Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label சந்திப்பு. Show all posts
Showing posts with label சந்திப்பு. Show all posts

அதிரை ஈத்-மிலன் கமிட்டி நடத்தும் பெருநாள் சந்திப்பு அழைப்பிதழ் ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | October 10, 2014 | , , , , , , , ,

கலந்துரையாடல் - விருந்தோம்பல்

தியாகத் திருநாள் மகிழ்ச்சியினை அனைத்து சமய சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சமூக நல்லிணக்க நிகழ்வு.

நாள் : 12-10-2014 [இன்ஷா அல்லாஹ்], ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணி.

இடம் : பவித்ரா திருமண மண்டபம், அதிராம்பட்டினம்.

வரவேற்புரை : மெளலவி M.A..முகம்மது இத்ரீஸ் M.A., M.Phil., DFA, DFU., தலைவர் & விரிவுரையாளர் - அரபித்துறை, கா.மு.கல்லூரி - அதிரை

தலைமை : ஜனாப். S.K.M.ஹாஜா முகைதீன், M.A., B.Sc., B.T., முன்னாள் தலைமை ஆசிரியர் - ஓய்வு, கா.மு.மேல்நிலைப் பள்ளி - அதிரை

முன்னிலை : அதிரை மஹல்லாக்களின் தலைவர்கள்

சிறப்பு விருந்தினர் : திருமிகு K.இராமநாதன், M.L., உதவி அமர்வு நீதிபதி - அரசு இணைச் செயலாளர், சட்டத்துறை - சென்னை]

சிறப்புரை : ஜனாப் டாக்டர் K.V.S. ஹபீப் முஹம்மது, துணைத் தலைவர், இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (IFT) - சென்னை.

நன்றியுரை - ஜனாப் M.ஹாஜா முகைதீன் M.Sc., M.Phil.,

இந்த சமூக நல்லணக்க நிகழ்வில் பிற சமயத்தைச் சார்ந்த அனைவரும் தவறாது கலந்து கொள்வதுடன், அதை தொடர்ந்து நடைபெறும் பகல் உபசரிப்பிலும் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

மகிழ்வுடன்

ஈத் மிலன் கமிட்டி
அதிராம்பட்டினம்
அலைபேசி : 942962205 / 9944916614 / 9952130909


ஹஜ் பெருநாள் 2012 சந்திப்பு - நியூயார்க் [updated] 8

அதிரைநிருபர் பதிப்பகம் | October 26, 2012 | , , , ,


அதிரை சகோதரர்களின் ஹஜ் பெருநாள் சந்திப்பு உலகம் முழுவதும் நிகழ்ந்து வருவதை அதிரை வலைத்தளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருவதை அறிவோம், அவ்வகையில் அமெரிக்கா நியூயார்க்கில் அதிரை சகோதரர்களின் ஹஜ் பெருநாள் 2012 சந்திப்பு புகைப்பட காட்சிகள்.










தகவல் : கிஷார் முஹம்மது 
மற்றும்  N.K.M.அப்துல் வாஹித் அண்ணாவியார்

அதிரையில் வலைஞர்கள் சந்திப்பு - 22-08-2012 31

அதிரைநிருபர் பதிப்பகம் | August 25, 2012 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

கடந்த 22-08-2012 அன்று அதிரைநிருபரின் பங்களிப்பாளர் எங்கள் மூத்த சகோதரர் இபுராஹீம் அன்சாரி அவர்களின் இல்லத்தில் மாலை 05:00 மணி முதல் 06:30 வரை நடைபெற்றது. இந்த அதிரை வலைஞர்கள் சந்திப்பில் அதிரை வலைத்தளங்களின் முக்கிய பங்களிப்பாளர்கள் பங்கேற்று தங்களின் கருத்துக்களையும் அனுவபங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் மூத்த வலைஞர்கள் சகோதரர்கள் இபுராஹீம் அன்சாரி, அதிரை அஹமது, அதிரை ஜமீல் M.சாலிஹ், S.அலாவுதீன் இவர்களுடன் இணைந்து S.ஹமீத், சேக்கன்னா M.நிஜாம்,  A.R.ஹிதாயத்துல்லாஹ்,  ஹஸன், M.S.M.நெய்னா முஹம்மது, M.தாஜுதீன், L.M.S.அபூபக்கர்,  அபுஈஸா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


மூத்த வலைஞர் சகோதரர் ஜமீல் அவர்கள் அதிரைநிருபர் மற்றும் அதிரை எக்ஸ்பிரஸ் தளங்களின் செயல்பாடுகள் பற்றி அனுபவப்பூர்வமான நல்ல ஆலோசனைகளை வழங்கியதோடு அல்லாமல், பத்திரிகைதுறை தொடர்பான அறிய பல தகவல்களை இளம் வலைஞர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். அதிரை வலைஞர்களிடம் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என்ற கருத்தை மிக ஆழமாக எடுத்துரைத்தார்கள். அதிரைக்கு என்று ஓர் அச்சுப் பத்திரிக்கை உருவாக வேண்டும் என்று தனது கோரிக்கையை அதிரை வலைஞர்களிடம் வைத்தது, இதற்காக தானும் அதிரை அஹமது அவர்களும் பக்கபலமாக இருந்து முழு ஒத்துழைப்பு தருவதாக சொன்னது இந்த சந்திப்பின் முக்கிய சிறப்பு என்று சொல்லலாம்.

மூத்த வலைஞர் சகோதரர் அதிரை அஹமது அவர்கள் தங்களின் கருத்தை மிகப் பொருமையாக எடுத்து வைத்தார்கள். ஊடகத்துறையில் உள்ளவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடாது, நிதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்று அனைவருக்கும் ஏற்ற இதமான அறிவுரையை வழங்கினார்கள். மேலும் சில வருடங்களுக்கு முன்பு வலைஞர்களிடம் ஒற்றுமை ஏற்பட எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றி பகிர்ந்து கொண்டார்கள்.

சகோதரர் MSM நெய்னா அவர்கள், எல்லோரும் தங்களின் இளம் வயதில் ஏற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவங்களை பதிவுகளாக எழுத வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

அதிரைநிருபரின் மூத்த பங்களிப்பாளர்கள் சகோதரர்கள் அதிரை அஹமது, இபுராஹீம் அன்சாரி, அலாவுதீன் மற்றும் அனைவரின் ஆக்கங்கள் மிக சிறப்பாக உள்ளதாக அனைவரும் பாராட்டினர். மேலும் அதிரைநிருபரில் வெளிவந்து எல்லோருடைய பாராட்டையும் பெற்ற சகோதரர் அலாவுதீன் அவர்கள் எழுதிய மிக பிரபலமான "கடன் வாங்கலாம் வாங்க" என்ற தொடர் பதிவையும், மூத்த சகோதரர் இபுறாஹீம் அன்சாரி அவர்களின் "மனுநீதி மனித குலத்துக்கு நீதியா?" அலசல் தொடர் பதிவையும் புத்தகமாக வெளியிட தகுதியானவை என்று மூத்த சகோதரர் ஜமீல் அவர்களும் இன்னும் பிற வலைஞர்களும் சிலாகித்து பாராட்டி சொன்னது முக்கிய சிறப்பம்சமாகும் என்று குறிப்பிட்டு சொல்லலாம்.

இந்த சந்திப்பின் நிகழ்வுகளை சிறிதாக தொகுக்கப்பட்ட கருத்துக்கள் யாவும் விவாதிக்கப்பட்டவைகளே அதிரை வலைத்தளங்களின் செயல்பாடுகளை மேன்படுத்துவதற்கும் புரிந்துணர்வை அதிகரிக்கவும் மட்டுமே அன்றி யாரையும் தாழ்த்தவோ அல்லது உயர்த்தவோ அல்ல.

மூத்த மற்றும் இளம் வலைஞர்களின் இந்த சந்திப்பு மொத்தத்தில் அனைவருக்கும் பயன் தரக்கூடியதாக இருந்தது என்று சொல்லலாம். இது போன்ற அதிரை வலைஞர்களின் சந்திப்பு தொடர்ந்து நடைபெற்றால் புரிந்துணர்வுகள் நம் வலைஞர்கள் மத்தியில் நிலைக்கும் என்று நம்பலாம் இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர் குழு.

அமீரகத்தில் அதிரையின் ஆளுமை ! - பெருநாள் சந்திப்பு: காணொளி 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 30, 2011 | , , ,

அல்லாஹ்வின் திருப் பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...









அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர்
அல்லாஹ் அக்பர்
லாயிலாஹ இல்லல்லாஹ்
அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர்
வலில்லாஹில் ஹம்து !

நம்மையெல்லாம் படைத்து பாதுகாத்து வரும் அந்த ஓர் இறையை போற்றி, அல்லாஹ்வின் கிருபையால், ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் அதிரைச் சகோதரர்களின் நோன்பு பெருநாள் சந்திப்பினை நல்லுள்ளம் கொண்ட அதிரை இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


இன்று (30-ஆகஸ்ட்-2011) தேரா - துபாய், ஈத்கா மைதானத்தில் பெருநாள் தொழுகை முடிந்ததும், ஏராளமான அதிரைச் சகோதரர்களின் சங்கமம் வங்கக் கடலின் வெந்நிற நுரை பொங்கியெழும் சந்தோஷமான ஆர்ப்பரிக்கும் சகோதரர்களின் உணர்வை அங்கே காண முடிந்தது.

இது ஒரு கன்னி முயற்சிதான், ஆனாலும் கண்கொள்ளா காட்சி. இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ந்து நடத்திட தூண்டும் ஆர்வமும் ஒவ்வொரு சகோதரர்களின் முகத்திலும் கண்டதென்னவோ சொல்லாமல் சொல்லியது.... இங்கு வராதவர்களும் வந்திருக்கலாமோ என்றும் ஏங்க வைத்தது.

நல்லுறவையே நடுவில் வைத்து நாலாபுறமும் இருக்கும் அதிரைச் சகோதரர்களை அரவனைக்க விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து சங்கமித்த சகோதரர்கள் மற்றும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்த சகோதரர்கள் அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர் !

இத்தருணத்தில் ஒரு முக்கிய விடயத்தை பதிகிறோம், உங்களின் மடிக் கணினி அல்லது, மேசைக் கணினி, அல்லது கையடக்க கணினி, அல்லது அலைபேசி இவைகளில் எதனைத் திறந்ததும் இன்று மின்னஞ்சல் ஒன்றினை கண்டிருப்பீர்கள் அதுதான், அதிரை கல்விச் சேவையகம் அறிமுகம் ! அங்கே எடுத்து வைக்கப்பட்டிருக்கும் நலனைக் கருத்தில் கொண்டு உங்களின் பங்களிப்பை (குழுமத்தில் இணைவதிலும்) செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்...

كل عام و انتم بخير

ஜஸாக்கல்லாஹ் ஹைர் !


- அதிரைநிருபர்-குழு

அதிரை சகோதரர்களின் சங்கமம் ! - நோன்புப் பெருநாள் அன்று... 4

அதிரைநிருபர் பதிப்பகம் | August 21, 2011 | , , ,


அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷா அல்லாஹ் ! எதிர்வரும் நோன்புப் பெருநாள் அன்று துபை தேரா ஈத் முஸல்லாஹ் மைதானத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திலிருக்கும் அதிரை சகோதரகள் சங்கமிக்கும் ஒர் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிரை சகோதரர்கள் மட்டுமே ஏரத்தாழ 3000 பேருக்கும் அதிகமானோர் இருக்கக்கூடும். நமதூரைவிட சிறிய சிறிய ஊர்களின் மக்களெல்லாம் ஸஹர் /இஃப்தார் நிகழ்சிகள் மூலம் ஒன்று கூடுகின்றனர். இதுவரைக்கும் அதிரை சகோதரகளுக்குள் இத்தகைய ஒருமித்த முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை என்பதால் இன்ஷா அல்லாஹ் இவ்வாண்டு (2011) முதல் இதற்கான முயற்சியை நமதூர் தன்னார்வலர்கள் முன்னெடுத்துள்ளனர். ஊர்மக்களை ஒன்றிணைக்கும் இந்த உன்னத முயற்சி வெற்றிபெற உங்கள் வருகையையும் உறுதி செய்வதோடு அதிரை நண்பர்களையும் அழைத்து வரவும்.

பிற அமீரகங்களிலிருந்து பெருநாளன்று துபைக்கு தொழுவதற்கு வரும் அதிரை சகோதரர்கள் தவறாமல் இந்த அரிய சந்திப்பில் கலந்து கொண்டு தமது உறவுகளையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொண்டு பரஸ்பரம் முஸாபஹா செய்துகொள்ள அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

துபாய்-டேரா பகுதியில் பெருநாள் தொழுகை நடைபெறும் ஈத் முஸல்லா மைதானத்திற்கு வருவதற்கான வரைபடமும், மைதானத்தின் வலதுபுறம் பரஹாரோட்டில் சகோதரர்கள் கூடுமிடமும் இணைக்கப்பட்டுள்ளது. பெருநாள் தொழுகை முடிந்து அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்குள் இந்த நல்ல சந்திப்பு நிகழ்வு நிறைவுறும் என்பதால் வேறு பள்ளிகளில் பெருநாள் தொழுதவர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டப்படுகிறார்கள்.


குறுகியகால அவகாசம் மட்டுமே இருப்பதால் இந்ததகவலை அனைத்து BLOG, FACEBOOK மற்றும் மின்னாடல்கள் தொடர்புகளுக்கும் அனுப்பி வைக்கவும் வேண்டப்படுகிறார்கள். இன்ஷா அல்லாஹ் இந்த சந்திப்பை காணொளி மற்றும் (வாய்ப்பிருந்தால்) நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தகவல் : Farook Ibrahim


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு