ஒட்டிப் பிறந்தோமடி
ஒன்றாய் வளர்ந்தோமடி,அவரை
'குட்டி' என்பேனடி..என்னை
'குழந்தாய்' என்றாரடி..
இன்றோ..
சிந்தை இரங்காரடி..
செம்மை மறந்தாரடி..
விந்தை இதுவல்லவோ..
விளித்தல் இயலாதடி..
அண்டை நிலமல்லவோ.
அதனை விளங்காரடி..
பண்டை நட்பல்லவோ..
பாசம் இழந்தாரடி..
முல்லை பெரியாரடி..
மூட நினைத்தாரடி.
தொல்லை இதுதானடி
தொன்மை அறியாரடி..
நிலத்தைத் தந்தாரடி..
'அணை'த்து கொண்டோமடி..
நீரின் கரம்கொண்டுதான்
பிணைப்பைக் கண்டோமடி..
அகவை அதிகம்வரின்
ஆற்றல் குறைதலடி,
அணைக்கு மட்டுமின்றி
அத்தனைக்கும் இயல்பாமடி.
ஆய்வு செய்தாரடி.
'ஆகும் இத்துணை அடி'
அழகாய்ச் சொன்னாரடி- இருந்தும்
அச்சம் ஏந்தானடி?
புதிய அணைகட்டுதல்
விரயம், உணராரடி.
எதிலும் சுகம்கண்டிடும்
அரசியல் விளையாட்டடி.
நடுவண் அரசைத்தான்
நம்பி உள்ளோமடி..
விடியும் நாள்நோக்கித்தான்
வேட்கை கொண்டோமடி..
பேசலும் விளித்தளும்
பேதம் இல்லையடி..
கூடி வாழ்வோமடி.
கோடி நன்மையடி...
-அதிரை என்.ஷஃபாத்