
கனிந்த அன்பு - பாட்டி தாத்தாவிடம் கிடக்கும் அன்புதான். அவர்களின் அதட்டல்கூட பேரன் பேத்திகளுக்கு நகைச்சுவையாய் தெரியும் புதுமை. தாத்தாவின் அன்றாட வருடல் காலத்தால் அழியாத அன்பின் வெளிப்பாடு. வெளியில் காணும் போது எனது பேரன் என்று பெருமையாக கூறி கொள்ளும் தாத்தா சிகரத்தை தொட்ட பெருமை தாத்தாவின் குரலில் தெரியும்.
பாட்டியின் அன்பு என்றுமே ஒரே பார்வை ஐந்து வயது பேரனும் இருபது வயது பேரனும் ஒன்றாகவே தெரிவர். இரண்டு பேருக்கும் அதே அன்புதான் முந்தானையில் முடிந்து வைத்த ருபாயை அன்பாக கொடுக்கும் பாட்டி. கனிந்த அன்பு கிடைக்க பெற்றவர்கள் உண்மையிலேயே பேறு பெற்றவர்கள்தான்.
நெருடலான நிகழ்வுகள் – தாயை இழந்த பிள்ளைகளின் சூழல்.
தாயில்லா பிள்ளைகளை வளர்க்கும் பாட்டிகளின் அன்பு அந்த பிள்ளைகளுக்கு எதிர்மறையான விளைவுகளை கொடுக்கும் என்பதை இங்கே பதிய விரும்புகிறேன்.
*சிறு பிள்ளைகளுக்கு வயதானவர்களை பற்றிய அபிப்பிராயம் என்னவென்றால் தாம் செய்யும் செயல்கள் ஒன்றும் அவர்களுக்கு தெரியாது. தாயின் பராமரிப்பில் உள்ள பிள்ளைகள் செல்லமாக பாட்டியை ஏமாற்றும் செயல் சுவாரஸ்யமானது. அனால், சில வீடுகளில் பாட்டி கண்காணிப்பில் வளரும் பிள்ளைகள் சிறு விசயங்களில் ஏமாற்றும் பிள்ளைகள் பிறகு பெரிய தவறுகளை செய்ய துவங்கும். தாயில்லா பிள்ளை என்ற ஒரே கரிசனம் பிள்ளை என்ன செய்தாலும் சரி என்ற நிலை பாட்டினை கொண்டிரும் பாட்டியின் வளர்ப்பு முறை பிள்ளைக்கு பாதகமான சூழலாக அமைவது தான் பரிதாபம்.
* தாயில்லா பிள்ளைகள் பிறரால் பாதிக்க படும்போது பாட்டி படும் துயரம் அதன் வெளிப்பாடு மிக பரிதாபமானது. தனக்கு கிடைக்கும் அபரிவிதமான உணவு வகைகளை பேரனுக்கு கொடுக்கும் பாட்டியின் பாசம் கவர தக்க ஒன்று.
* டாக்டர் பேரனுக்கு பாட்டி கொடுக்கும் வைத்தியம் சில சமயம் ஒவ்வாமை கொண்டதாக இருக்கும் ..சிரித்துக் கொண்டே அப்படியா என கேட்க்கும் பேரன்.
* I P S படித்த பேரனை அலட்டும் தாத்தா, பொய்யாய் பயப்படும் பேரன் போன்ற நிகழ்வுகள் ரசிக்க தக்கவை பேரன் கொடுக்கும் பணம் மற்ற வாரிசுக்கு கொடுத்து மகிழும் பாட்டி தாத்தா உறவு கனியை போன்ற இனிமையான உறவுதான்.
பிள்ளைகள் உறங்க தொட்டில் பருவம் முடிந்து தரையில் படுத்து உறங்கும் பருவம் வரும்போது பிள்ளைகளின் கவனம் பாட்டியின் பக்கமே திரும்பும். விளையாட்டு பருவம் என்பதால் ஓரிடத்தில் இருக்காத பிள்ளைகளை சுண்டி இழுக்கும் தன்மை பாட்டியின் கதைகளுக்கு உண்டு. நல்ல அறிவுள்ள கதைகள் சொல்லி வளர்க்கும் பாட்டி அறிவுள்ள பேரனை வளர்கிறாள். சில பாட்டிகள் மூட நம்பிக்கையை பிள்ளைகளுக்கு ஊட்டும் கதை கூறி மனதை பாழடிப்பதும் உண்டு. சில பாட்டிகள் குல பெருமை கூறி பெருமையளனாகவும் சில பாட்டி குடும்ப பகமை கூறி பிள்ளைகளை கோப காரர் களாகவும் ஆக்குவது உண்டு. நிலா கதை, நரிக்கதை வருங்கால பாட்டிகள் பயன்படுத்துவார்களா என்பது கேள்விக் குறியே!.
தொட்டிலில் உறங்க மறுக்கும் மழலைகளுக்கு தாலாட்டு பாட்டி வசமே இருப்பு இருக்கும்.
மீண்டும் நான் வலியுறுத்த விரும்புவது பிள்ளைகள் வளர்ப்பில் தாய்க்கே அதிக பங்களிப்பு இருக்க வேண்டும். சிலர் பல அலுவல் காரணமாக பாட்டிகளிடம் பிள்ளைகளை முழுமையாக வளர்க்கும் பொறுப்பை கொடுத்தால் பிள்ளைகள் பிடிவாதம் பிடித்த பிள்ளையாகவும் கோபம் அதிகம் உள்ள பிள்ளையாகவும் வளரும். செல்வ செழிப்புள்ள பாட்டிகளிடம் வளரும் பிள்ளைகள் ஊதாரியாக இருக்கும். பணம் கொடுக்க மறுக்கும் போது அடாவடியாக கேட்கத் துனியும் பேரன்களையும் காண முடிகிறது.
வயதான பாட்டிக்கு ஒன்றும் தெரியாது என்ற உணர்வுள்ள பிள்ளைகள் பொய் சொல்லுதல் சிறு களவு போன்ற செயலில் கூட ஈடுபடும் .தயவு செய்து பிள்ளைகளை பெற்ற தாய் மார்கள் பிள்ளைகளை கண்காணித்து வளர்க்கும் பொறுப்பை தாயே ஏற்க வேண்டும். தாயில்லா பிள்ளைகளை பாட்டி மட்டுமல்லாது பெரிய / சிறிய தாய் போன்ற உறவுகளும் ஏற்க வேண்டும்.
பாட்டி தாத்த நல்ல கனி போன்ற இனிமையான உறவுதான் சில சமயங்களை கசப்பான மருந்தும் கொடுப்பது அவசியமல்லவா. எனவே பாட்டிக்கு ஒய்வு. தாய்க்கே பிள்ளை வளர்க்கும் பொறுப்பு. என்பதை அழுத்தமாக பதிவிட விரும்புகிறேன்.
உறவுகள் தொடரும்
அதிரை சித்தீக்