காளர்கள் கொடுத்தார்களா? உண்மை இப்படி இருக்க விலைவாசி உயர்வைப் பற்றிப் பேச இவர்களுக்கு என்ன அறுகதை இருக்கிறது?”

கட்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று வாக்குறுதி கொடுத்தது?”

அதைப் பற்றிப் பேசத்தான் மகிலா ராஜபக்ஷேவை விருந்துக்கு அழைத்தோம். ஆனால், நீங்கள் தாம்  தூம் என்று குதித்து அவருக்கு எதிராகக் கருப்புக்கொடி காட்டினீர்கள். ராஜபக்ஷேவின் கோரைப்பல் வழியாக தமிழ் ரத்தம் வழிவதும்போலவும் தமிழர்களைக் கண்டால் அவர் நாக்கைச் சப்புக் கொட்டுவதுபோலவும் கேலிச்சித்திரம் வரைந்து கேவலப்படுத்துகிறீர்கள. அதனால், ராஜபக்ஷே கோபித்துக் கொண்டு ஒரு கட்டன் ச்சாயாகூட குடிக்காமல் போய்விட்டார்.  ஒன்றையாவது ஒழுங்காகச் செய்ய விடுகிறீர்களா? சைக்கிளோ பைக்கோ இல்லாமல் நடந்தே போராடும் வைக்கோ, கோபக்கார சீமான் போன்றோர் “ராஜபக்ஷேவிடம் எந்த பேச்சு வார்த்தையும் வைத்துக்கொள்ளக்கூடாது, பச்சத்தண்ணிகூட புழங்கக்கூடாது, பெண் எடுக்கவோ கொடுக்கவோ கூடாது, நாட்டைவிட்டு தள்ளி வைக்கனும்” என்று மீடியா மைக்குகளில் நாட்டாமை பண்ணிக்கொண்டே இருந்தால் நாங்கள் எப்படி கட்சத்தீவை மீட்பது? ராஜபக்ஷேவை ஐஸ் வைத்துத்தான் மீட்க முடியும். அதில் நாங்கள் கில்லாடிகள். பொறுத்திருந்து பாருங்கள். இலங்கைத் தேர்தலுக்குப் பிறகு ராஜபக்ஷேவின் ஆதரவுக் கூடிப்போய், “முல்லிவாய்க்கால் மோடி” என்கிற புனைப்பெயரோடு “குஜராத்தின் ராஜபக்ஷே”வாகிய எங்கள் தலைவருடன் ஒத்துழைப்பார்.”

பொருளாதார வளர்ச்சி எவ்வாறு உள்ளது?”

சொல்லிக்கொள்கிற மாதிரி ஒன்றும் கூடுதலாக இல்லை என்றாலும் அவ்வளவு மோசமென்றும் சொல்ல முடியாது. சொந்த கிராமத்தில் 45 ஏக்கர் நஞ்சை 78 ஏக்கர் புஞ்சை வாங்கிப்போட்டிருக்கிறேன். எங்கள் மாவட்டத்தின் முக்கிய இடத்தில் ஹைப்பர் மார்க்கெட்டுடன் கூடிய ஒரு வணிக வளாகம் கட்டி மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்கிறேன். கல்விப்பணியாற்றும் பரம்பரையில் வந்த நான் இரண்டு எஞ்ஜினியரிங் காலேஜ் மற்றும் ஒரு மருத்துவக்கல்லூரியும் கட்டி கல்வித் தொண்டாற்றுகிறேன். தாய்க்குலங்களின் கனவை நனவாக்க ஒரு பிரமாண்ட நகைக்கடை கட்டிக்கொண்டிருக்கிறேன். காங்க்ரஸ்காரர்களைப் போல ஸ்விஸ் வங்கிகளில் கொண்டுபோய் நம் நாட்டுப் பணத்தைப் பதுக்காமல் இங்கேயே  7 வங்கிகளில் கணக்கு வைத்து கணிசமானத் தொகையை நாட்டு நலனுக்கு அரசு உபயோகப்படுத்த ஏதுவாக நிலையான கணக்கில் போட்டு வைத்துள்ளேன், இன்னும்….”

(குறுக்கிட்டு) “மன்னிக்கவும், நான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றியல்லவா கேட்டேன்?”

(அப்ப நானாத்தான் உளறிட்டேனா?) கேள்விகளைத் தெளிவாகக் கேளுங்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சி எங்கள் ஆட்சியில் அமோகமாக் இருக்கிறது. முந்தைய ஆட்சியில் அதளபாதாளத்தில் வீழ்ந்து கிடந்த நாட்டின் பொருளாதாரம் எங்கள் ஆட்சியில் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. 8.134689423 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. மக்களின் வாங்கும் திறன் கூடியுள்ளது. அரசியல்வாதிகளின் ‘வாங்கும்’ திறனும் கூடியுள்ளது. அதற்கு ஏதுவாக, மக்களின் ‘கொடுக்கும்’திறனும் கூடியுள்ளது. வங்கிகள் குறைவான வட்டிக்கு கடன் தருகின்றன. கொடுத்தக் கடனைத் திருப்பி கேட்பதற்கான வழிமுறைகளில் மாற்றங்கள் செய்து, குண்டர்களை நீக்கிவிட்டு நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட கராத்தே வீர்ர்களை பணி அமர்த்தியுள்ளோம்.  கரசேவகர்களையும் இந்த வேலையில் இணைக்க திட்டங்கள் தீட்டி வருகிறோம்.  அவர்களால்தான் கடனை வசூலிக்க சுவர்களை உடைத்து உள்ளே இறங்க முடியும்.  கடப்பாரை, மண்வெட்டி, சுத்தியல் போன்ற உபகரணங்களும் கத்தி, வாள் போன்ற ஆயுதங்களும் உபயோகிப்பதில் அவர்கள்தான் கைதேர்ந்தவர்கள் என்பது பாபர் முதல் ராமர் வரை நாடே அறியும். நாட்டின் அபரித பொருளாதார வளர்ச்சியைக் கண்ட மேலை நாடுகள் அவர்கள் தொழிற்சாலைகளை நம் நாட்டில் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.  அந்நிய முதலீடு கூடி வருகிறது. இனி எக்காலத்திலும் காங்க்ரஸ் ஆட்சிக்கு வரவே வராது என்னும் பட்சத்தில் பொருளாதாரம் பூரண வளர்ச்சிப் பெற்று நாட்டில் சுபிட்சம் நிலவும்.”

தமிழ்நாட்டில் 2016ல் உங்கள் ஆட்சிதான் அமையும் என்று முழங்கி வருகிறீர்களே. என்ன வியூகம் வைத்திருக்கிறீர்கள்?”

அசத்தல் பதில்கள் தொடரும். (ஹிஹி)

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

Silence please ! - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட்டி 21

அதிரைநிருபர் பதிப்பகம் | January 01, 2015 | , , ,

கேள்விகள் கேட்பது கேணைக்கிறுக்கன்; பதில்கள் பா ஜ க (பாவிகள் ஜனரஞ்சக கட்சி)

"ரூபாயின் மதிப்பை உயர்த்துவோம் என்றீர்களே?"

"கர் வாபஸ்" என்னும் மூளைச் சலவை மூலம் வேலையில்லாமல் ஓய்வில் இருக்கும் கரசேவகர்களைக் கொண்டு ஏற்கனவே பல வருடங்களுக்குமுன் இந்துவாக இருந்த முஸ்லீம் மற்றும் கிறித்துவர்களைக் கட்டாய மதமாற்றம் செய்து இந்து மதத்திற்குள் கொண்டு வருகிறோம். ஆயினும், இந்து என்பது ஒரு மதமல்ல. இப்படியாக இந்துக்கள் எண்ணிக்கைக் கூடக்கூட ரூபாயின் மதிப்பும் கூடும்.

"மதச்சார்பின்மைக்கு பங்கம் வராது. யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்றீர்களே?"

"ஆமாம், இப்பவும் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம்! முஸ்லிம்கள் பக்ரீத் கொண்டாடவும் கிறித்துவர்கள் சர்ச்சுக்குப்போகவும் அனுமதிக்கவில்லையா? என்ன குருட்டுத்தனமான கேள்வி இது? எல்லா இந்து ஆலயங்களையும் புணரமைக்க கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது எதற்காக என்று நினைக்கிறீர்கள்? 2025ல் இந்தியா இந்துக்கள் நாடாகும்போது மதச்சார்பின்மை முற்றிலும் அமலுக்கு வந்திருக்கும். 10 ஆண்டுகளில் நிரந்ரதர பா ஜ க ஆட்சி இதைச் சாதிக்கும்!"

"நதிநீர் இணைப்பைச் சாத்தியப்படுத்துவோம் என்றீர்களே?"

"நதியில் தண்ணீருக்குப் பதிலாக சாக்கடை ஓடினால் எப்படி இணைக்க முடியும்? கர்நாடகக் கலாச்சாரச் சாக்கடையோ கேரளத்து சக்கப்பழ அசுத்தங்களோ காவிரி வழியாகவோ முல்லைப்பெரியாறு வழியாகவோ தமிழ்நாட்டிற்குள் வந்து நோய் பரப்பினால் விடுவீர்களா? அதனால்தான் முதலில் கங்கையைச் சுத்தப்படுத்துகிறோம். 
அதுபோக காசு மிச்சமிருந்தால் எல்லா நதிகளையும் இணைத்து உபரி நீர் கடலுக்குள் செல்லாமல் நாட்டுக்குள்ளேயே உபயோகப் படுத்த ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் திட்டம் வகுக்கிறோம். ரஜினி காந்த் தருவதாகச் சொன்ன ஒரு கோடியை வைத்துதான் பிள்ளையார் சுழி போடுவோம். "

"காந்தியைக் கொன்ற கோட்ஸேவைத் தேசபக்தன் என்கிறீர்களே, இதை ஏன் தேர்தலுக்கு முன் சொல்ல தைரியம் இல்லை?"

"யார் சொன்னது தேர்தலுக்கு முன்பதாகச் சொல்லவில்லை என்று? நாங்கள் ரகசியக் கூட்டங்களிலும் உயர்மட்ட கலந்தாய்வுகளிலும் எங்களுக்குள் சொல்லிக்கொண்டுதான் வருகிறோம். ஊடகங்கள்தான் அதை மக்களுக்கு எடுத்துச்செல்லத் தவறி விட்டன. நாங்கள் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம். கோட்ஸே செய்த கொலை குற்றத்திற்காக அவருக்குத்தான் மரண தண்டனை நிறைவேற்றியாகிவிட்டதே! அதற்கு மேலும் கோட்ஸேவுக்கு அவர் தொண்டர்கள் சிலை வைப்பதை ஏன் தடுக்க வேண்டும்? ரெட்டை வேடம் போட்ட காந்தியைச் சுட்டதும் கரசேவைக்கு ஒப்பான ஒரு தேசத் தொண்டுதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்."

"காணாமல் போய்விட்ட சமஸ்கிருதத்தைப் பள்ளிப்பாடங்களில் புகுத்தி இந்துத்துவாவை எல்லா மதத்தின் மாணவர்களும் படிக்க வேண்டும் என்று..."

" நிறுத்துங்கள். சமஸ்கிருதத்தில் அதிகமதிகம் தாய்குலத்திற்குத் தேவையான சமையல் குறிப்புகளும் பள்ளிச் செல்லும் பாப்பாக்களுக்கு அம்புலிமாமா கதைகளும் மட்டும்தான் இருக்கின்றன. இந்துத்வா மலிந்து கிடப்பதாகச் சொல்வதெல்லாம் காங்ரஸ்காரன் கிளப்பிவிட்ட புரளி.

சமஸ்கிருதம் ஒரு புனிதமான மொழி என்பதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்?"

"வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப்பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்களின் பெயர் பட்டியலை வெளியிடுவோம் என்றும் பதுக்கிய பணத்தை மீட்போம் என்றும் சூளுரைத்தீர்களே?"

"இப்போதும் அதையேதான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். காங்ரஸைப் போல பேச்சை மாற்றி பேசமாட்டோம். பட்டியல் தயாராக இருக்கிறது. பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. படிஞ்சதும்... ஐ மீன், முடிஞ்சதும் வெளியிடுவோம்"

சீஸன்சுக்கு ஏற்ற மாதிரி கேள்விகள் தொடரும்

(இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்டவை யாவும் கற்பனையே அல்ல. இந்த பதில்கள் யாரையும் புண் படுத்தியிருந்தால் "ரோஷக்காரன்"தான் என்று மெச்சிக்கொள்ளவும்.)
தொடரும்...
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு