Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label பழ மொழிகள். Show all posts
Showing posts with label பழ மொழிகள். Show all posts

பழமொழிகள் - பழகிய மொழியிலே ! 34

அதிரைநிருபர் பதிப்பகம் | December 12, 2012 | , , , , ,


பழமொழிகள் ஏராளம் காலம் காலமாக மக்கள்  மத்தியில் பு(ப)ழக்கத்தில் இருந்து வருகின்றன . ஒவ்வொரு சமுதாயத்தினரின் கலாச்சாரத்தையும், நாகரிகத்தையும், பண்பாட்டையும், வரலாற்றையும் , அனுபவ முதிர்ச்சியையும், அறிவுக் கூர்மையையும் எடுத்துக் காட்டுவதாக அவை இருக்கின்றது.  

பழமொழிகள் சில நேரங்களில் நக்கலாகவும், சிரிப்பை வரவழைப்பதாகவும், மேலும் அறிவுரைகளை 'நச்' என்று சொல்வது போலவும்  அமைந்திருக்கும். எடுத்துக் கொண்ட கருப் பொருளைச் சுருக்கமாகவும் நளினமாவும்  சுவையுடனும் பழமொழிகள் விளங்க வைக்கின்றன. சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ற  மாதிரியான பழமொழிகளை நெத்தி அடியாகச்  சொன்னால் அந்த சூழ்நிலையை விளங்க வைக்க இது போன்ற பழமொழிகள்  உதவும். சில நேரங்களில் இந்த பழமொழிகள் மனஸ்தாபத்தையும் கோபத்தையும் உண்டு பண்ணிவிடும் இதை கையாள்வதில் நேர்த்தியும், திறமையும் மிக முக்கியம் 

நமது ஏரியாவில் புழக்கத்தில் உள்ள பழமொழிகள் சில இதோ :- 

நமதூரைப் பொறுத்தவரை ஒரு  சில பழ மொழிகள் இன்னும் வழக்கில் உள்ளன உதாரணத்திற்கு இங்கு  சிலவற்றிற்கு  விளக்கம் தேவை இருக்காது என நினைக்கின்றேன். காரணம், மண்ணின் மைந்தர்களுக்கு நெத்தி அடியாய் விளங்கும் என்பதில் மாற்று கருத்து யாருக்கும் இருக்காது.

"வெலக்கமாரா இருந்தாலும், கப்பல் கூட்டுற வெலக்கமாரா இருக்கணும்" (நல்ல மரியாதை மாப்பிள்ளைக்கு) !. அது சரி, கப்பலை வெலக்கமாத்துலே கூட்டுறாங்கன்னு யார்தான் கூட்டி கழிச்சு கண்டுபிடித்ததோ தெரியலே?. 

"வெலக்கமாத்துக்கு  பட்டு குஞ்சமா ?"  

"மகள் வாழ்ற வாழ்க்கைக்கு மாசத்துக்கு நாலு வெளக்கமாறு". இதுக்கு மேலே வெளக்கமாறு வேனாமுங்கோ! 

"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" 

"கழுதையை அறிந்து காலை கொரச்சான் குதிரையை அறிந்து கொம்பை கொரச்சான்"

"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு" - மாட்டுக்கறி ஒரு சூட்டுலே வெந்துருமான்னு  கேட்கப்புடாது.

"கடல் மீனுக்கு கண்ணுலே சூடு" - கரக்டா கண்ணுலே  'சுடு'வியலான்னு கவிக் காக்கா கிண்டல் பண்ணக்கூடாது"

"பத்துபுள்ளே பெத்தவளுக்கு தலைச்சான் புள்ளக்காரி பக்குவம் சொன்னாளாம்".

"சட்டியிலே  இருந்தாத்தான் ஆப்பையிலே வரும்?"

"தும்ப உட்டுட்டு வால புடிக்கிறான்"

"வாழவும் உடமாட்டான் சாவவும் உடமாட்டான்"

"முள்ளை முள்ளாலே தான்  எடுக்கணும்" - அப்போ குடிகாரனுக்கு குவாட்டர் கொடுத்தா திருத்தனும் ?

இங்கு எனது சிற்றறிவுக்கு தெரிந்த சில  பழமொழிகளும் அதற்கான தர்ஜுமாவும் இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன (அதிரைநிருபரின் திருவள்ளுவருன்னு கவிக் காக்கா சொல்லி தூக்கத்தை கெடுத்துப்புட்டாங்க). 

1 "அகல கால் வைக்கிறான்"

பொருள் : முன்னூறு  அடிக்கு போர் போட்டுவிட்டு ஐநூறு அடி ஆழத்துலே இருந்து நீரை உருஞ்சும் நீர் மூழ்கி மோட்டார் வாங்குவது.

2 "மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறான்"

பொருள் : முத்துபேட்டையில்  இருந்து திருவாரூர் வரைதான் அகல ரயில் பாதையாம்  என்று குழப்பி விட்டது.

3 "அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு"

பொருள் : பெண்ணுக்கு வீடு கட்டி கொடுப்பது  யானைக்கு தீனி போடுவதற்கு சமமாம் !!!

4  "அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது"

பொருள் : உழைத்து சம்பாரிக்க  வேண்டிய வயதில் உறங்கினால் உறங்கும் வயதில் உழைக்கும் நிலை ஏற்படும்.

5 "அரை கிணறு தாண்டுறான்"

பொருள் : எந்த வேலை செய்தாலும் ஆர்வமாகவும் முழு மனதுடனும் செய்யவேண்டும் அரை குறையாக செய்ய கூடாது.

6 "குதிரை  கொம்பா இருக்கே"

பொருள் : அதிரையில் ஆப்பிள் பயிர் இடுவேன் என்று பில்டப் கொடுப்பது  

7  "நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலை போல"

பொருள் : கிணற்றில் முதலை வசிக்காது, ஒருசில ஆளுக சும்மா பொய்யை அள்ளி வீசி விடுவதை இப்படி  சொல்லலாம்.

8  "ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒருகால்"

பொருள் : எந்த பிரச்சனைக்கும் தீர்க்கமா  முடிவெடுக்க தெரியாம விழி பிதுங்கி நிற்பது. உதாரணம் துபாய் போகாமல் ஊரோடு தங்கி விடலாமா? செலவுக்கு என்ன செய்வது?

10 "பகலிலே பசு மாடு பிடிக்கத்தெரியyaaதவன் இரவிலே எப்படி எருமை மாட்டைப் பிடிப்பான்"

பொருள் : கொடுத்த வேலையை சரியாய் செய்யாமல் வேற  வேலை கிடைத்தால் நல்laaல செய்வேன் என்று சால்சாப்பு சொல்லும் ஆசாமிகளுக்கு உள்ள உவமை.

11 "மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே"

பொருள் : தகுதியில்லாத வந்தவன் போனனவனை எல்லாம் நம்பி நம்ம வாழ்க்கையை பணயம் வைக்க கூடாது.

12 "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?"

பொருள் : எளிமென்ட்ரி ஸ்கூலில் எ பி சி டி படிக்காதவன் எட்டாவதில் என்ன பண்ணுவான்?   

13 "வாய் வாழைப்பழம் கை கருனாக்கிழங்கு"

பொருள் : வாய்ச்சொல்லில் வீரணடி கைவேலைக்கு உதவமாட்டான்

14 "அடுத்த வீட்டில் அம்மி நகருதா ஆட்டுக்கல் நகருதா?ன்னு பார்க்கிறவன்"

பொருள் : தன் முதுகு அரிப்பதை சொரிந்து கொள்ளத்தெரியாதவன்

15 "கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை"

பொருள் : "கொலஸ்ட்ரால் இல்லாமல் செம்மரியாட்டுக்கறி தின்ன ஆசைப்படுபவன்"

 16 "கீழே விழுந்தும் மீசையிலே மண் ஒட்டவில்லை என்கிறான் "

பொருள் : சமாளிபிகேஷனில் டாக்டர் பட்டம் வாங்கியவன்.   

17 "குருடன் ராஜ முழி முழிக்க ஆசைப்படுகிறான்"

பொருள் : பார்டரிலே பாஸ் பண்ணிவிட்டு பாரீஸ் போய் படிக்க நினைப்பவன். 

18 "நாளைக்கு வருகிற பலாக்காயை விட இன்னைக்கு கிடைக்கிற கலாக்காயே மேல்"

பொருள் : போதுமென்ற மனம்.

19 "ஆதாயம் இல்லாமல் ஆத்தைக் கட்டி இறைப்பானா? சோழியன் குடுமி சும்மா ஆடுமா?"

பொருள் : எல்லாரும் இலாபம் வச்சே வியாபாரம் பண்ணுவார்கள். 

20 காரியம் ஆக வேண்டுமானால் கழுதையையும் காலைக்கட்டிப்பிடிpபான்.

பொருள் : சுயநலமி. 
தொடரும்னு போட்டுடலாம்ங்களா ?
Sஹமீது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு