Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label திரையில் சிறை. Show all posts
Showing posts with label திரையில் சிறை. Show all posts

மற்றும் 5... 20

ZAKIR HUSSAIN | December 01, 2014 | , ,

திரையில் சிறை


நவீன இளைஞர்களின் இப்போதைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் எந்த கட்டுப்பாடுகளிலும் அடங்காதது. இருப்பினும் எதையும் பழமை என்று ஒதுக்கிவிட்டாலும் கர்ம விதி என்பது பிரபஞ்சம் அழியும் வரை தன்னை இந்த நவீன இளைஞர்களுக்காகவோ அல்லது இளைஞிகளுக்காகவோ மாற்றிக் கொள்ளாது. அது அதன் பாதையில் சரியாக பயணம் செய்யும்.

எப்போதோ ஒருவன் தொட்ட நெருப்பு சுட்டதால்தான் இப்போதைக்கும் நாம் நெருப்பின் பக்கம் நெருங்காமல் இருக்க கற்றிருக்கிறோம். ஒவ்வொரு முறையும் சுட்டுதான் 'பட' வேண்டும் என்று இருந்தால் நிறைய பேர் இன்னேரம் கரியாய் போயிருப்போம்.

இரண்டு பாராக்ராஃப் இப்படியெல்லாம் எழுதிதான் உங்களை பயமுறுத்த வேண்டும் என்ற அறிவு தாகத்தில் யாரும் இப்போது இல்லை. எதையும் ஸ்க்ரோல் செய்து , மவுசை நகர்த்தி தெரிந்து கொள்ளும் சமூகம் இப்போது இருப்பது என்னவோ ஒன்று ஸ்மார்ட் போன் திரையில் அல்லது டெலிவிசன் திரையில். இந்த இரண்டு எல் சி டி & எல் இ டியும் வருங்கால சந்ததிக்கு அடுத்த அத்யாயத்தை  காண்பிக்குமா என்றால் ஒன்று "எஸ்' மற்றொன்று ' "நோ' என்பதே என் நிலைப்பாடு.

சமீபத்தில் ஒரு தகப்பனார் தன் மகன் சொல் கேட்காமல் தானாகவே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதை கேட்டு நொந்துபோய் என்னிடம் சொன்னது ' அது ஒன்னுமில்லே...கையில் இருக்கும் ஸ்மார்ட் ஃபோன் காண்பிப்பது போலவே உலகம் இருக்கும் என்று நம்பி அவன் அப்படி செய்து விட்டான்'…தகப்பனின் தியாகம் தெரியாமல் நடந்து கொள்ளும் பிள்ளைகளையும் தகப்பன் கள் திட்டுவதில்லை.

இந்த திரைகள் மனிதர்கள் மாதிரிதான். ஒழுங்காக நடத்தினால் நம் சொல் கேட்கலாம்...இல்லாவிட்டால் "போடா அல்லது போடி  வெண்ணெ...' என்று வேறு ஒரு உலகத்தில் கொண்டு போய் நிறுத்திவிடும்.

இந்த திரைகள் வீட்டில் உள்ள பெண்களையும் சரியாக வழி நடத்துமா என்பதை ஒரு மானிட்டர் மாதிரி குடும்பத்தின் கேப்டன் தான் கவனிக்க வேண்டும். தவறினால் ...கால ஓட்டத்தில் நீங்களே அவர்களுக்கு ஒரு 'நசல்". அல்லது ப்ராக்டிக்கலை விட்டு தாண்டிய ஒரு தொல்பொருள் காலத்து ஐட்டம் ஆகி விடுவீர்கள். [ இதை நீங்கள் கேட்க விரும்பவில்லை என்றால் கொஞ்சம் 'வழுவா' சம்பாதிக்கனும் ] 

இந்த திரைகளின் கர்ம் விதி என்ன?...சின்ன வயதில் தொடர்ந்து கேம் / ஃபேஸ் புக் / வாட்ஸப் எல்லாம் தலைய குனிந்தே இயக்கி கொண்டிருப்பதால் பின் கழுத்தில் அதிக அழுத்தம் எலும்பு வரை பாதிக்கலாம்.

கண்….சொல்ல வேண்டியதில்லை. நேரம் கடந்து இரவில் தூங்குவதில் உள்ள சுரப்பிகளின் ஸ்டரைக்..மற்றும் ஃபாஸ்ட் புட் எல்லாம் உடல் பருமனை தான் பரிசாக தரும். முதலில் உடற்பயிற்சி செய்யலாம் என்று நினைத்து அதை ஆரம்பிக்க பல வருடம் கடந்து விடுவதால்..பல பேருக்கு "பன்றி வாழ்க்கை பழகிடுச்சு" கதைதான்.

இந்த திரைகளை சரியாக பயன்படுத்துவது என்பதில்தான் கவனம் இருக்க வேண்டும். சிலர் சொல்வது போல் இந்த திரைகளை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள் போன்ற வாதங்கள் என்னைப்பொருத்தவரை ப்ராக்டிக்கலாக தெரியவில்லை. இது ஒரு ஜெனரேசனுக்கும் , மற்றொரு ஜெனரேசனுக்கும் ஏற்பட்டிருக்கும் 'அறிவு மாற்றம்'.

3 பேர் ஒன்றாக நின்று போட்டோ எடுக்காதீர்கள் / பெரியவர்கள் சொல்லை அப்படியே கேட்டு நட போன்ற வசனங்களுக்கு இப்போது என்ன சிந்தனை மாற்றமோ அதே சிந்தனை மாற்றம்தான் இப்போது இருக்கும் திரையை மொத்தமாக ஒதுக்கி வை எனும் அறிவுரை.

புதிய சமுதாயம் மிக முக்கியமாக எப்படி உருப்படலாம் என்று தீவிரமாக சிந்திக்கும் கால கட்டத்தின் உச்சிக்கு இப்போது போட்டிகள் உருவாகி விட்டது. போட்டிகளில் தயாராக இருப்பதே மேல்...அதை விட்டு இன்னும் குறைகளை சொல்லிக்கொண்டிருந்தால் திரைகளில் செலவழிக்கும் நேரம் உங்களை விழுங்கி விடும்.

நான் முன்பு எழுதியதுதான் ' பொழுது உங்களைப்போக்கிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்'.

ஏன் முரண்பாடு?

நமது ஊர் வலைததளங்களை முன்பு எனக்கு தெரிந்த ஹிந்து நண்பரிடம் காண்பித்து ஓய்வாக இருக்கும் போது படியுங்கள் என்று சொல்லி வைத்திருந்தேன்.


அவரும் அடிக்கடி நம் ஊர் வலைத்தளங்களை படித்து விட்டு பொதுவான விசயங்கள் இருந்தால் சொல்வார்.

நானும் இடை இடையே இஸ்லாத்தை பற்றியும் , அதில் சொல்லப்பட்ட சகோதரத்துவம் , ஞாயங்கள், அல்-குரான் / ஹதீஸ், நபிகள் பற்றியெல்லாம் எனக்கு தெரிந்த அளவு சொல்லியிருந்தேன்.
சமீபத்தில் நடந்த விவாத வீடியோக்களை அவர் பார்த்து விட்டு ஒரு கேள்வி கேட்டார்.

“எங்கள் ஹிந்து மதம் உங்களைப்போல் ஒரே குரான் / ஒரே நபி என்ற விசயங்களுக்குள் இல்லாமல் பல பிரிவுகளை கொண்டது...ஆனால் உங்கள் ஊரில் நடந்த விவாதத்தை பார்த்த போது ...ஒரே விசயங்களை நம்பும் இவர்களுக்குள் ஏன் இத்தனை பிரிவுகள்?..’

எனக்கு பதில் சொல்லத்தெரியவில்லை...தெரிந்தவர்கள் சொல்லலாம்.

அதிராம்பட்டினம்.... வலைத்தளங்கள்

நான் சொல்லப்போகும் விசயத்தை பாசிட்டிவ் ஆக எடுத்துக் கொண்டால் பொதுவில் நன்மைதான்.

வலைத்தளங்களை சிலர் ஆர்வமாக ஆரம்பித்து விடுகிறார்கள். பிறகு பதிவுகள் போடுவது என்பது மனை போட்ட வீடு கட்டாமல் பல காலம் கிடப்பதுபோல் அது கவனிக்கப் படாமலேயே இருக்கிறது. சிலர் பதிந்த விசயங்கள் தலைப்பு கூட மாறாமல் அப்படியே இருக்கிறது. சிலர் சொன்ன வாழ்த்துக்களும் , பிரச்சினைகளும் இப்போதைக்கு அது சம்பந்தப்பட்டவர்களே மறந்து போயிருக்களாம்.

இன்னும் தளங்களில் எழுதும் விசயங்கள் ஒரு குறிப்பிட்ட ரேஞ்சில் மட்டும் எழுதுகிறார்கள் .  (B)பாய்கள் கட்டும் கைலியும் ஆக்கமும் ஒரே மாதிரித்தான் இருக்கு என்று சொன்னாலும் ஆச்சர்யம் இல்லை.

பல விசயங்களை எடுத்து வெளியிடும் காலத்துகுள் இப்போது நாம் இருக்கிறோம். இன்னும் ஒரே மாதிரியான விசயங்களை தொடர்ந்து எழுதும் போக்கிலிருந்து மாற்றிக்கொண்டால் இன்னும் கொஞ்சம் இன்ட்ர்ஸ்டிங் ஆக வலைத்தளங்கள் பரிணமிக்கும் [ அது என்ன பரிணமிக்கும் என்பது எனக்கு தெரியவில்லை...சின்ன புள்ளைலெ படிச்ச வார்த்தை ]
மெட்டா பிசிக்ஸ், பேய்கள் , செய்வினை , ராக்கெட் ,செவ்வாய் கிரகம் , நபிகள் பெருமானாரின் லீடர்ஷிப் க்வாலிட்டி, நாட்டில் அழிக்கப்பட்டிருக்கும் காட்டின் மொத்த தாக்கம்,  நதி இணைப்பில் நாட்டின் பொருளாதார மாற்றம், என்றைக்கோ ஏமாந்து போன விசயம், முதன் முதலில் வாங்கிய சைக்கிள், உருப்படியான தலைவர்களின் வாழ்க்கைமுறை, எதிர்பாராமல் கிடைத்த சந்தோசம் ...எங்கோ ஒரு சந்தோச தினத்தில் கேட்ட குரலின் மறு ஒலிபரப்பு, இளமையில் அதிசயமாய் தெரிந்தவர்களின் இன்றைய முதுமை...இப்படி எழுத எவ்வளவோ விசயம் இருந்தும் ஏன் இன்னும் நாம் ஜல்லியடிக்கிறோம் என்று யோசித்தது உண்டா?

ZAKIR HUSSAIN


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு