தர்க்க வாதி!
சமூக குதர்க்க வாதி!
ஓர் இறைக்கொள்கையை
தகர்க்கும் வியாதி!
இவர்கள்
இறை நேசிப்பாளருக்கும்
இறை மறுப்பாளருக்கும்
இடையே இருக்கும் மூடர்கள் !
இல்லாத ஆசிரியருக்கு சீடர்கள்!
அமைதிக்குச் சாமாதி கட்டுபவர்கள்!
அடக்கஸ்தலத்தின் மேல்
அபரீத அன்பு கொள்பவர்கள்!
அடங்காதவர்கள்!
சடங்கின் போது
மூர்ச்சை இழந்தாலும்!
அதையும்
நேர்ச்சை என
கட்(சி)சை கட்டுபவர்கள்!
உயிர் இழந்தவர்கள்
உயிருடன் இருப்பதாய் வாதிப்பவர்கள்!
உயிர் இழந்தவருக்காய்
உயிரை இழந்து சாதிப்பவர்கள்!
இவர்கள்
உயிர் ஜடங்கள்!
விளங்காத ஊமைப்படங்கள்!
மண்ணறைக்காய் இறை வழிபாடை
மண்ணுள் புதைத்தவர்கள் -நாளை
பாடையில்(சந்தூக்கு) போகப்போவது அந்த
மண்ணறை என்பதை மறந்த மடையர்கள்!
கல்லறைச் சிறையில்
சில்லறை அரசியல்
இவர்கள் மூலதனம்!
இவர்கள்
நல்லது விளங்காத
செவிட்டு இனம்!
CROWN