கண்களை அலங்காரம் செய்தல் (பெண்களுக்கு மட்டும்):
கீழே அலஅங்காரம் பற்றி எழுதியுள்ளேன் கணவனுக்கு மட்டும் காட்ட அலங்கரம் செய்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது ஆனால் அந்த அலங்காரத்தை அன்னியனுக்கு காட்டுவதாக இருந்தால் மட்டுமே அலங்காரம் செய்வது இஸ்லாத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது
வெளியில் செல்லும் கணவன், மாலையில் வீடு திரும்பும் போது களைப்புடன் வருவான். களைப்பாக வரும் கணவனை உற்சாகமூட்டி கவரும் வகையில் தன் அழகை மெருகூட்டிக் கொண்டால் நல்லதுதானே. அதைச் செய்யத் தயங்கும் தன் மனைவி மீது எரிந்துவிழத் துவங்கும் கணவன். காலப் போக்கில் வேறு பாதையில் திசைமாறிச் செல்கிறான். சில நல்ல கணவர்கள் தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தினாலும் கூட தங்களை அலங்கோலமாகக் காட்டிடும் மனைவியால் அங்கு சண்டைச் சச்சரவு தொடர்ந்து ஏற்படத்தானே செய்யும்.
பொதுவாக, நீ உன் குழந்தைப் பருவத்திலேயே ஆடை அலங்காரத்தில் அதிகம் கவனம் செலுத்துவாய். அதை இப்போது கைவிட்டு விடாதே! உன் கலருக்கு ஏற்ற கலர் ஆடைகளைத் தேர்வு செய்து நல்லவிதமாக அலங்காரம் செய்து கொள்! கண்களுக்கு சுருமா இட்டு, நறுமணம் பூசி, பூச்சூடி, சிரித்த முகத்துடன் கணவரை வரவேற்றுப் பார்! அளவிலா மகிழ்ச்சி கிடைக்கும். சோர்ந்து வரும் உன் கணவர், சுறுசுறுப்பாகி விடுவார். உன்னைச் சுற்றி சுற்றி வருவார். இது ஒன்றும் மார்க்கத்தில் தடை செய்யப் பட்டதல்லவே! ஆனபடியால் மேற்கொண்டு வரும் தகவல்களுக்கு தயவு செய்து யாரும் தவறாக கருத்திட வேண்டாம் கண்ணை பற்றி எழுதும்போது எதையும் மறைக்க கூடாது என்பதால் எல்லாவற்றயும் எழுதிடலாம் என்பதால் அலங்காரம் பற்றியும் எழுதுகின்றேன்
மேலே நான் மேற்கோள் காட்டிய விளக்கத்தில் அலங்காரம் எதற்கு செய்ய வேண்டும் என்பதை புரியலாம். ஆனால், தற்போது அதற்கு நேர் எதிரான
நிலைகளை மேற்கொண்டு கணவனின் அன்பையும், இறையன்பையும்
இழந்து நிற்கும் முஸ்லிம் பெண்களை என்னவென்பது! மகளே! வீட்டில் கணவர் அருக்கும் போது தலைவிரிக் கோலமாக காட்சியளித்துவிட்டு அன்னிய ஆடவர்களுக்கு உன் அழகை காட்டாதே
பொதுவாகப் பெண்கள் தங்களது அலங்காரங்களை வெளிப்படுத்தக்கூடாதுஎன்று திருகுர்ஆன் கூறும் அதே வேளையில் வெளிப்படையானஅலங்காரங்களை மட்டும் பெண்கள் வெளிப்படுத்திக் கொள்ள அனுமதியளிக்கின்றது.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள்தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிரமற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின்மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர்,தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள்,பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.” (அல்குர் ஆன் 24: 31)
மேற்கண்ட வசனத்தில் வெளிப்படையான அலங்காரங்களைத் தவிர மற்றஅலங்காரங்களை அன்னிய ஆண்களிடமிருந்து பெண்கள் மறைக்கவேண்டும் என்று உத்தரவிடப்படுகின்றது.
கண் புருவம், இமை இவைகள் அழகாக இருந்தால்தான் கண்களும் எடுப்பாக அழகாக இருக்கும். கூடிய மட்டும் புருவத்திற்கு பென்சில் உபயோகிப்பதை தவிருங்கள் அது முகத்திற்கு ஒரு செயற்கையான தோற்றத்தை உருவாக்கும்.
கண் இமைகளை பொறுத்த வரை அதிக முடி மற்றும் மேல் நோக்கிய இமை முடிகள் அழகான தோற்றத்தை அளிக்கும். கண் இமைகள் குறைவாக இருப்பின் அதன் அடர்த்தியை அதிகப்படுத்திக் காட்டும் மஸ்காராக்களை உபயோகிக்கலாம்.
இப்போதைய பேஷன் கண் இமைகளின் மேல் கறுப்பு ஐலைனர் கொண்டு வரைந்து முனைகளை பழங்கால ஸ்டைலில் சிறிது மேல் நோக்கி வளைத்து விடுவதுதான். ஐலைனர் போட்டு கீழேயும் மை போடுவது எல்லோருக்கும் எடுப்பாக இருக்காது. கண்ணின் கீழே அதிக சுருக்கம் இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாது.
ஐஷேடோ முக நிறத்திலேயோ, பிரவுன் நிறத்திலேயோ போடுவது இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட். ஐ ஷேடோவில் மூஸ், க்ரீம், ஜெல், பவுடர் என்று பல ரேஞ்சுகளில் உள்ளது. மஸ்காராவிலும் பல நிறங்கள் கிடைக்கின்றன. அவரவர் சருமத்திற்கு தகுந்த நிறத்தை காஸ்மெட்டிக் கடை கன்சல்டண்டின் உதவியுடன் தேர்ந்தெடுங்கள். சிறிதாக இருக்கும் கண்களையும் மஸ்காரா, ஐலைனர் மூலம் கவர்ச்சியாக எடுப்பாக காட்ட முடியும்.
அடுத்து தொடரிலும் கண்களை அலங்கரித்தல் வளரும்
(வளரும்
அதிரை மன்சூர்



