தட்டுப்பாடு, கட்டுப்பாடு, ஊரெல்லாம் ஒரே கூப்பாடு ! மின்சாரத்தை வெட்டாதே ! எங்கள் வாழ்வாதாரத்தில் விளையாடாதே ! உயிரைப் பனையம் வைக்காதே... தொடரும் போராட்டங்கள். இதெல்லாம் எதற்கென்று தெரியாததுபோல் ஒரு கூட்டம் தான் உண்டு தனது நிலைகண்டு நாட்களை கடத்துகிறது.
மின்சாரத்திற்கான தேவையுடைய மக்களின் கோரிக்கையைவிட அது கிடைக்கப்பெறும் உலைய மூட போராடும் மக்களின் கோரிக்கை வலுத்திருந்து இப்போது வழுவிழந்து நிற்கிறது ! மின்சாரத்தை தொட்டாலும் பேராபத்து அதனை கிடைக்காமல் விட்டாலும் ஆபத்து !
என்ன செய்யலாம் !? - கூழுக்கும் ஆசை மிசைக்கும் ஆசை !
அணுவை வைத்து மின்சாரம் எப்படி உற்பத்தி செய்கின்றார்கள் என்பதைப் பார்ப்போம்
அணுக்கரு பிளவுக்கு முக்கியமாக பயன்படுத்தப்படுவது யுரேனியம் அல்லது புளுட்டோனியம் இதில் எது நம் நாட்டின் மண்ணில் அதிகம் கிடைக்கின்றதோ அதை வைத்து . “இந்த அணு ஆற்றலை உருவாக்கத் தேவையான மூலப் பொருள் தயார் செய்யப்படுகின்றது ஒவ்வோர் அணுமின் உலையிலும் அணுக்கரு பிளப்புக்கு தேவையான யுரேனியம் அல்லது புளுட்டோனியம் கம்பிகள். எதிர் எதிராக இருக்கும் இந்தக் கம்பிகளைக் “கோர்’ என்று சொல்வார்கள்.(நாம் கார்களுக்கு பயன்படுத்தும் ரேடியேட்டரில் இருப்பதுபோல்) அணு உலையில் நடுப் பகுதியில் அணுக்கலனில் உள்ள தண்ணீரில் இந்தக் கோர் வைக்கப்பட்டு இருக்கும். உலோகத்தால் செய்யப்பட்ட இந்த அணுக்கலன் மிகவும் பாதுகாப்பானது.(அப்படித்தான் சொல்றங்க!) அணுக்கரு பிளப்பை கட்டுக்குள் வைப்பதற்குப் “போரான்’ இல்லையென்றால் காட்மியம் என்ற கட்டுப்பாட்டு கருவி வைக்கப்பட்டு இருக்கும். இதற்கு கட்டுப்பாட்டு கம்பிகள் என்று சொல்வார்கள் இது செயல் இழந்தால் யாரும் செயல் பட முடியாது
அணுக்கருவைப் பிளக்கும் போது (அதாவது நியூட்ரான்கள் என்னும் அணுத்துகள்களை மோதி பிளக்க செய்வது) மிக அதிக அளவில் வெப்பம் வெளிப்படும் . அந்த வெப்பத்தைக்கொண்டு கலனுக்குள் உள்ள நீரை கொதிப்படைய செய்து நீரை ஆவியாக்குவார்கள் இங்கே வெளிப்படும் அணுக்கதிர்கள் வெளியே வராத அளவுக்கு அணுக்கலனின் சுவர் மிகவும் தடிப்பாகவும் அணு கதிர் வீச்சை தாங்க கூடிய தன்மையிலும் அமைக்கப்பட்டிருக்கும் .
மேலும் அணுவை பிளக்கும் போது ஏற்படும் கடும் வெப்பத்தினால் கொள்கலனில் உள்ள நீர் கொதித்து நீராவி உருவாகும் நிலக்கரி எஞ்சினில் நீராவி வருவதை விட பலமடங்கு அதிகமான அழுத்தம் மிகுந்த அந்த நீராவி குழாய் மூலம் கொண்டு வரப்பட்டு அந்த அழுத்தத்தின் மூலம் பெரிய அளவில் உள்ள டர்பன் என்று சொல்லப்படும் டைனமோ சுழற்றப்படும் அது சுற்றுவதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்
இந்த வகையில் பார்க்கும்போது அணுமின்சாரம் உருவாக்க அடிப்படையாக அணு உலையில் ஏற்படும் வெப்பமே காரணம் வெப்பத்தைத் தணிக்க (சூட்டை தணிக்க)தண்ணீர் பயன்படுத்தப்படுகின்றது.மறுபக்கம் உலையில் (தொட்டியில்) . அணுக்கலனின் வெப்பம் குறிப்பிட்ட அளவை தாண்டாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம் . இதனால் தண்ணீர் மூலம் அணுக்கலன் எப்போதும் சூட்டை தனித்துக்கொண்டே(COOLING SYSTEM) இருக்க வேண்டும் இதற்கு அதிகமாக தண்ணீர் தேவைப்படும்.அதனால் தான் அணு உலைகள் எப்போதும் கடற்கரை ஓரமாக அமைக்கின்றார்கள்
கடல் நீரை பெரிய பம்புகள் வைத்து உரிந்து அணுகலன் உள்ளே செலுத்தி மறுபக்கம் அந்த நீர் சூடாக வெளியே வரும் இப்படி கடல் நீர் உறிஞ்சப்படும் போது மீன்களும் மீன் குஞ்சுகளும் உறிஞ்ச படாமல் பாதுகாப்பு செய்யப்பட்டு இருக்கும் இது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருப்பதால் அணுகலன் அதிக அளவில் சூடாகி வெடித்து விடாமல் இருக்கும் இதில் ஏதாவது தவறு ஏற்பட்டு, தண்ணீர் வராமல் நின்று போனால் அணு உலை சூடு தாங்காமல் வெடித்து விடும். அப்படி வெடித்தால் என்ன ஆகும் என்று அதனைச் சுற்றியிருப்பவர்களுக்கு தெரியும் முன்பே உயிர் அவர்களை விட்டு பிரிந்து போயிருக்கும்.
Sஹமீது