அன்றைக்கு
கொஞ்சம் வித்யாசமாக பயணிக்க நினைத்து நான்
இருக்கும் இடத்திலிருந்து ஒரு 100 கிலோ மீட்டர்
தூரம் உள்ள ஸ்லிம் ரிவர்
எனும் ஊருக்கு காரில் போய்
பின்பு ரயிலில் திரும்பினேன்.
பக்கத்தில்
உட்கார்ந்து இருந்தவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. 70 வயது இருக்கும் என்னிடம் அவராகவே பேச்சுக்கொடுத்தார்.
மனதுக்குள்
அவர் ஏதோ சுமப்பது போல்
என் உணர்வு சொன்னது.. தமிழ்நாட்டில்
இருந்து வருவதாக சொன்னார்...ஏதோ
நீடாமங்களம்,
மன்னார்குடி ஊர் பக்கம் மாதிரி
சொன்னார்.
இந்தியாவுக்கு
சொந்தமான அடர்த்தியான காட்டன் சட்டை...கையில்
கொஞ்சம் பெரிய சைஸ் லெதர்
பெல்ட் வாட்ச். இங்க் பேனா,
கையில் ஏதொ நேத்திக்கட கயிறு,
ஒழுங்கு படுத்தாத மீசை..குரலில் ஒரு
விதமான ஸ்ரத்தையின்மை..அனுபவத்தை எழுத ஆரம்பித்த வெள்ளைமுடிகளின்
ஆதிக்கம்.
முதன் முறையாக மலேசியா வந்ததாக
சொன்னார்.
நீங்கள்
தேடி வந்தது.... உங்களிடம் சின்ன வயதில் பழகிய
பெண்ணா?.... இப்போது வயது எப்படியும்
60 தை தாண்டியிருக்க வேண்டுமே??. இப்படி
கேட்ட உடனே...
”எப்படி இவ்வளவு
துள்ளியமா சொல்ரே தம்பி? என்றார்.
“இந்த வயதில் இவ்வளவு தூர
பயணம்...காதல் / நட்பு இரண்டுக்குத்தான்
மிகப்பெரிய சாத்யம்” என்றேன்
சின்ன வயதில் ரொம்ப கஷ்டப்பட்டேன்.
சம்பாத்யம் சரியாக இல்லாமல் , தங்கை
, தாய் , சகோதரன் எல்லோரையும் கவனிக்க
ஓய்வில்லாமல் உழைத்தேன் அற்ப காசுக்கு...என்கிட்டே
அன்பா இருந்தது இந்த புள்ளெதான் [இன்னும்
புள்ளெ இமேஜில் இருந்து அந்த
அம்மா டெலிட் ஆகலே]. எல்லோரும்
என்னெ வையும்போது 'நீ ஒரு நாள்
நல்லா வருவே"னு தைரியம் சொன்னது
இந்த புள்ளெ தான்
ரயிலின்
வேகத்துக்கு அவரின் பேச்சு கொஞ்சம்
திணறியது. கொஞ்சம் அவதானித்தே அவர்
பேசினார்.

'அப்புறம்
நீங்க விரும்பறதெ சொல்லலியா?''
சொல்லலாம்னு
நினைக்கும்போதெல்லாம் ஏதாவது தடைவரும்...ஆனா
அது ஒருமுறைகூட அப்படி என்னிடம் பேசியதில்லெ...மனசுலெ இருந்திருக்கலாம்.
ஒரு நாள் சொல்ல நினைத்து
, பண வசதி , வறுமை எல்லாத்தடையும்
மீறி சொல்ல போனால் ...அந்த
புள்ளெக்கு கல்யாணப்புடவை எடுக்க கும்பகோணம் பஸ்ஸில்
அந்த புள்ளெயோட வீட்லெ உள்ளவங்க புறப்பட்டு போனவுடனே
என்னுடைய மனசை மாத்திக்கிட்டேன்...பிறகு அந்த புள்ளெ இங்கெ கல்யாணம் கட்டி இங்கெ வந்து
இப்போதைக்கு பெரிய குடும்பம்...வசதி அப்படி ஒன்னும் சொல்லிக்கிறாப்லெ இல்லெ.. எனக்கு பிறகு கல்யாணம்
, குடும்பம் , பிள்ளைங்க , பேரப்புள்ளைங்க, கார் , வீடு , சொத்து , எல்லாம் குறையில்லெ....
'இருந்தாலும் உங்க
குடும்பத்திலெ...இப்போதைக்கு உங்கள் சொல்லுக்கு அவ்வளவுக்கு முக்கியத்துவம் இல்லெ..."
'இது ஒன்னும் அதிசயமில்லெ....இது
பரிணாம வளர்ச்சி மாதிரியான விசயம், செடி வளந்து பிறகு வயதாகி காய்ந்து போற மாதிரி..'
இப்போ அவங்க வீட்டுக்கு
போனீங்களா?...
'போனேன்...அவங்க
வீட்டுக்காரர் , அந்த புள்ளே , அதனோட பேரப்புள்ளைங்க எல்லாம் என்னெ நல்லா கவனிச்சாங்க..."
இப்போ நாங்க ரென்டு பேரும் வாழ்க்கையின் கடைசிய்லெ நிக்கிறோம், எனக்கு உள்ள சீக்கு
புணியெ சொல்லிக்காண்பிச்சேன்'…
அந்த புள்ளே நான்
அவங்க வீட்டெ விட்டு புறப்படும்போது என்ன சொன்னிச்சு தெரியுமா?..."
நீங்க நல்லா இருப்பீங்க..உங்களுக்கு
ஒரு குறையும் வராது"...
"உன் கிட்டே
பேசினப்புறம் மனசு ரொம்ப லேசாயிடுச்சு தம்பி " என்றார். உன்னெ பார்த்தப்போ எனக்கு என்னவோ என் வாழ்க்கையில்
நடந்ததை சொல்லனும்னு தோனுச்சி'''
சிலரின் எண்ண ஒட்டம்
எவ்வளவு தூரம் அன்பைத்தேடி இவ்வளவு தூரம் பயணம் செய்ய வைத்துள்ளது என்பதை நினக்கும்போது
ஆச்சர்யமாக இருந்தது.
மனிதன்
செய்யும் மிகப்பெரிய தவறு நாம் அன்பு
செலுத்துபவர்கள் எல்லாம் நம்மிடம் அன்பாகத்தான்
இருக்கிறாற்கள்/ இருப்பார்கள் என்று நம்புவது.
உறவு என்பதே மாயை...இந்த
மாயையை நிஜமாக்கி பின்னப்பட்டதுதான் வாழ்க்கை. இந்த மாயையில்தான் மனிதன் இத்தனை வக்கிரங்களையும், அன்பையும், தர்மத்தையும், கஞ்சத்தனத்தையும் ..
மன்னிக்கும் தன்மையையும்
வன்முறையையும் நிஜம் என்று நம்பி வாழ்கிறான். உறவுகள் இல்லாவிட்டால் வாழ்க்கையில் பிடிமானம்
இருக்காது, வெல்வதற்கு எதுவும் இருக்காது... பின்னாளில் உறவுகளின் நடத்தையை வைத்து அந்த
மாயையில் ப்ரயோஜனம் இருக்கிறதா இல்லையா என்பது தெரிய வரும்.
எல்லோருக்கும்
காலம் தான் பதில் சொல்லும்.
ZAKIR
HUSSAIN