மேற்கண்ட தலைப்பை வைத்தே நாம் இங்கு என்ன சொல்ல வருகிறோம்/எழுத வருகிறோம் என்பதை படிக்காத ஒரு பாமரன் கூட எளிதில் யூகித்து விட முடியும்.
தேசிய ஜனநாயகக்கூட்டணியின் பிரதான கட்சியான பாஜகவின் பாராளுமன்ற தேர்தல் குழுதலைவராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பும் சரி அதற்கு முன்பிருந்தும்
சரி நரேந்திர மோடியின் ஆட்டம், பாட்டம் தாங்க முடியவில்லை.
நீர் வருங்கால பாரதத்தின் பிரதமராக ஆகிவிட்டுப்போ அல்லது அதற்கும் மேலாக இந்திய நாட்டின் ஜனாதிபதியாக கூட ஆகி விட்டுப்போ இல்லை சர்வதேச எல்லைகளைத்தாண்டி அமெரிக்காவின் அதிபராக கூட ஆகி விட்டுப்போ இறைவன்
யாருக்கும் தந்த வாழ்வு குடி மூழ்கிப்போய் விடப்போவதில்லை அவனுடைய கால அவகாசம் இவ்வுலகில் இருக்கும் வரை.
சமீபத்தில் ஒரு ஆங்கில ஏட்டிற்கான பிரத்யேக பேட்டியில் நரேந்திர மோடி கூறுவது "கோத்ரா சம்பவத்திற்குப்பிறகு குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். என்ன செய்வது? நாம் கார் ஓட்டிச்செல்லும் பொழுது சக்கரத்தில் சிக்கி ஒரு நாய்க்குட்டி அடிபட்டு இறந்து விட்டால் யாரும் இறக்கப்படத்தான் செய்வோம். அதுபோல் தான் அன்று நடந்த அந்த சம்பவங்களும்" என்கிறார்.
எப்படி தமிழகத்தில் ஆளும் கட்சியின் பிரமுகர் ஒருவர் சட்டசபையிலோ அல்லது வெளியிலோ
"மஞ்சள் துண்டார், கருப்புக்கண்ணாடியார், மனைவி, துணைவி, இணைவியை உடையார்" என்றெல்லாம் ஒருவரை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தால் அது நிச்சயம் முன்னால் முதல்வர் கருணாநிதியைத்தான் திட்டுகிறார் என எளிதில் எவரும் அவதானித்துவிட முடியும். அது போல் தான் அன்று ரொம்ப விழிப்புணர்வோடும், சாதுரியமாகவும் யாரையும் குறிப்பிடாமல் பேசி இருப்பதாக தெள்ளத்தெளிவாக நாட்டின் முஸ்லிம்களைத்தான் இப்படி நாய்க்குட்டிக்கு சமமாக இழிவாக பேசி இருக்கிறார் என்பதை எல்.கே.ஜி. படிக்கும் சிறுவன் கூட எளிதில் சொல்லி விட முடியும்.
அவர்கள் ஆசைப்பட்டது போல் அயோத்தியில் பழமை வாய்ந்த பாபர் மசூதியை ராம ஜென்ம பூமி என்ற மாயயை ஏற்படுத்தி இடித்துத்தள்ளினார்கள்.
அதைத்தொடர்ந்து நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடாத்தப்பட்ட கலவரங்களில் சிறுபாண்மை சமூகத்தினரை கொன்று நல்ல அறுவடையை பார்த்தனர்.
பிறகு அன்றைய பம்பாயில் நடாத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பிற்குப்பின் ஏற்பட்ட பெரும் கலவரத்தில் பெருமளவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து நாட்டில் தங்கள் கைவசம் உள்ள அனைத்து ஊடகங்கள் மூலம் முஸ்லிம்கள் எல்லோரும் தீவிரவாதிகளல்ல, ஆனால் தீவிரவாதிகள் எல்லோரும் முஸ்லிம்கள் தான் என்ற ஒரு மாயத்தோற்றத்தை மக்கள் மனதில் பதித்தனர். அதனால் பெரும் வெறுப்பை அப்பாவி மக்கள் மனதில் கூட ஏற்படுத்தி சிறுபாண்மை சமூகம் சொல்லிமாளாத்துயரங்களை அன்று முதல் இன்று வரை சந்திக்க வித்திட்டனர்.
அந்த அசாதாரன சூழ்நிலையை மனதில் கொண்டு நாட்டில் பல இடங்களில் தங்கள் மேல் எவ்வித சந்தேகமும் எவருக்கும் வரா வண்ணம் ஆஜ்மீர், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில், காசி, வாரணாசி, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், மலேகாவ், கோவை இன்னும் பல இடங்களில் குண்டுவெடிப்புகள் நடாத்தப்பட்டு அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட காரணமாக இருந்தனர். அதைத்தொடர்ந்து கனவுகளுடன் வாழ்ந்து வந்த சிறுபாண்மை சமூகத்தின் பல அப்பாவி இளைஞர்கள் எளிதில் வெளிவர இயலாத சிறைவாசம் செல்ல காரணமாகினர். அவர்கள் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து நின்றன. அவர்கள் வியாபாரஸ்தாபனங்களும், சொத்துக்களும் ஊடகங்கள், காவல்துறையினர் முன்பே சூரையாடப்பட்டன. அக்குடும்ப பெண்கள் மிரட்டப்பட்டு பலரால் கற்பழிக்கப்பட்டனர்.
கஷ்மீரில் எல்லை தாண்டிய பாக்கிஸ்தானிய தீவிரவாத செயல்களுக்கு உள்ளூர் மக்கள் உதவுகிறார்கள் என்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி சந்தேகத்தின் பெயரில் எந்த வீட்டினுள்ளும் எவ்வித அனுமதியும் இன்றி ராணுவம் சென்று அங்குள்ள இளைஞர்கள் கைது செய்யபட்டனர் அல்லது என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவ்வீட்டு பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இந்த துயரப்பட்டியல்கள் நீண்டு கொண்டே போகும் நிறுத்தப்புள்ளி இல்லாமல் அதனால் எழுதும் எனக்கும், படிக்கும் உங்களும் மன அயர்வைத்தான் கொடுக்கும்.
நம்முடைய கேள்வி என்னவெனில் "இந்த புனித ரமளான் மாதத்தில் முஸ்லிம்கள் எல்லோரும் தாகித்து, பசித்திருந்து, விழித்திருந்து படைத்தவனை வணங்கும் இவ்வேளையில் இப்படி சக்கரத்தில் சிக்கி அடிபட்டு சாகும் நாய்க்குட்டிக்கு சமமாக இழிவுபடுத்தி இருப்பது மோடிக்கு சந்தோசத்தை தருவதாக இருந்தால் தந்து விட்டுப்போகட்டும்" இதைத்தாண்டிய இழிவுகளையும், சோதனைகளையும், வேதனைகளையும், இழப்புகளையும், கண்ணீரையும் இந்த அப்பாவி சமுதாயம் அன்றிலிருந்து இன்றுவரை தாங்கிக்கொண்டு
தான் இருக்கிறது. இதனால் என்ன இடிந்து தரைமட்டமாகிவிடப்போகிறதா என்ன?
சமீபத்தில் உத்தர்காண்டில் ஏற்பட்ட இமயமலை சுனாமியால் பல ஆயிரக்கணக்கான
மக்கள் கொல்லப்பட்டனர். அங்கு மீட்புக்குழுவில் இவரும் ஒரு குழுவை ஏற்படுத்தி ஊடகங்களின் பார்வையில் குஜராத்திகளை மட்டும் பொருக்கி எடுத்து உதவியதை 15000 பேரை காப்பாற்றி மாநிலம் தாண்டி சாதித்துக்காட்டினார் மோடி என தமிழக தினமலர் கூட புகழாரம் சூட்டி மகிழ்ந்தது.
இந்தியா முழுவதும் 7000 மென்பொருள் வல்லுநர்களை ஊதியத்தில் நியமித்து பேஸ் புக், டிவிட்டர், என பல சமூக வலைதளங்களில் தன் புகழ்பாட இவர்கள் நியமித்திருந்ததை நாடே அந்த ஊடகங்கள் மூலமே நன்கறியும்.
ஒரு நல்ல மனிதர் என்பவர் தன் ஒட்டு மொத்த நன்னடத்தையின் மூலமே மக்கள் மனதில் நற்பெயர் எடுக்க வேண்டுமேயொழிய எவருடைய அழுத்தத்தாலோ, வெறும் விளம்பரத்தாலோ, மிரட்டலாலோ அல்ல.
சமீபத்தில் ஒரு அரசு அதிகாரியே இப்படி நாட்டின் பொத்தி, பொத்தி பாதுகாக்கப்பட்ட ஒரு பரம ரகசியத்தை சமீபத்தில் ஊடகங்கள் மூலம் கசிய விட்டிருப்பதை அன்றாடம் செய்தித்தாள்களிலும், பேஸ் புக்கிலும் பார்த்து வருகிறோம்.
"பாராளுமன்ற தாக்குதலும், மும்பை தாக்குதலும் அரசால் நன்கு திட்டமிடப்பட்டு அரசு கொண்டு வர இருக்கும் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை எவ்வித ஆட்சேபனையும் இல்லாமல் ஏகோபித்த முடிவில் நிறைவேற்ற அவர்களாலேயே நடாத்தப்பட்டது தான் அந்த தாக்குதல்களும் அதைப்பின் தொடர்ந்து அப்சல் குரு என்னும் ஒரு கஷ்மீர் ஏழை இளைஞனுக்கு நிறைவேற்றப்பட்ட தூக்கு தண்டனையும்" என அரசு அதிகாரி வாயிலாகவே கசிய விட்டிருப்பது இந்த நாடு போகும் போக்கு எங்கு போய் முடியும் என தெரியவில்லை.
உயர் ஜாதி என்று மார்தட்டிக்கொள்ளும் பிராமண சமூகம் ஒட்டு மொத்த நாட்டு மக்கள் தொகையில் 4 அல்லது 5 சதவீதமே இருந்தாலும் எல்லோரும் தங்கள் சதவீதத்திற்கு பல மடங்கு கூடுதலாகவே நல்ல, நல்ல பதவிகளிலும், ஆட்சி அதிகார ஆளுமையிலும், முக்கிய முடிவெடுக்கும் பதவிகளிலும் அலங்கரித்து வருகின்றனர். இதையும் தாண்டி இவர்கள் என்ன தான் எதிர்பார்க்கின்றனர் என அந்த வல்லோனுக்கே நன்கு விளங்கும்.
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து மோடி பாராளுமன்ற தேர்தல் குழு தலைவராக்கப்பட்டபின் அதை விரும்பாமல் வெளியேறிய பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு தக்க பாடம் விரைவில் புகட்டப்படும் என்று வெளிப்படையாகவே மோடி பேசிய ஒரு சில நாட்களிலேயே பீகார் புத்தகயாவில் குண்டுவெடிப்பு நடாத்தப்பட்டது. அதற்குப்பின் வழக்கம் போல் சில சந்தேக நபர்களின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டு இறுதியில் உண்மைக்குற்றவாளிகள் யாரென்று தெரிந்தும் அவர்கள் கைது செய்யப்படாமல் ஊடக நினைவுலக தாதா இந்திய முஜாஹித்தீன் குண்டுவெடிப்பிற்கு பொறுப்பேற்றுக்கொள்வது நாட்டில் வாடிக்கையாகி விட்டது. உண்மையிலேயே இந்த இந்திய முஜாஹித்தீன் என்ற அமைப்பு ஒன்று இருந்து அதன் மூலம் பயங்கரவாதிகள் நாட்டில் பல அசம்பாவிதங்களும், குண்டு வெடிப்புகளும் நடத்தப்பட்டு அப்பாவிகள் கொல்லப்பட காரணமாக இருந்து வந்தால் இவ்வமைப்பு நிச்சயம் எவ்வித மாற்றுக்கருத்திற்கும் இடமின்றி சுவடே தெரியாமல் அழிக்கப்பட வேண்டும் என்பதில் ஒரு உண்மையான முஸ்லிமே உறுதியாக முதலில் நிற்பான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. காரணம் இஸ்லாம் ஒரு போதும் பொது ஜனங்களுக்கு வழியில் ஒரு சிறு முள்ளால், கல்லால் இடையூறு வருவதை கூட அனுமதிக்காது. பிறகு எப்படி அப்பாவிகளை கொல்ல அனுமதிக்கும்??? சிந்திக்க வேண்டாமா???
இந்த கட்டுரை எழுத காரணமே இரண்டு நாட்களுக்கு முன்னர் பீகாரில் நடந்த இன்னொரு மிக மோசமான கொடூர சம்பவமே. பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு வழங்கும் இலவச மதிய உணவில் (பீகாருக்கு பாடம் புகட்டுவதாய் நினைக்கும்) சில சமூக விரோதிகள் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து அதை உட்கொண்ட சுமார் 25க்கும் மேற்பட்ட பச்சிளம் பள்ளிப்பாலகர்கள் சுருண்டு விழுந்து அங்கேயே மற்றும் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவங்கள் நம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த அதிர்ச்சிகள் பிள்ளையே இல்லாமல் பல வருடங்கள் தவம் இருக்கும், முயற்சிக்கும் எத்தனையோ தம்பதிகளை நிச்சயம் பெரிதும் பாதித்திருக்கும்.
கர்ப்பிணிப்பெண்களின் வயிற்றை கீறி கிழித்து அந்த சிசுவை எடுத்து கண்ட துண்டமாக வெட்டி வீசுபவர்களுக்கு வேண்டுமானால் இது போன்ற சம்பவங்கள் ஒரு சாதாரன, அன்றாட நிகழ்வாக இருக்கலாம். ஆனால் பள்ளி சென்ற தன் வீட்டு பாலகர்கள் உயிரற்ற சவமாய் வீடு திரும்பும் பொழுது அந்த பெற்றோர்களுக்கு யார் தான் எளிதில் சில வார்த்தைகளால் ஆறுதல் கூறி எளிதில் ஆசுவாசப்படுத்தி விட முடியும்?
ஒடுக்கப்படும் சமூகத்திற்கும், அப்பாவிகளுக்கும், அநாதைகளுக்கும், ஆதரவின்றி தவிப்போருக்கும், கருணை காட்டப்படாதோருக்கும், ஏழை எளியோருக்கும், தேவையுடையோருக்கும் நிச்சயம் எல்லோரையும் படைத்து பரிபாலிக்கும் இறைவனே பேருபகாரமும், பாதுகாவலனாகவும் இருக்கின்றான்.
"அரசன் அன்றே கொல்வான்; அல்லாஹ் நின்றும் கொல்வான், நிற்காமலும் கொல்வான்" என்பதே திண்ணம்.
இந்த புனித ரமழானே எம் அனைவரையும் நன்கு ஆசுவாசப் படுத்தட்டும்... ஆமீன்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது

