அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
அன்பான அதிரை நிருபர் வாசகர்களே…கொஞ்சம் இதைப்படிங்க...
என்னடா தன்னம்பிக்கை பற்றிய எழுதி வந்த நான் கோபத்தை பற்றி எழுதுறேன் நினைக்காதீங்க, கோபத்தை அடக்கி வாழ்ந்தால் அதுவே எல்லாருடைய தன்நம்பிக்கைக்கும் அடிப்படையாக அமையும்.கோபம் கொண்டிருப்பது கொதிக்கும் இரும்பு உருளையை கையில் பிடித்து இருப்பதற்கு சமம்.. அது நம்மை அழித்துவிடும்.
கோபம் கொள்ளாமல் இருப்பவன் முட்டாள். ஆனால் அறிவுடையவன் அதை செய்யமாட்டான் என்ற பழமொழிகள் சொல்வதுபோல கோபம் கொடுமையானது.
ANGER IS ONLY ONE LETTER SHORT OF DANGER
கோபம் வருவது இயற்க்கைதான், பித்தப்பை இருக்கும்வரை கோபமும் குடி கொண்டு இருக்குமாம், (ஜாஹிர் காக்கா கன்ஃபாம் பிலீஸ்), ஆனால் அதை கண்ட்ரோல் பண்ணவும் முயற்சிக்கலாம்.
கோபம் வருவதுபோல் தெரிந்தால் “ அவுது பில்லாஹி மினஷ்சைத்தானிர் "ரஜீம்“ ஒதி கொள்ளும்போது பெரும்பாலும் கோபம் போய்விடும், ஆனால் சில பேருக்கு காது புடைத்து கொண்டு கோபம் குறையாமல் Maintain பண்ணும் அவங்களுக்காக இந்த ஆக்கம் (நான் கோபப்படுவது ரொம்ப குறைவு).
கோபம் என்னவெல்லாம் செய்யும் பாருங்கள்
கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரையும் உண்டு பண்ணும் மற்றும் மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும். கோபம் நாம் விரும்பதாக சம்பவத்தை நம்மை அறியாமல் செய்ய தூண்டிவிடும். பின்னர் அதற்காக வாழ்நாள் முழுவது வருந்தக்கூடிய நிலைக்கு தள்ளி விடும். கோபம் எத்தனை பேர்களின் வாழ்வை சின்னபின்னமாக்கி விட்டது என்பதை நாம் வாழ்வில் கண்டு இருப்போம் தொட்டா சிணுங்கி கோபம் எல்லாருக்கும் ரொம்ப தொந்தரவை தரும்.
கோபம் எதுக்கெல்லாம் கொள்ளலாம்
கோபத்தினால் பல கேடுதல்கள் இருப்பினும், இந்த கோபங்கள் நம்மை பாழ்படுத்தாமல் பண்படுத்தும் சமுதாய திருத்துவதற்கு கொள்ளும்- சமயோஜத கோபம்.
பிள்ளை திருத்துவதற்க்கு உதவும் செல்ல கோபம்---ஜஸ் போல கரைந்துவிடும் இக்கோபத்தால் ஹெல்த் ரிஸ்க் எதுவும் இல்லை.மனமில்லாலமல் மனைவி/கணவன் மேல் கொள்ளும் அனபு கோபம்- இதற்கு ஈசல் போல ஆயுள் கம்மி.
சரி எதை செய்தாலும் கோபம் குறையவில்லையா, இதை டிரை பண்ணுங்களேன்.
தொழுகையை சரிவர தொழுது வருவது கோபப்படுவதை மிகவும் குறைக்கும்.
ஒரு டம்ளர் தண்ணீர் குடிங்க,,,,சூடான தண்ணியை குடித்துவிடாதீங்க…. நிலமை தலைகிழா ஆகிடும் (தண்ணிய குடி,தண்ணிய குடி என்பது இதற்க்குதானோ)
ஒன்று முதல் பத்து வரை எண்ணுங்க ( கரெக்கட்டா).
கோபப்பட்டும் ஆள் இருக்கும் இடத்தில் இருந்து வெளியேறிவிட வேண்டும் (உதாரணத்துக்கு ரயில்வே ஸ்டேஷனுக்கு காற்று வாங்க போய்விடலாம்).கோபத்திற்கு காரணமாக இருந்த சம்பவம் எண்ணத்தில் இருந்து விடுபடாலாம் (எங்க தெருவில் ஒருவர் கோபம் வந்தால் 10 நாள் ஜமாத் சென்றுவிடுவார்,அதனாலயே அவர்கள் வீட்டில் அவரை உசுப்பேத்துவாங்க)..
கோபத்தின் போது முகம் விகாரமாகி, டார்வின் மனிதகுல தோற்றத்தை பற்றி (தவறாக) சொன்ன பொருள்போல் கலக்கலாக இருப்போம் இதை கண்ணாடியில் பார்த்து மகிழலாம் (கண்ணாடி பக்கத்தில் கருங்கல் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்)
தனியாக அமைதியாக இருக்கும் போது…நாம் கோபப்பட்ட சம்பவத்தை நினைத்து அதை எப்படி தவிர்த்து இருக்கலாம் என்று சிந்திக்கலாம்.
நீச்சல்,குளியல் செய்ய கோபம் குறையும் (தோப்பில் பம்பு செட்டு தண்ணியில் குளித்தால் கோபம் என்ன கோவலமே மறந்து போற அளவுக்கு மனம் மகிழ்ச்சியால் துள்ளும்).
கொஞ்சம் காய்கறி சேர்த்து கொள்ளவேண்டும். ( நாம் ஆட்களுக்கு கோபம் வருவதற்க்கு முதல் காரணமே இஞ்சி பூண்டு ஆனம் அதிகமாக சாப்பிடுவதுதான்).
நீங்க இதைப்படித்துவிட்டு கருத்து எழுதாமே போனாலும் நான் கோபப்படமாட்டேன் ;)
அலாவுதீன் காக்கா…..கோபத்தை பற்றி நம் மார்க்கம் என்ன சொல்கிறது? என்பதை இங்கு நீங்கள் பின்னூட்டமாகவோ அல்லது நேரம் கிடைத்தால் தனி ஆக்கமாகவோ இட்டால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். (நீங்கள் கோப்படமாட்டீங் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும்).
அபுஇபுறாஹிம் காக்கா.. தேர்தல் நேரம் என்பதால் கோபப்படாத வாலிபர் இயக்கம் என்று புதிய ஒரு இயக்கத்தை எல்லாம் உருவாக்கி தேர்தல்ல போட்டியிட வச்சு ஒட்டுகேட்க வைச்சுடாதிங்க. அப்புறம் கோபப்படாத நமக்கு கோபம்வந்துடும்.
WHATEVER IS BEGUN IN ANGER ENDS IN SHAME
கோவப்படாத உங்கள்
--முகமது யாசிர்


