version 4.0.1 (update yet to release)
எதுக்கும் ஒரு முன்னுரை இருக்கனும்னு கூகிலானந்த ஆசிரமத்தில் ஒன்றும் சொல்லியெல்லாம் தரவில்லை, இருந்தாலும் இதுக்கும் ஒரு முன்னுரை எழுதிடாலாமான்னு யோசிச்சுகிட்டே இப்படித்தான் எழுதிட்டேனுங்க...
சும்மாதாங்க இருந்தேன் !
சங்கை ஊதிக் கெடுப்பானேன்னு சொல்லுவாங்களே அதுபோலத்ததான், எந்தப்பக்கமும் போகாமலும் இருந்தேனோ அங்கே போகும்படி வைத்தது ஒரு நட்பு பிடித்த அடம் அங்கே போகும்படியானது.
அதன் சாதகபாதகங்களை இரண்டு வருஷத்திற்கு முன்னாடியே அலசி ஆராய்ந்து கட்டுரைகளாக எழுதியிருந்தாலும், நாமும் ஏன் சிக்க வேண்டும் என்றே ஒதுங்கியிருந்தேன். மாறாக மாற்றங்கள் வேண்டி மாறாமலே இருந்தால் மாற்றம் எப்படி வரும்னு ஒரே குழப்பமா இருந்துச்சா !?
வேறு வழி ! உள்ளே சமீபத்தில்தான் நுழைந்துவிட்டேன்.
எங்கேடா! நுழைந்தேன்னு கேட்டு அடிக்க வந்து விடாதீர்கள் அதுதாங்க "ஏதோ" பக்குன்னு எல்லோரையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் தமிழில் "முகநூல்" !!??
அங்கே நுழைந்ததும்தான் தெரிந்தது, ஒரே நாளில் எக்கச்சக்க குப்பைகள் ஸாரி ஸ்க்ராப்ஸ் எதனையும் கிளறாமல் அப்படியே அமுக்கி வைத்துக் கொண்டிருக்கிறேன், அங்கே என்னைக் கண்டவர்களில் சிலர் தனி மின்னாடலில் "இணையத்தில் வலைவீச்சு" என்ன ஆச்சுன்னு கேட்டுபுட்டாருங்க !!
பதில் "ன்ன்ன்ன்ன்ங்ங்ங்கேகேகே"
அதுக்கப்புறமா உட்கார்ந்து யோசிச்சா !!? ஏன்(டா)ப்பா அம்போன்னு வுட்டோம்? தொடரலாமா ? மக்கள்கிட்டே கேட்டுதான் பார்ப்போமா என்று ஸ்பிரிங் ஸ்பிரிங்கா சுத்திகிட்டே இருந்துச்சுங்க.... என்னங்க! தொடரலாமா ?
பாதகங்களை மட்டுமே பார்க்காமல் சாதகங்களையும், சாதனைகளையும் அலசி பார்த்தால் அதுவும் அதிரை மக்களின் வழக்காடு மொழியாடலில்.!
யோசிச்சு சொல்லுங்கள் ப்ளீஸ் !
முக்கிய குறிப்பு : ஒருத்தர் அனுப்பிய கமெண்ட் இனிமே "அபு - இபு" ன்னெல்லாம் எழுதாம ஒழுங்கா அப்பாவோட பேரன் மாதிரி விலாசம் போட்டு எழுதச் சொன்னாருங்க...
அவரே அந்த விலாசத்தை சொன்னாருங்க !
என்னங்க போட்டுக்கலாமா ?
ஹெல்ப் ப்ளீஸ் !
இப்படிக்கு,
m.nainathambi


