ஐக்கிய அரபு அமீரகம், துபாயில் peach 'n' berry என்ற பெயரில் ஐஸ்கிரீம் பார்லர் திறப்பு விழா 14.01.2013 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது
பர்துபாயிலுள்ள ரோலா வீதியில் அல்-கலீஜ் சென்டர் பின்புறம், இம்பீரியல் ஓட்டல் எதிர்புறம் பாக்கர் முஹைபி கட்டிடத்தில் திறக்கப்பட்டுள்ள peach 'n' berry ஐஸ்-கிரீம் பார்லரில் பிரபலமான அனைத்து வகை சுவைகளிலும், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் வகைகள் கிடைக்கும்.
முட்டை, ஜெலட்டின் மற்றும் செயற்கை சுவையூட்டி அல்லது நிறமிகள் கலவாத, 100% இயற்கை சுவைகளுடன் தரமான ஐஸ்கிரீம் வகைகள் கிடைக்கும்.
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழைக் கொண்டுவரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 20% திறப்புவிழா சிறப்பு தள்ளுபடி வரும் 15-பிப்ரவரி-2013 வரை வழங்கப்படும் என்று உரிமையாளர் அஹமது ஹாஜி அவர்கள் தெரிவித்தார்.
அதிரை சகோதரரின் இந்த நிறுவனத்தை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அறிமுகப்படுத்தி ஆதரவு வழங்கும்படி இதன் உரிமையாளர் சகோதரர் அஹமது ஹாஜி அவர்கள் கேட்டுக்கொண்டார்.
அதிரைவாசிகள் அயல் நாட்டில் தொழில் முனைவோர்களாக வளம்வருவது மிகவும் அறிதே என்றாலும் சகோதரர் அஹமது ஹாஜி போன்றவர்களை கண்டறிந்து அவர்களின் அனுபவங்களை பகிர்வதன் மூலம் ஆர்வமுள்ள அதிரைவாசிகளும் தொழில் முனைவோராக வாய்ப்பு உருவாகும். இன்ஷா அல்லாஹ்.
புகைப்படங்கள் பகிவு : அபு இஸ்மாயில்
அதிரைநிருபர் பதிப்பகம்