கடற்கரை தெரு பள்ளிவாசல் புதிதாக கட்டி முடித்து வக்ஃப் செய்ததிலிருந்து தொடர்ந்து வந்த நோன்பு காலங்களில் பெண்களுக்களுக்கென்று ரமளான் இரவுத் தொழுகையை (தராவிஹ்) பள்ளி வாசலில் (மாடியில்)நடத்துவதற்கு நடந்த முயற்சி பல்வேறு காரணங்களால் காலம் தாழ்த்திக் கொண்டே சென்றது, இறைவன் உதவியால் இந்த வருடத்தில் இருந்து புதிதாக பெண்களுக்கும் இரவுத் தொழுகை ஜமாத் (தராவிஹ்) நடை பெற்று வருகின்றது.
கடற்கரைத் தெருவில் கடந்த ரமளான் காலங்களில் பெண்களுக்கென்று தனியாக இரவுத் தொழுகை (தராவிஹ்) பெண்கள் மதரசாவிலும் ஒரு சில வீடுகளிலும் நடந்து வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் கூடுதலாக முன்பு தராவிஹ் தொழுகை நடந்து வந்த பெண்கள் மதரஸாவிற்கென தற்போது புதிய கட்டிடம் கட்டிக் கொண்டு வருவதால் அந்த புதிய கட்டிடத்தில் கீற்றுக் கொட்டகை போட்டு கடற்கரைத் தெரு ஜூம்மா பள்ளி முன்னாள் இமாம் அவர்களால் தராவிஹ் தொழுகை நடத்தப்பட்டு வருகின்றது இது பள்ளிவாசல் மாடிப் படி ஏற முடியாத வயதான பெண்களுக்கு வசதியாக இருப்பதாகவும் அங்குள்ளவர்கள் கருதுகின்றனர்.
தகவல் : Sஹமீது



