
நெஞ்சக் கதவைத் தட்டியபின்
காலைக் கழுவித் தூய்மையுடன் - மண்
கரையில் வந்து நின்றோமே.
கரையில் நின்ற பாத்திம்மா - தன்
கண்ணில் பட்ட நண்டொன்றை
அருகில் கண்டு பதறிப்போய் - ஓடி
அணைத்துக் கொண்டாள் உம்மாவை.
தண்ணீ ருக்குள் ஓடாமல் - போய்த்
தரையில் கண்ட பொந்துக்குள்
மண்ணே தனது வீடென்று - தான்
மறைந்த நண்டைக் கண்டோமே.

நரியொன் றுக்கது விருந்தாகும்
வண்டி கிளம்பிச் சென்றவுடன்–நரி
வந்து திரிந்தே இரைதேடும்.
“அந்தி வேளை யானவுடன் - அது
அமைதி யாக வந்தந்தப்
பொந்துக் குள்ளே வால்விட்டுத் - தன்
பொறுமை காக்கும் தந்திரமாய்.
“வானைப் பார்த்த சிறுநண்டோ – தன்
வாயால் கவ்விப் பிடித்துவிடும்
தேனை உண்ட மகிழ்வோடு - நரி
திடுமென வாலை வெளியாக்கும்.
“அச்சம் ஊட்டிய நண்டதனை - நரி
அடித்து நொறுக்கித் தின்றுவிடும்
இச்சிறு வாழ்வின் நிலையிதுதான்” - என
எடுத்துச் சொன்னார் வாப்பாவும்.
அதிரை அஹ்மது