
“அடேய், இது பெரிய சப்ஜெக்ட். இன்று இரவு பத்து மணிக்கு வெட்டிகுள படித்துறையில் நம்ம மீட்டிங்கை வைத்துக் கொள்வோம்” என்றார்.
அண்ணன் N .A .S. எங்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் இடம் அந்த வெட்டிக் குளப் படித்துரை தான் சொன்னது போல் அண்ணன் சரியா பத்து மணிக்கெல்லாம் படித்துறைக்கு வந்து விட்டார் .
நடந்த சம்பவகளைத் திரும்பவும் ஒரு முறை கேட்டுக் கொண்ட அவர் சொன்னார், “ஆவி உங்களுடன் பேசியது என்பது உண்மையல்ல. அது நீங்களே உங்களுடன் பேசிக்கொண்டது. உங்களது உள் மனதில் உள்ள விசயங்கள் அங்கே உங்களுக்கே தெரியாமல் பரி மாறிகொள்ளப்பட்டது” என்றார்.
“அப்படின்னா இறந்து போனவர் பற்றிய விபரம் எங்களுக்கு தெரியாதே? அது எப்படி?”
என்று கிடிக்கி பிடி கேள்வி கேட்டதும் அவர் சொன்னார்,
“டெலிப்பதி என்ற ஒன்று உண்டு அது என்னவென்றால் நமக்கு ஆர்வமுள்ள விசயங்கள் மற்றும் சம்பவங்கள் ஊரில் உலகத்தில் எங்கு நடந்தாலும் அது நம்மை அறியாமல் நம் மனதில் டெலிப்பதியாய் அந்த செய்தி பதிந்து விடும் இது போன்று நீங்கள் கேரம் போர்டில் செய்யும் போது அது நம்மை அறியாது நம் ஆழ் மனதில் பதிந்த செய்திகள் அங்கு வந்து விழும் அப்படி வந்து விழும் செய்திகள் நம்மை ஆச்சரியமடைய செய்யும் இந்தச் செய்திகள் நம்மிடம் இருந்து நமக்கே தெரியாமல் நாம் அறியும் போது நாம் அதிர்ச்சியின் உச்சத்திற்குச் செல்வதில் எந்த வித ஆச்சரியமும் கிடையாது” என்று தெள்ளத் தெளிவாக கூறினார்.
“இதை எல்லாம் நம்பி இதன் பின்னால் திரிந்தால் நாம் நம் ஈமானை இழந்து விடுவோம் அதனால் இதயெல்லாம் நம்பாதீர்கள்” என்று அறிவுரை வழங்கினார்.
மேலும் அவர் சொன்னார், “ பேய்கள் என்ற ஒன்று இருந்தால் தற்போது வாழ்ந்து கொண்டு இருப்பவர்களைவிட பேய்கள் மெஜாரிடியாக இருக்கும் காரணம் உலகம் தோன்றியதில் இருந்து தற்போதுவரை இறந்தவர்கள்தான் அதிகம் அப்படி இருக்கும்போது பேய்கள் என்ற ஒன்று இருந்து அதற்கு சக்தி என்ற ஒன்று இருந்தால் தற்போதைய உலகை அந்த பேய்கள் தான் ஆட்சி செய்யும் மனிதர்கள் எல்லாம் அதற்கு அடிமையாகவல்லவா இருக்க வேண்டும் அப்படி ஒன்றும் இந்த உலகில் பேய்கள் ஆட்சி நடக்கவிலையே” என்று சொல்லியவர் தொடர்ந்து “ஆவிகள், பேய்கள் இல்லை என்பதற்கு மேலும் இந்த அல் குரான் வசனம் நல்தொரு எடுத்துகாட்டு” என்று சொல்லி கீழ் காணும் அல் குரான் வசனத்தை எடுத்துரைத்தார்
23:100 لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ ۚ كَلَّا ۚ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا ۖ وَمِن وَرَائِهِم بَرْزَخٌ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
23:100. “நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒருதிரையிருக்கிறது.
பேய்கள் இருப்பதாக நம்புபவர்கள் இறைவனது இந்த வசனத்தை மறுத்தவர்களாவார்கள்; அல்லது இறைவனது கட்டுப்பாடு வலுவற்றது என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள். இரண்டில் எதை ஏற்றாலும் அவர்கள் இஸ்லாமிய வட்டத்திலிருந்து தாங்களாகவே வெளியேறி விடுகின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஒரு பிரார்த்தனை இந்த வசனத்திற்கு விளக்கமாக அமைந்துள்ளதைக் காணுங்கள்.
உங்களில் யாரேனும் படுக்கைக்குச் சென்றால், ‘என் இறைவா! உன் திருப்பெயராலேயே திரும்பவும் எழுவேன் (உறக்கத்தில்) எனது உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு நீ அருள் புரிந்திடு! அதை நீ திரும்ப அனுப்பினால் உனது நல்லடியார்களை நீ பாதுகாப்பது போல் எனது உயிரையும் நீ பாதுகாத்து விடு என்று கூறட்டும்.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.
திருக்குர்ஆனின் 39:42 வசனம் கூறும் அதே கருத்தை இந்த நபிமொழியும் கூறுகின்றது. உறக்க நிலையிலும், மரணித்த பின்னரும் மனிதர்களின் ஆவிகள் இறைவனது கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன என்று அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் இரண்டாவது கருத்துக்கு இடமில்லாத வகையில் அறிவித்து விட்ட பின் பேய்களிருப்பதாக எந்த ஒரு முஸ்லிம்மும் நம்ப மாட்டான் நம்பவும் கூடாது.
ஆகவே பேய் பிசாசு என்பதெல்லாம்இல்லாத ஒன்றை மனிதன் மனிதனை கோழைகளாக்க மனிதனால் கற்பனையாக தோற்றுவிக்கப்பட்ட வெறும் கட்டுக்கதைகளே தவிர வேறு ஒன்றும் அல்ல.
குறிப்பு :- இந்த கட்டுரையின் நோக்கம் பேய் பிசாசு இல்லை என்பதை ஆணித்தரமாக எடுத்து சொல்வதற்காகவே தவிர வேறு எதற்காகவும் அல்ல.
Sஹமீது