"காண்க காணொளி கண்டதும் - சிலிர்க்க
கருத்திடுக அதற்குத் தக !"
- ஹைகூக்"குறள்"
ஆனாலும் தலையோடு இருப்பவைகள் என்ற இறுமாப்பு இருக்கும் அதுவே அங்கிருந்து அகன்றால் அதற்கு என்ன மரியாதை…!?
தலையையேச் சுற்றும் தலைப்பாக இருப்பதனால் தலையைச் சொறிந்து கொள்ள வேண்டாம், இது தலைக்கு மேலிருப்பதை எப்படியெல்லாம் திருத்தம் செய்கிறார்கள் என்பதைச் சொல்லத்தான் இந்த சுருக்கமான முகவுரை.
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்களே, அதேபோல் தலை ஆடாவிட்டாலும் அதனைச் சுற்றியிருப்பவைகள் ஆடும் ஆட்டமிருக்கே அப்பப்பா, நடந்தாலும், குனிந்தாலும், நிமிர்ந்தாலும், அசைந்தாலும் என்று சொல்லிக் கொண்டே செல்லலாம்.
அட! வேற ஒன்னுமில்லைங்க, தலை முடியைத்தான் சொல்ல வந்தேன் அதனைச் சரி செய்யும் அல்லது அகற்றிடும் திறனாளிகளோடு இன்று நம்முடைய மூன்றாம் கண் ஒன்றும் உறையாடியது அதைத்தான் இங்கே காணொளியாக காண்கிறீர்கள்.. !
- அபுஇபுறாஹிம்