இந்த மழலையைப் பார்க்கும் உலகிற்கு
நாமும் பயணிப்போம் மழலையின்
விழி வழியாக ...
குழந்தையாக எனும்
நிபந்தனையோடு ...
அந்த உலகில் இயற்கையே அன்றி
வேறேதுமில்லை ...
நமக்கு துள்ளித்துள்ளி விளையாட தோன்றுகிறது
நம்மால் அவுலகில் முடியாதது
உடனே துள்ளியோடும் புள்ளி மானும்,
தாவித்தாவி திரியும் முயலும்
விளையாடிக் காண்பித்தது....
நமக்கு வேகமாக வீரம் புரிய ஆசை
நம்மால் அவுலகில் முடியாதது
சீறிப்பாயும் சிறுத்தை வந்து
வீரம் காண்பித்தது ....
வலியின் வேதனை பார்க்க ஆவல்
யானையின் காதில் எறும்பு புகுந்தது
யானை திணறியது ..
குசும்புகள் பார்க்க ஆசை
குரங்குகள் வந்து
குசும்பு செய்தது ...
கம்பீரம் காண ஆசை
சிங்கம் வந்து
கர்ஜித்தது .....
தந்திரம் பயில ஆசை
நரியும் காக்கையும்
வடைக்கதையை
செய்துக்காட்டியது ...
ஒற்றுமை பயில ஆசை
தேனீக்கள் பறந்து வந்து
தேன்க்கூட்டைக் காண்பித்தது ....
நறுமணம் சுவாசிக்க ஆசை
பூக்கள் வந்து
சாமரம் வீசியது ....
நாணம் பயில ஆசை
வண்ணத்துப் பூச்சியின்
இறக்கைகள் தொட்டச்சினுங்கி யை
தீண்டியவுடன்
தொட்டச்சினுங்கி
நாணம் பழகிக் காண்பித்தது ....
மேலப் பறக்க ஆசை
உடனே மேகம் இறங்கி வந்து
நம்மைத் தூக்கிச்சென்றது....
கடலின் உலகம் காண ஆவல்
மேகமே கண்ணாடியாய்
மாறி கடலின் உள்ளிருப்பை
காண்பித்தது ...
பசிக்கிறது ....
அதோ..
அன்பின் உருவமாய்
அமிர்தம் சுமந்து
அமுத மொழிகள் ஏந்தி
அரவணைக்க
அன்னை வருகிறாள் ...
அந்த உலகில் அன்பின்றி ஏதுமில்லை
நிச்சயமாக ............
---அப்துல் ரஹ்மான்
----harmys


