Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label எங்கே நேரம். Show all posts
Showing posts with label எங்கே நேரம். Show all posts

எங்கே நேரம்? 38

அதிரைநிருபர் பதிப்பகம் | February 11, 2015 | , , , ,

நேரம்
சிலரிடம்
கால் முளைத்து நடக்கிறது,
சிலரைத்
துரத்தி பிடிக்கச்சொல்லி ஓடுகிறது

இறக்கை முளைத்துச்
சிலர் வாழ்வில் பறந்தாலும்
கட்டில் மெத்தையிட்டு
சிலரது நேரம்
படுத்துக் கொண்டு
அடுத்தவர் நேரத்தைக்
கெடுக்கிறது

என்றாலும்
எனக்கான நேரம் மட்டும்
ஏனோ
இரண்டு எந்திரங்கள் பொருத்தி
தீராத எரிபொருளோடு
என்னேரமும்
இயங்கிக்கொண்டே இருக்கிறது

உண்ணவும் உடுத்தவும்
உபத்திரவமின்றி உறங்கி எழவும்
வரையறுக்கப்பட்ட அளவில்
சொற்பம்கூட தருவதில்லை
எனக்கான நேரம்

கடிகாரத்துள்
கொடுங்காற்று வீசியதுபோல்
கடும்வேகமாய்ச் சுழன்ற
முட்கள்
குற்றுயிரும் குலையுயிருமாகவே
எனக்கான் நேரத்தைத் தருகின்றன

என் செயல்களுக்கெல்லாம்
நியூட்டன் சொன்னதுபோல்
எதிர்வினை அமைந்தாலும்
அவை அக்கூற்றின்படி
சமமாக அமையாமல்
நேரம் குறைத்தோ
பாரம் கூட்டியோ நகர்கின்றன

எல்லா பூனைகளுக்கும்
என் நேரத்தைப்
பங்கு வைத்துக் கொடுத்துவரும்
குரங்குகளோடுதான்
நகர்கின்றன நாட்கள்

கடும் முயற்சிக்குப் பிறகு
வாய்க்கும்
என்
கனவுகளில்கூட
யாராவது வந்து
கதவைத் தட்டுகிறார்கள்
திறந்தால்
பின்னிரவு நேரம்
பிடறி முடி பிடித்து
உலுக்கி
எழுப்பிவிட்டு விடுகிறது

முன் உச்சி
முடிக்கற்றைப்  பிடித்து
இழுத்துச் செல்கிறது
என் நேரம்
நான் கடந்து சென்ற
பாதையெல்லாம்
சிதறிக் கிடக்கின்றன
என் பெயர் எழுதப் பட்ட
சோற்றுப் பருக்கைகள்!

**எனக்காக இதை எழுதித்தந்தது**
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு