அஸ்ஸலாமு அலைக்கும்,
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் தமிழ் சினிமாத்துறை அழிந்து சீரழிந்து வரும் துறையாகவே இருந்து வருகிறது. சினிமா ஒரு கலையே அல்ல. அன்மைகால சினிமாக்கள் கேடுகெட்டக் காமக்கூத்தையும், வன்முறை வெறியாட்டத்தையும் யதார்த்த நிலைக்கு அப்பாற்பட்ட கற்பனையின் மூலம் உப்புக்குச்சப்பானியாக ஒரு சில கலைகளை (நடிப்பு, நடனம், இசை, வீரசாகச விளையாட்டு) உள்ளடக்கிய கலவைதான் சினிமா. இதை கலை என்று ஒருவன் சொன்னால் நிச்சயம் அவன் பைத்தியக்காரனாவே இருப்பான்.
இவர்கள் துப்பாக்கியைத் தூக்கும்போதே சிறையில் பிடித்துப் போட்டிருக்க வேண்டும். இந்தச் சினிமா கலாச்சாரத் தீவிரவாதிகளையும் இவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் சந்தர்ப்பவாதிகளையும் சிறையில் போட்டிருக்க வேண்டும். இப்போ பாருங்க விஸ்வரூபம் எடுத்து வீதிக்கு வந்து சினிமா கலாச்சார தீவிரவாதத்தை தூண்டிவிட்டு தனது சுயலாபத்திற்காக நீளிக் கண்ணீர் வடிக்க வைத்திருக்கிறார்கள் அவர்களின் ஆதரவாளர்களை. இந்த அயோக்கியர்களைச் சட்டம் தண்டிக்க கால அவகாசம் எடுத்தாலும் மக்கள் புறக்கனித்து தண்டித்தே ஆகவேண்டும்.
நீண்ட நாட்களுக்கு முன்னர் எழுத நினைத்ததை உங்களோடு பகிர்ந்து கொள்வது மட்டுமல்ல இது என் ஆதங்கமும் கூட,
இந்தப் பதிவைப். படிக்கும் போது சினிமா பிரியர்களுக்குக்(!!) கோபம் வரலாம், கொஞ்சம் நிதானமாக வாசியுங்கள்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் தமிழ் சினிமாத்துறை அழிந்து சீரழிந்து வரும் துறையாகவே இருந்து வருகிறது. சினிமா ஒரு கலையே அல்ல. அன்மைகால சினிமாக்கள் கேடுகெட்டக் காமக்கூத்தையும், வன்முறை வெறியாட்டத்தையும் யதார்த்த நிலைக்கு அப்பாற்பட்ட கற்பனையின் மூலம் உப்புக்குச்சப்பானியாக ஒரு சில கலைகளை (நடிப்பு, நடனம், இசை, வீரசாகச விளையாட்டு) உள்ளடக்கிய கலவைதான் சினிமா. இதை கலை என்று ஒருவன் சொன்னால் நிச்சயம் அவன் பைத்தியக்காரனாவே இருப்பான்.
இது ஒரு பக்கம் இருந்தாலும். கேடுகெட்ட சினிமா என்ற ஊடகம் சக்திவாய்ந்ததாக உருமாறியிருப்பதற்கு மிகப்பெரிய காரணம். மனிதன் நடைமுறையில் வாழ்வில் சாதிக்க முடியாததைக் கற்பனையின் மூலம் அவைகளை சாதித்து காட்டும் காட்சியமைப்புகளே அதிகம் இடம்பெறுவதால், சினிமா மக்கள் மனத்தில் இடம்பிடித்து தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு சிறிய உதாரணம்: இன்றைய காலகட்டத்தில் வேலை தேடுகிறான், நேர்முக தேர்வுக்கு செல்கிறான், தோல்வியை சந்திக்கிறான். மீண்டும் தேடுகிறான் தோல்வியடைகிறான். மீண்டும் தேடுகிறான் தோல்வியடைகிறான். உடனே நேர்முக தேர்வு எடுப்பவர் நம்மை தோல்வியுற செய்யவேண்டும் என்ற தொணியில் கேள்வி கேட்பார், அவரைச் ஷூவைக் கழட்டி அடிக்கனும் போல் இருக்கும், நம்மிடம் இருக்கும் சர்டிபிகேட்களை கிழித்து அவர் மேல் தூக்கி வீசவேண்டும் என்பது போல் இருக்கும். நடைமுறையில் அப்படி செய்ய முடியாது. ஆனால் உங்கள் அபிமான ஹீரோ சினிமாவில் வேலை தேடுவார், நேர்முகத் தேர்வில் தோல்வியுறுவார், உடனே தான் போட்டிருக்கும் ஷூவால் தேர்வாளரை அடிப்பார், தன் கையிலிருக்கும் சர்டிபிகேட்டை கிழித்து அவர் முகத்தில் எறிவார். நடைமுறையில் செய்யமுடியாததைச் சினிமாவில் செய்து காட்டுவதால் சினிமா மக்களின் கற்பனைக்குக் காட்சியமைத்து காட்டுவதை கற்பனையில் செய்யத்துடிக்கும் ஒவ்வொருத்தனும் ரசிக்கிறான். இதுவே சினிமாவின் வெற்றியின் ரகசியம். ஆனால் அந்த அபிமான ஹீரோ செய்த வன்முறை செயலை நியாப்படுத்தும் காட்சியே இருக்குமே தவிர, அந்த வன்முறை காட்சிக்கு பிறகு யதார்த்த உலகில் நடப்பவை பற்றி காண்பிக்க மாட்டார்கள்.
இது போல் சாதாரண நம்முடைய வாழ்வில் நாம் சாதிக்க முடியாத அனுபவிக்க முடியாதவைகள், தடை செய்யப்பட்ட விரும்பியவைகள் அனைத்தையும் கற்பனை மட்டுமே செய்ய முடியும், அவைகளை அபிமான ஹீரோ சினிமாவில் செய்வதால் நாம் ரசிக்கிறோமே தவிர, வேறு என்ன இந்த சினிமாவில் நன்மையுள்ளது?
நாகரீகம் 21ம் நூற்றாண்டு என்று தங்களை முற்போக்கு சிந்தனைவாதிகள் பீற்றிக்கொள்ளும் பிற்போக்கு அதிமேதாவிகள் நிறைந்தது இவ்வுலகம். கனவு, கற்பனை மூலம் காலத்தில் கழிப்பதில் மட்டுமே அநேக மனிதர்கள் விரும்புகிறார்கள். நம்மை இவ்வுலகில் படைத்த ஒரு சக்தி இறைவன் என்கிற ஒரு வினாடி சிந்தனைகூட மனிதனின் கற்பனைக்கு எட்டாத ஒன்றாகிவிட்டது சினிமா கற்பனை அடிமைகளிடம். கேடுகெட்ட சினிமா மனித சமூகத்தில் சாதித்ததைவிட சீரழித்ததே அதிகம் என்பது வரலாறு.
சினிமாதுறையில் உள்ள எத்தனை பேர் ஒழுக்க சீர்கேடுகளின்றி வாழ்கிறார்கள்? என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம். தமிழ்நாட்டு மக்களுக்கு வந்த மிகப்பெரியச் சாபக்கேடு தமிழ் சினிமா. இறுதியில் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கும் அளவுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. என் டி இராமராவுக்கு பிறகு ஆந்திராவில் சினிமா கூத்தாடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அவ்வபோது முஸ்லீம்களைச் சீண்டி தங்களின் வருமானத்தை பெருக்குவதில் சினிமாக்காரர்கள் கில்லாடிகளாகவே இருந்துள்ளார்கள். அந்த கில்லாடி லிஸ்டில் முன்னணியில் இருப்பவர் உலக ‘நாய்’கன் என்று இணையதளங்களில் தற்போது சித்தரிக்கப்படும் கமல் என்ற 'காம'ஹாசன். இவரின் வி(ச)சுவரூபம் என்ற திரைப்படம் முஸ்லீம்களை இதுவரை சினிமாவில் சித்தரிக்காத வகையில் படுமோசமாக சித்தரித்துள்ளது. சில நாட்களாக அனைவர் மத்தியிலும் ஹாட் நியூஸாகிப் போன 'விஸ்வரூபம்' திரைப்படத்தினை, தமிழக அரசு அதிரடியாக தடை செய்துள்ளது பாராட்டப்பட வேண்டியது! தமிழகத்தில் பரவலான அளவில் சட்ட ஒழுங்கு பிரச்சனை தலை தூக்காமல் காப்பாற்றப்பட்டதில், இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்லாமல் அமைதியை விரும்பும் மற்ற அனைத்து மக்களுக்கும் மிகப்பெரிய திருப்தி ஏற்பட்டுள்ளது.
விசரூபத்தை தடை செய்யக்கோரி பலமுனை கண்டன தாக்குதல்கள் பத்திரிகை செய்தி மூலமும், இணையதளங்கள் மூலமும், ஒலி ஒளி ஊடகங்களிலும் உரக்க ஒலித்தாலும். முஸ்லீம்களாகிய நாம் செய்ய வேண்டியவைகள் நிறைய உள்ளது.
- காம கூத்துகள், வன்முறை வெறியாட்டங்கள் நிறைந்த சினிமாவை வெறுத்த முஸ்லீம்கள் எத்தனை பேர்.?
- சினிமாவோடு சம்பத்தப்பட்ட பெயர் தாங்கி முஸ்லீம்களின் சாதனையைக் கண்டு பெருமிதம் கொண்டவர்கள் பலராகவே இன்றைய முஸ்லீம்கள். உதாரணமாக ஏ ஆர் ரஹ்மானின் சினிமா இசைக்கு அடிமையானவர்கள் எத்தனை பேர்? சினிமா கூத்தாடிகளுக்கு துணை நிற்கும் இவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்தும் ஆனந்த கண்ணீர் விட்டவர்களின் முஸ்லீம்களே அதிகம் என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
- சினிமா பாடல்கள், சினிமா பாடல் தொடர்பான டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்காத, கேட்காத, வெறுக்காத முஸ்லீம்கள் எத்தனை பேர்?
இப்படி சினிமாவோடு தொடர்புபடுத்தி கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கலாம். சினிமா நம்மை எவ்வளவு மூடர்களாக்கி விட்டது சிந்திருக்கிறோமா? ஆனால் முஸ்லீம்களாகிய நாம் பல சந்தர்பங்களில் உணர்ச்சிவசப்படுகிறோமே தவிர சிந்திக்க தவறுகிறோம்.
“முஸ்லீம்களும் இஸ்லாமிய சினிமா எடுக்க வேண்டும்” என்று சகோதரர் ஆளூர் நவாஸ், இலங்கையை சேர்ந்த ஓர் அமைப்பும் முயற்சி செய்து வருகிறார்கள். ஷியாக்கள் எடுக்கும் இரானிய சினிமாக்களை இஸ்லாமிய சினிமா என்று உதரணம் காட்டி, இஸ்லாமிய சினிமா அவசியம் என்று நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் யதார்த்தம் என்னவென்றால் இஸ்லாம் வெறுத்த பொய்யான கற்பனை, நடனம், இசை, நகைச்சுவை இல்லாமல் சினிமா அன்மைகாலத்தில் சாத்தியமா, மக்களிடம் சென்றடையுமா? என்ற கேள்விகள் ஒரு பக்கம் இருந்தாலும், நடிப்பு இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பதை பின் வரும் ஹதீஸின் மூலம் அறியலாம்.
(ஒரு தடவை) நபியவர்களிடம் ஸபியா இப்படி இப்படி என்று அவரை உயரமற்றவர் எனச் சொல்லிக்காட்டினேன். அதற்கவர்கள் 'நீங்கள் இப்பொழுது சொன்ன வார்த்தையை கடலில் கலந்தாலும் கடலை நாற்றமெடுக்கச் செய்து விடும் என்று சொன்னார்கள். (ஒரு தடவை) நபியவர்களிடம் ஒருவரின் செயலை செய்து காட்டினேன். ஒருவரைப் போன்று செய்து காட்டுவது எவ்வளவுதான் எனக்குக் கிடைத்தாலும் நான் விரும்பமாட்டேன் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, ஆதாரம்:அபூதாவூத்-4875
இந்த ஹதீதில் இரண்டு விசயங்கள் புலப்படுகிறது.
1. அன்னை ஆயிசா(ரழி) அவர்கள் அன்னை ஸபிய்யா(ரழி) அவர்கள் இப்படி இருப்பார்கள், அப்படி இருப்பார்கள் என்று சொல்லி செய்து காட்டியதை வன்மையாக கண்டிக்கும் விதமாக, ஆயிசா(ரழி) அவர்கள் சொன்ன வார்த்தையைக் கடலில் கலந்தால் கடல் நாற்றமெடுக்கும் என்று கடுஞ்சொல்லை பயன்படுத்தியுள்ளார்கள். ஒருவரை போன்று நடித்து காட்டுவதையும், பழித்துக்காட்டுவதையும் இங்கு நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்று நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது.
2. அன்னை ஆயிசா(ரழி) அவர்கள் ஒருவரை போல் நடித்து காட்டியபோது நபி (ஸல்) அவர்கள் கூறிய வார்த்தையை இங்கு நாம் கவனிக்க வேண்டும். ஒருவர் போல் நடித்து காட்டுவதற்கு எனக்கு எவ்வளவு தான் (இவ்வுலகில் செல்வமாகவோ, பணமாகவோ) எனக்கு கிடைத்தாலும் நான் அதை விரும்பமாட்டேன் என்று கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் நடித்துக்காட்டுவதை விரும்பவில்லை, வெறுத்துள்ளார்கள் என்பது நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது.
நம்முடைய உயிருனும் மேலான நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பிறர் நடிப்பதை தடுத்துள்ளார்கள், தானும் பிறர் போல் நடித்துக் காட்டுவதை வெறுத்துள்ளார்கள் என்று ஹதீஸின் மூலம் அறிந்த பிறகும், நடிப்போடு தொடர்புடைய இசை, சினிமா, சீரியல், நகைச்சுவை காட்சிகள் என்று நவீன சைத்தானிய ஊடகத்திலிருந்து நம்மை தூரமாக்கினால் மட்டுமே சினிமா என்ற கேடுகெட்ட ஊடகத்தை அழித்தொழிக்க வலுவான சக்தியாக முஸ்லீம்கள் உருவாக முடியும்.
ஒன்று மட்டும் நிச்சயம் நபி (ஸல்) அவர்கள் விரும்பியதை விரும்பி செய்பவனே உண்மை முஸ்லீமாக இருக்க முடியுமே தவிர, நபி (ஸல்) அவர்கள் விரும்பாத, வெறுத்த செயல்களை விரும்பி செய்பவன் உண்மை முஸ்லீமாக இருக்க முடியாது என்ற கருத்தை இங்கு உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.
குர் ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் காட்டித்தந்த தூய வழியில் நம்முடைய வாழ்வை அமைத்துக்கொண்டால் மட்டுமே அல்லாஹ்வின் நல்லருள் கிடைக்கும். அல்லாஹ் நம் எல்லோருக்கும் நல்லருள் புரிவானாக.
இந்தப் பதிவை படிப்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி, சினிமா பார்ப்பதால் குறைந்தபட்சம் 5 நன்மைகள் உங்களால் கூற முடியுமா?
விரும்பினால் கருத்துப் பெட்டியில் பதில் தரலாம்.
M.தாஜுதீன்

