Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label பெருநாள் வாழ்த்து. Show all posts
Showing posts with label பெருநாள் வாழ்த்து. Show all posts

இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.. 44

தாஜுதீன் (THAJUDEEN ) | September 09, 2010 | , ,

அன்பானவர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் உதவியால்  இபாதத்துக்கள்  நிறைந்த  புனித ரமழான் மாதம் 30 நோன்புகளுடன்  நிறைவுற்று பெருநாளும் வந்துவிட்டது. வளைகுடா நாடுகளில் நேற்று ஷவ்வால் முதல் பிறை தென்படாததால் நாளை 10.09.2010 அன்று நோன்புப் பெருநாள் என்று அறிவிக்கப்பட்டது.

அதிரைநிருபர் குழு சார்பாக அதிரைவாசிகள் அனைவருக்கும்,  உலகில்  பல பகுதிகளில் வாழ்ந்துவரும்  உங்களுக்கும், உங்கள்  குடும்பத்தில் உள்ள  அனைவருக்கும், உற்றார், உறவினர்கள்,  நண்பர்கள் மற்றும் இவ்வுலக  முஸ்லீம்கள் அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்...



எல்லோரும் சந்தோசமாக பெருநாளை கொண்டாடுங்கள்.  இந்த சந்தோசத்தை தந்த அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லி   நம் எல்லோருடைய உடல் ஆரோக்கியத்துக்காகவும்,  அனைத்து  முஸ்லீம்களின்   பாதுகாப்புக்காகவும்   நம்மை   படைத்த  அல்லாஹ்விடம்  துஆ செய்யுங்கள். நாமும்  துஆ  செய்கிறோம்.

சமீப காலமாக பல இயற்கை மற்றும் செயற்கை சீற்றங்களால் இந்த வருட நோன்புப் பெருநாளை மிக சந்தோசமாக கொண்டாட முடியாமல் இருக்கும்  பல்லாயிரக்கணக்கான  உலக முஸ்லீம்கள் அனைவருக்காகவும் இத்தருணத்தில் அல்லாஹ்விடம் துஆ செய்வோமாக. இன்ஷா அல்லாஹ்.

இந்த வருடம்  நோன்பில் நமக்கு ஏற்பட்ட நினைவுகளை இங்கு பகிர்ந்துக்  கொள்ளுங்கள்.


முக்கியமான விசையம் ஆறு நோன்பு வைப்பது.

ரமழான் மாதத்தின் நோன்பை நோற்ற ஒருவர், பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றால் அவர் அவ்வருடம் முழுவதும் நோன்பு நோற்றவர்; போன்றவர் ஆவார். (ஆறிவிப்பவர் அபூ அய்யூபுல் அன்சாரி (ரலி) ஆதாரம்: முஸ்லிம்.)



ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்புக்குச் சமமானது, அதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃப்வான் (ரலி), நூல்: தாரிமி.
 
நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்தவாரு சுன்னத்தான இந்த ஆறு நோன்பையும் நோற்று முழு வருடத்திலும் நோன்பு நோற்ற நன்மையை பெற நாம் முயற்சி செய்யலாமே. இன்ஷா அல்லாஹ்.
 
மீண்டும் ஒரு முறை இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.
 
நீங்கள் யாருக்கும் நோன்புப் பெருநாள்  வாழ்த்துக்கள் சொல்ல விரும்பினால்  நம் அதிரைநிருபரில் பின்னூட்டமிட்டு தெரியப்படுத்தலாம்.
 
-- அதிரைநிருபர் குழு


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு