அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பானவர்களே, விக்கிலீக்ஸ் என்று கடந்த சில வாரங்கலாக இந்திய பாராளுமன்றத்தின் நேரத்தை வீண்டித்தார்கள். கிடைத்த சொற்பான நேரத்தில் சிறுபான்மையினர் கல்வி தொடர்பான விவாத்ததில் பங்கெடுத்துப் பேசினார் அன்பு சகோதரர் அஸாதுதீன் உவைஸி.MP இவரைப் போல் வரவேண்டும் ஒவ்வொரு முஸ்லீம் மேலவை உறுப்பினர்களும். இந்த காணொளியில் ஹைதிராபாத் MP அன்பு சகோதரர் அஸாதுதீன் உவைஸி அவர்கள் சிறுபான்மையினரின் அபிமானிகள் என்று வேசமிடும் அரசியல்வாதிகளை இங்கு எப்படி சாடுகிறார் என்பதை பாருங்கள்.
முஸ்லீம் அபிமானிகள் என்று சொல்லிக்கொள்ளும் அரசியல்வாதிகள் வெறும் அறிக்கைகள் மட்டுமே விடுகிறார்கள், இந்த மத்திய அரசால் சிறுபான்மையினருக்கான திட்டங்களை முறையாக செயல்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சட்டை பகிரங்கமாக வைக்கிறார். இவர் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பதால் மிகத்துணிச்சலாக பேசுகிறார். சிறுபான்மையினர் துறை அமைச்சருக்கு அவர் புள்ளி விபரங்களுடன் வைக்கும் கேள்விகளை கேளுங்கள் இதோ.
இவரைப்போல் சட்டமன்றத்திற்கு நாடாளுமன்றத்திற்கு நம் தமிழ் நாட்டிலிருந்து தைரியமாக ஆளுபவர்களை கேள்வி கேட்கும் திறன் படைத்தவர்களை முஸ்லீம்கள் ஒன்றிணைந்து தேர்தெடுக்க ஏன் மறுக்கிறோம் என்பது தான் வேதனை.
ஹைதிராபாத் MP அன்பு சகோதரர் அஸாதுதீன் உவைஸி இந்திய முஸ்லீம்களின் சார்பாக பேசுகிறேன் என்று சொல்லும்போது இவரை நிச்சயம் பாராட்டாமல் நம்மால் இருக்க முடியாது. இச்சகோதரர் மேலும் நம் சமுதாய மக்களுக்காக இன்னும் நிறைய பேசவேண்டும். இவரின் பேச்சை பார்த்தாவது மற்ற முஸ்லீம் உறுப்பினர்களும் சுறனையுடன் மக்கள் நலனின் அக்கரைகொண்டு தங்களின் குரலை அனைத்து சட்ட மேலவைகளிலும் உயர்த்தவேண்டும் மக்கள் நலனுக்காக மட்டும்.
அதிரைநிருபர் குழு


