Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label சவால். Show all posts
Showing posts with label சவால். Show all posts

சவால் என்று ஷிர்க் செய்யத் தூண்டுவது சரிதானா? 11

அதிரைநிருபர் பதிப்பகம் | September 17, 2014 | , , ,

தொடர் - 5
அல்லாஹ்வின் திருப்பெயரால்....

"அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!'

உலக மாந்தர்க்கெல்லாம் முன்மாதிரி நம் அருமை இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை, ஏன் பிற மதத்தவர்கள் பலருக்கும் தெரியும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டும் தான் இந்த மனித இனத்திற்கு முன்மாதிரிகளில் முதன்மையானவர் என்று. ஆனால், முன் மாதிரி, என்று வெறும் பேச்சளவில் மட்டுமே நாம் சொல்லுகிறோமே தவிர அவர்கள் நமக்காக அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த வஹியான திருக்குர்ஆனின் கட்டளைகள், அல்லாஹ்வின் கட்டளைப்படி மார்க்கமாக்கப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் இவைகளை நம் வாழ்வில் கடைப்பிடித்து இறை மார்க்கமான “இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா?” என்ற வினாவோடு இந்த அத்தியாயம் தொடர்கிறது.

சவால் என்று ஷிர்க் செய்யத் தூண்டுவது சரிதானா?

மனித இனத்திற்கு முன் மாதிரியான முஹம்மது நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரங்களை அறிந்த நம் சமூகத்தில் உள்ள பலர், தானும் பாவம் செய்து, பிறரையும் செய்து காட்டத் தூண்டும் சமூகமாக மாறிவருகிறது என்பது வருத்தமான செய்தி.

இஸ்லாத்தை உண்மை மார்க்கம் என்று நம்பவைக்க அண்ணல் நபி(ஸல்) அவர்களைப் போன்று வேறு யாரும் இவ்வுலகிற்கு வேண்டுமா? நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய இறுதிப் பேருரையில் இந்த மார்க்க பரிபூரணமாக்கப்பட்டுள்ளது என்று கூறியவுடன் இஸ்லாம் முழுமைபடுத்தபட்டது. இதில் எந்தவித கூடுதலோ குறைவோ இல்லை என்பதை முஸ்லீம்கள் எல்லோரும் ஒத்துக் கொண்டுள்ளோம். ஆனால், அன்மைக் காலங்களில் தமிழகத்தில் நமது சகோதரர்களில் ஒரு சாரார் இஸ்லாத்தை உண்மைப் படுத்துகிறோம் என்று சொல்லி, சிலரை பாவம் செய்யத் தூண்டுகிறார்கள் என்பது மிகவும் கவலைப்பட வேண்டிய விசயமாக இருக்கிறது.

நிகழ் காட்டாக, தமிழகத்தின் உள்ள ஒரு இயக்கம் சூனியக்காரர்களுடன் சூனிய ஒப்பந்தம் செய்திருப்பது இன்று தமிழகத்தில் உள்ள முஸ்லீம்களிடம் மட்டுமல்ல, ஏனைய சமூகத்தின் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று பாவத்தை செய்யத் தூண்டும் 'சூனியச் சவால்கள்' தற்போதைய காலச் சூழலில் தேவைதானா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். காரணம் இன்று உலக அளவில் முஸ்லீம்களுக்கு ஏற்படுள்ள சவால்கள் ஒரு புறம் இருந்தாலும் இந்தியாவில் பாசிச சக்திகளின் மத்திய ஆட்சியில் முஸ்லீம்கள் எதிர்கொள்ளப் போகும் சவால்கள் ஏராளம். ஆனால் கேடுகெட்ட சூனியக்காரர்களுடன் சவால்கள் இன்றையச் சூழலில் அவசியமற்றது. இது செய்வது பாவம் என்ற வாதம் வைக்கப்பட்டால், அதற்கான ஆதாரமாக ஒரு சில குர்ஆனில் வசனங்களை (பார்க்க: குர்ஆன் 20:60-70) வைத்து மூஸா நபி சூனியகாரர்களுடன் போட்டி போட்டார்கள் ஆகவே ஒரு நபியின் வழிகாட்டல் உள்ளதால் நாங்களும் அவ்வாறே ஒரு சூனியக்கார்ர்களிடம் சவால் விட்டு போட்டி போடுகிறோம் என்று தங்களின் செயலை நியாப்படுத்துகிறார்கள். 

குர்ஆன் மற்றும் ஷஹீஹான அடிப்படையில் சூனியம் செய்வதும் செய்யத் தூண்டுவதும் பாவம், சூனியம் கற்பதோ கற்பிப்பதோ பாவம், சூனியக்காரனால் தான் நினைத்ததை செய்ய முடியும் என்று நம்புவது மிகப் பெரிய பாவம் ஷிர்க் (இறை மறுப்பு), குஃப்ரு. ஆனால், சூனியத்திற்கு ஒரு தாக்கம் உண்டு, அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் சூனியத்தால் எந்த பாதிப்பும் செய்ய இயலாது (பார்க்க குர்ஆன் 2:102).

மேலே குறிப்பிட்ட இரண்டு குர்ஆன் வசன எண்களில் உள்ள குர்ஆனிய வசனங்களின் அடிப்படையில் நாம் கொஞ்சம் நிதானமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒருவனை சூனியம் செய்து காட்டு என்று சவால் விடுவது சரியா? தவறா? என்பது புரியும்.

வஹியின் அடிப்படையில் மூஸா நபி செய்ததும், போலி பகுத்தறிவின் ஆய்வென்ற பெயரில் தமிழகத்தில் நம் சகோதரர்களில் ஒரு சாரார் செய்துள்ள சூனியச் சவால் ஒப்பந்தம் செய்ததை மேலும் விளங்குவதற்காக இதோ சில ஒப்பீடு.

முதலாவது ஓப்பீடு..!

கெட்டவனான காஃபிரான ஃபிரவ்ன், அல்லாஹ்வின் தூதர் நபி மூஸா அவர்களை நபி இல்லை என்பதற்காக சூனியக்காரர்களை வைத்து முஸா நபிக்கு சவால் விட்டான்.. முதலில் சவால் விட்டது பிர்அவுன், நபி முஸா அவர்கள் அல்ல.

இன்றோ காஃபிரான அகோரி மணிகண்டனிடம்,  தமிழகத்திலுள்ள அந்த இயக்கத் தலைவர் எனக்கு சூனியம் செய்துப் பார் என்று சவால் விட்டிருக்கிறார். அந்த அகோரியை இறைமறுப்பிலிருந்து விலக்கி எடுக்காமல் மேலும் ஷிர்க்கில் நிலைத்திருக்கவும் தொடர்ந்து செய்யத் தூண்டும் ஒப்பந்தம் போட்டுள்ளார். 

இரண்டாவது ஓப்பீடு...!

அல்லாஹ்வின் தூதரான முஸா நபி அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையைக் (வஹியை) கொண்டே அந்த காஃபிர் பிரவ்ன் விட்ட சவாலை ஏற்கிறார்கள், அல்லாஹ்வின் கட்டளையை (வஹியை) கொண்டே தன்னுடைய ஒவ்வொரு அனுகுமுறைகளையும் செய்து காட்டுகிறார்கள்..

அகோரி மணிகண்டன் மற்றும் அதுல்தீனிடமும் சூனிய ஒப்பந்தம் செய்துள்ள அந்த இயக்கத்தின் தலைவருக்கு அல்லாஹ்விடம் வஹி வந்து சூனியச் சவால் விடவில்லை, அவரின் சூனிய ஒப்பந்தம் இப்படி செய்யுங்கள் அப்படி செய்யுங்கள் என்று அல்லாஹ்விடம் இருந்து வஹி வரவில்லை. அந்த இயக்கத்தின் தலைவர் நபியோ, மலக்கோ அல்ல.

இந்த இரு ஒப்பீடுகளையும் பார்த்தால் நபி மூஸா ஷிர்க் செய்யத் தூண்டினார் என்றால் அல்லாஹ் ஷிர்க் செய்யத் தூண்டினான் என்று சொல்ல வேண்டும், அல்லது ஷைத்தான் முஸா நபியை ஷிர்க் செய்யத் தூண்டியதாக நீங்கள் சொல்ல வேண்டும். இவ்விரண்டையும் அல்லாஹ்வை நம்பி வஹியின் அடிப்படையில் செயல்படும் நபிமார்களை ஏற்றுள்ள எந்த முஃமீனும் சொல்ல மாட்டார், காரணம் நபி மூஸா அவர்கள் வஹியின் அடிப்படையில் செயல்பட்டார்கள் என்பதையே எந்த முஃமீனும் நம்புவார்.

சூனிய ஒப்பந்தம் செய்துள்ள இயக்கத்தவர்கள் முழுக்க முழுக்க தங்கள் பகுத்தறிவைக் கொண்டு செய்த சூனிய ஒப்பந்தத்தை தனக்கு சதகமாக்கிக் கொள்வதற்காக, முஸா நபி செய்தது ஷிர்க் இல்லையா? என்ற குதர்க்கமான அறிவுக்கு பொருந்தாத வாதத்தை எடுத்து வைத்து தங்களின் நிலையையை நியாப்படுத்துகிறார்கள். அது தவறு என்பதை அல்லாஹ் இன்றில்லா விட்டாலும், ஒரு நாள் அவர்களின் உள்ளத்துக்கு தெளிவுபடுத்துவான். இன்ஷா அல்லாஹ்.

வஹியின் அடைப்படையில் நபி மூஸா செய்ததை, தன் போலி பகுத்தறிவின் மூலம் அந்த இயக்கத்தின் தலைவர் செய்வதோடு ஒப்பிடுவது அடிப்படையிலே தவறு என்பது 100 % நிரூபமனமாகிறது. காரணம் அந்த இயக்கத்தின் தலைவர் வஹியின் அடைப்படையில் தன் செயல்களை அல்லாஹ்வின் கட்டுப்பாடுடன் செய்யும் இறைத்தூதர் அல்ல.

நபி மூஸா அவர்கள் செய்தது தவறே அல்ல என்று நிரூபனமாகும் போது, ஷிர்க்கு செய்ய முஸா நபி தூண்டினாலும் அந்த இயக்கத்தின் தலைவர் தூண்டினாலும் அது தவறு தவறுதான் என்று சூனியச் சவால்விட்ட இயக்கத்தவர்களின் ஒப்பீடு அர்த்தமற்றது என்பது நான் மேலே இட்ட ஒப்பீட்டின் மூலம் நிரூபனமாகிறது. 

அகோரி மணிகண்டனையும், அதுல்தீனையும் ஷிர்க்கிலிருந்து விடுவிக்க தூண்டாமல் மாறாக சூனியம் என்ற ஷிர்க் மேலும் செய்யத் தூண்டி அந்த கொடிய பாவத்தை இயக்கத்தின் தலைவரும் சுமந்துள்ளார், அவர்களின் தலைவருடைய செயலை ஆதரிக்கும் சகோதரர்களும் அதற்கு துணை போகிறார்கள். இதனை அவர்கள் அனைவரும் உணர்ந்து அல்லாஹ்விடம் தவ்பா செய்தால் அவர்களுக்கு நாளை மறுமையில் நலன் கிடைக்கும். 

சூனியச் சவால்கள் என்ற இவ்வாறான தவறான அனுமுறைகள் ஒன்றும் இஸ்லாத்திற்கு செய்யும் அர்ப்பனிப்பு அல்ல. மாறாக, இது போன்ற வீண் சவால்களை வைத்து இஸ்லாத்திற்கு நன்மை பயக்கும் என்பதை காட்டி இஸ்லாத்தின் அடிப்படைக்கு வேட்டு வைக்கும் செயலாகவே எடுத்துச் சொல்லும். அல்லாஹ் பாதுகாப்பானாக.

மேலே சுட்டிக்காட்டியுள்ள ஒப்பீடுகள், தனது பகுத்தறிவை குர்ஆன் மற்றும் ஹதீஸுக்கு முரண் இல்லாமல் அனுகுபவர்களுக்கு எளிதில் விளங்கும். பகுத்தறிவை குர்ஆன் சுன்னாவுக்கு முரணாக அனுகுபவர்களுக்கு எளிதில் விளங்குவது கடினம் அல்லாஹ் நாடினால் அவர்களுக்கும் நிச்சயம் விளங்கும். தயவு செய்து பாவம் அது எந்த பாவமாக இருந்தாலும், செய்வதும், செய்யத் தூண்டுவதும் தவறே.

கேவலமானவனும் நாம் அனைவரும் வெறுக்கக்கூடியவனுமான சைத்தானின் தந்திரத்திற்கு துனைப் போகுவிதமாக தன் சிறுநீரையும், தன் உள்ளாடைகளையும், தலை முடிகளையும் கேவலப்பட்டு கொடுத்திருப்பதால், கொடுத்தவர்களை பார்த்து சைத்தான் நிச்சயம் சந்தோசப்படுவான். காரணம் சைத்தான் அல்லாஹ்வை ஏற்றுள்ளவர்கள் கேவலப்படுவதை மிகவும் விரும்புகிறவன் என்பது நான் சொல்லி அந்த சகோதரர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.

கால்களை, கைகளை முடக்குவோம், தற்கொலை செய்ய வைப்போம், குருடனாக ஆக்குவோம், பைத்தியம் ஆக்குவோம், இன்னும் என்னவெல்லாமோ..., என்று கூறியுள்ள அகோரி மணிகண்டன் மற்றும் அதுல்தீனுடைய சூனிய ஒப்பந்ததிற்கும் குர்ஆன் சுன்னா பார்வையில் சூனியத்திற்கு தாக்கத்திற்கும் ஒரு துள் அளவும் சம்பந்தமும் இல்லை. இதனை ஒரு பொருட்டாகவே எந்த ஒரு முஃமீனும் எடுக்கக்கூடாது. கேடுகெட்டவர்கள், அயோக்கியர்கள், சைத்தானின் கூட்டாளிகள் செய்யும் சூனியம் அல்லாஹ் நாட்டமிருந்து அது பலித்தாலும் அல்லது அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் பலிக்கவிட்டாலும், 1400 வருடத்திற்கு மேலாக பாதுகாக்கபட்டுள்ள குர்ஆன் வசனங்களிலும் ஷஹீஹான ஹதீஸ்களிலும் சூனியம் பற்றி சொல்லப்பட்டுள்ளவைகளில் எந்தவித மாற்றம் ஏற்படப் போவதில்லை என்பதை தெளிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்பதை நினைவூட்டுகிறேன். அல்லாஹ் போதுமானவன்.

மற்றுமொரு முக்கிய தகவலை பதிவு செய்கிறேன். சூனியச் சவால் விட்டுள்ள இயக்கத்தின் தலைவருக்கு கேடுகெட்ட அகோரி மணிகண்டன் மற்றும் கோமாளி திருப்பூர் அதுல்தீன் செய்யும் சூனியம் பதிக்கக்கூடாது என்பதே நம் அனைவரின் விருப்பம். அந்த இயக்கத்தின் தலைவர் குர்ஆன் சுன்னா வழியில் எவ்வாறு 10 வருடங்களுக்கு முன்பு ஷஹீஹான ஹதீஸ்களை மறுக்க வேண்டியதில்லை என்றிருந்தாரோ அதே கொள்கையோடு திருந்தி வர வேண்டும். மீண்டும் ஏகத்துவ எழுச்சி தமிழ முழுவதும் அனைத்து ஏகத்துவ சகோதரர்களின் அர்பணிப்புடன், வீரியத்துடன், இஹ்லாசுடன் செயல்பட வேண்டும் என்பதும் நம் அனைவரின் விருப்பம். இதற்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் துனை புரிவானாக.

நம் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களும், உத்தம சஹாபாக்களின் அனுகுமுறைகள், அவர்கள் செய்த தியாகத்தில், அர்பணிப்பில் நம் வாழ்நாட்களில் இஸ்லாத்திற்காக ஒரு துளியளவேனும் நாம் அர்ப்பணித்திருக்கிறோமா ? என்ற சுயபரிசோதனை வினாவை நமக்குள் கேட்டுக் கொள்வோம். நம்மை இஸ்லாத்திற்காக முழுமையாக அர்ப்பணிப்போம். இன்ஷா அல்லாஹ்..

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்

வாழ்க்கைல ஒரு சவால் இருக்கனும் 0

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , , , ,

ஜப்பானில் உள்ள மக்கள் ஆரம்பதில் இருந்தே மீனை பிடித்தவுடன் ( FRESH FISH ) ருசித்து சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள் ( நம்ம ஆள்கள் போலதான் ), ஆனால் மக்கள் தொகை பெருக்கதால் அவர்கள் கரை ஒரத்தில் பிடித்துவரும் மீன் அங்குள்ள மக்களுக்கு போதுமானதாக இல்லை. ஆதலால் அங்குள்ள மீனவர்கள் கடலில் வெகு தொலைவிற்கு ஆழ்கடல் சென்று அதிக மீனை பிடித்து வருவதற்க்கு பெரிய பெரிய படகுகளில் போய் மீன் பிடித்து வந்தார்கள்,ஆனால் கரை வருவதற்க்குள் அதன் புத்துணர்ச்சி (Freshness) தன்மை மாறிவிடுகிறது. அதை மீன் வாங்குபவர்கள் விரும்புவது இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்த மீனவர்கள்..குளிரூட்டும் கருவியை அவர்கள் படகுகளில் பொருத்தி..அதில் பிடித்த மீனை போட்டு கொண்டுவந்தார்கள்..அப்பொழுதும் வாடிக்கையாளர்கள் அது ஜஸ்லே வைத்த மீன்..அதனால ருசி இல்லை என்று வாங்க மறுத்தார்கள்…என்னாடா செய்வதுயேன்று யோசித்த மீனவர்கள்..அவர்களின் படகுகளில் பெரிய தண்ணீர் தொட்டிகளை இணைத்து அதில் தண்ணீர் நிரப்பி..பிடித்த மீன்களை அதில் விட்டு உயிருடன் கொண்டுவந்தார்கள் ஆனால் அது வரும் வழியில் தொட்டியில் நீச்சல் அடித்து,தொட்டியின் சுவர்களில் முட்டி கரை சேருவதற்கு முன்பே களைத்து அதன் புத்துணர்ச்சியை இழந்தன.

ஆனால் இப்போழுது ஜப்பானியர்கள் உயிருடன் பிடித்த மீனை சாப்பிடுகிறார்கள் எப்படி? மீனவர்கள் அதை செய்தார்கள்? அவர்கள் அதை தொட்டியைத்தான் உபோயிகித்தார்கள் ஆனால் அதில் ஒரு சிறிய சுறா மீனை வீட்டார்கள் , தொட்டில் உள்ள மீன்களுக்கு சுறாவிடம் சிக்கினால் ஆபத்துதான். ஆகையால் அதனிடம் இருந்த தப்பிக்க வேண்டும் என்று சவால் எடுத்து, தொடர்ந்து தொட்டியில் இடைவிடாமல் நீந்தி கொண்டு, சுறா என்ற சவாலை எதிர் கொண்டு உயிருடனும் புத்துணர்ச்சியுடனும் இருந்தன.

அதேபோல் நம்மிலும் பலர் இதைபோல் தொட்டியில் சுறா இல்லாமல் வாழூம் மீன்களைபோல் வாழ்க்கையில் எந்தவித இலக்கும், சவாலும் இன்றி கிடைத்ததுபோதும் என்று வாழ்ந்து மற்றும் வாய்ப்பு கிடைத்தும் நழுவ விட்டு நொந்து நூலாகி மதிப்பு இல்லாமல் போய்விடுகிறோம். ஆனால் வாழ்க்கையில் சவாலைகளை எதிர் கொண்டு. அதில் தொடந்து வெற்றி கண்டு அதானால் மகிழ்ச்சி அடைந்து. புத்துணர்ச்சி பெற்று ஏறு நடை போட்டு வாழ்கின்றவர்கள்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

சோம்பேறிதனம் வாழ்க்கையே அழித்துவிடும் அல்லாஹ் நமக்கு எல்லாவித திறமைகளையும் அளித்து இருக்கிறான். வெற்றி தோல்வி என்பது சோம்பேறிதனத்தை அகற்றி கையால்வதில் தான் இருக்கிறது. உங்களுடைய வாழ்க்கை என்ற கடலில் சவால் என்ற சுறாவை விட்டு அதை எதிர் கொண்டு பாருங்கள். அதில் வெற்றியடையும் போது உள்ள மகிழ்ச்சி உங்களை சுறுசுறுப்பாக்கும், சந்தோசமாக வாழ வைக்கும் (அல்லாஹ்வின் உதவியால்)

நீங்கள் இந்த கட்டுரையே படித்து. சோம்பல் படாமல் பின்னூட்டம் இடுவீர்கள் என்று நம்புகிறேன்.

சிந்தனை & ஆக்கம்

யாசிர் -துபாய்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு