Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ரமளான் காணொளி: தவ்ஹீத்வாதிகளும் இபாதத்துகளும் 2

அதிரைநிருபர் | July 31, 2012 | , ,

lஅல்லாஹ்வின் திருப்பெயரால்....

அல்லாஹ்வின் பேருதவியால் இந்த வருடம் ரமளான் மிகச் சிறப்பாக அனைவருக்கும் அமைந்திருக்கலாம் இன்ஷா அல்லாஹ்...

இன்றைய மார்க்க சொற்பொழிவு:

தலைப்பு: தவ்ஹீத்வாதிகளும் இபாதத்துகளும்

உரை: மவ்லவி இஸ்மாயில் ஸலஃபி அவர்கள்


அதிரைநிருபர் குழு

ஸ்டாப் N ஷாப் - அதிரை தொழில் முனைவோர் தொடர்கிறது... 7

அதிரைநிருபர் பதிப்பகம் | July 30, 2012 | , , , , ,



அதிரை சகோதரர்களின் புதிய தொழில் முனைவோர் என்ற வரிசையில் அதிரைநிருபரில் தொடர் பதிவுகளாக பதிந்து வருகிறோம், இவ்வாறான பதிவுகள் சுயதொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவதற்கே அன்றி தனிப்பட்ட விளம்பரமாக அல்ல.

இன்றைய இளைய சமுதாயத்தினரை நாம் நிச்சயம் வரவேற்பதிலும் ஊக்கப்படுத்துவதிலும் முன் நிற்க வேண்டும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம்.


சென்னையில் ஸ்டாப் N ஷாப் என்ற ஜெனரல் ஸ்டோர்ஸ் மண்ணடி போஸ்டாபிஸ் தெருவில் அதிரையைச் சார்ந்த சகோதரர் U.அபுபக்கர் (முனா கீனா) அவர்களால் தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.


இது போன்ற உள்ளூர்க்காரர்களின் சுயதொழில் முயற்சியினை ஊக்கப்படுத்த வேண்டும்.

ஸ்டாப் N ஷாப் - சிறப்பு அம்சங்கள்:

  • இறக்குமதி செய்யப்பட்ட அரேபிய பேரித்தம் பழம்
  • அனைத்து வகையான பிஸ்கட்
  • உயர்தர சாக்லேட்கள் வகைகள்
  • மின்சாதன பொருட்கள் 
  • இறக்குமதி செய்யப்பட்ட காஸ்மெடிக்ஸ் 
  • டேங்க் பவுடர், ஓட்ஸ் வகைகள்.
  • பேம்பர்ஸ்
  • அனைத்துவிதமான தரமான பரிசுப்பொருட்கள்.

சில்லரையாகவும் மொத்தமாகவும் கிடைக்கும், அலைபேசி அழைப்பின் வழியே அனைத்தையும் உங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து சேர்க்கும் சாமர்த்தியம்.

ரமளானில் சிறப்பம்சமாக "RAMADAN SPECIAL GIFT PACK" இதில் 10 வகையான இறக்குமதி செய்ப்பட்ட தரமான பொருட்கள் உள்ளடக்கம்.



தமிழகம் முழுவதும் மிகச் சிறப்பாக டோர் டெலிவெரி செய்து வருவதால் வெளிநாடு வாழ் சகோதரர்கள் எளிதில் தொடர்பு கொண்டு பயனடையலாம்.

மேலும் விபரங்களுக்கு கீழ் உள்ள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

U. Aboobacker,(mk)
Stop N Shop,
New No 6,Old No.52 Post Office Street,
Mannady,
Chennai : 600 001
Tel: 9840549700

சுய தொழில் செய்து தாய்நாட்டில் சம்பாதிக்க முனையும் இவர்களைப் போன்ற சகோதரர்களை ஊக்கப்படுத்துவதில் முன்னிருப்போம். இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் குழு

சிரியாவில் நடப்பது என்ன? - Part 2 ::: வெற்றியை நோக்கி 9

அதிரைநிருபர் | July 30, 2012 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்… 

கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி நம் அதிரைநிருபர் தளத்தில் சிரியாவில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தோம். இது தமிழக அளவில் நம் சகோதரர்களிடையே நல்ல தாக்கதை ஏற்படுத்தி ஜும்மா மேடைகளிலும் சிரியாவில் நடைந்து வரும் நிகழ்வு பற்றி பேசப்பட்டு, கேட்டவர்கள் அனைவரும் து ஆ செய்தார்கள். 

நம்முடைய உயிரிலும் மேலான அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்து சொன்ன பிரதேசங்களில் சிரியாவும் ஒன்று. அதனால் தான் இஸ்லாமிய வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்களிப்பை செய்த பிரதேசங்களில் சிரியாவும் ஒன்று என்பது அழிக்கப்படாத வரலாறு. 

கடந்த 50 வருடங்களுக்கு மேலாக சிரியாவை ஆண்டு வரும் அலாவி என்ற வழிகேட்டு கூட்டம், குர்ஆன் சுன்னாவை தன் வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்து வரும் அந்நாட்டு மக்களை அடக்கியாண்டு வருகிறார்கள். ஆட்சியாளர்களின் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் உலமாக்களை கொலை செய்தும் வந்துள்ளார்கள், கடந்த வருடம் அரபுலகில் ஏற்பட்ட புரட்சியின் தொடர்ச்சியால் சிரியா மக்கள் அமைதி வழியில் பேராட்டத்தில் குதித்தனர், போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சுட்டுத்தள்ளி தன்னுடைய சர்வாதிகாரத்தை நிலை நிறுத்தி வருகிறார்கள். இந்த கொடுமையை சகித்துக்கொள்ளவியலாத, அந்நாட்டு மக்களும், இரானுவத்திலிருந்து விலகிய ஆயிரக்கணக்கான குர்ஆன் சுன்னா பேணும் சகோதரர்கள் ஒன்றிணைந்து ஆயுதம் எடுத்து போராடி வருகிறார்கள். 

அன்மையில் துருக்கி எல்லைபுறத்தில் உள்ள சிரியா அகதிகள் முகாமுக்கு சென்று வந்த சேக் முஹம்மது அல் ஆரிபி அவர்கள் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றும் இந்த உரையின் ஆங்கில பொழிப்பெயர்புடன் உள்ள காணொளியை காணுங்கள். இந்த உலமாவின் கேள்விகள் நம்முடைய மனதை நிச்சயம் உறுத்தும்.

   

சிரியா ஆட்சியாளன் ஷியாக்களிடமும், ஹிஜ்புல்லாவிடமும், ஈரானிடமும், ரஷியாவிடமும், சீனாவிடமும் உதவி கேட்கிறான். சிரியா மக்கள் உதவி கேட்பது அல்லாஹ்விடம் மட்டுமே. 

வழக்கம்போல் அரபுநாடுகள் வாயடைத்து தங்களுடைய ஈமானை உலக முஸ்லீம்களுக்கு அப்பட்டமாக காட்டிவருகிறது என்பது வேதனையே. புனித ரமளான் மாதத்திலும் சிரியாவில் அஹ்லுல் சுன்னத்துவல் ஜமாத்து மக்களை கொன்று குவித்து வருகிறான் பஷார் அல் அசத். தற்போது தாக்குதல் அதிகம் நடைபெரும் இடங்கள் டமாஸ்கஸ் புற நகரங்கள், வர்த்தக நகரமான அலெப்பே,  அஹ்லுல் சுன்னத்துவல் ஜமாத்  மக்கள் அதிகம் வசிக்கும் ஹொம்ஸ் போன்ற பகுதிகளில் குண்டு மழையாலும், பீரேங்கி தாக்குதல்களினாலும் மக்கள் கொல்லப்படுகிறார்கள்.

சென்ற மாதம் டமாஸ்கஸ் அருகில் உள்ள ஜமல்கா என்ற இடத்தில் அஹ்லுஸ்ஸுன்னா ஷஹீத் ஒருவரின் ஜனாஸாவை அடக்க செய்ய எடுத்துச்சொல்லப்பட்ட போது அசர் அல் பசர் இராணுவம் வைத்த குண்டுவெடிப்பில் 100க்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அந்த காணொளியை இதோ. இளகிய மனம் படைத்தவர்கள் இதை காணவேண்டாம்.


இந்த கொடுமையை வாய் திறந்து கேட்க இவ்வுலகில் எந்த ஒரு நாடுமில்லை என்றாலும், அல்லாஹ்வின் துனையுடன் அந்நாட்டு அஹ்லுஸ்ஸுன்னா மக்கள் ஆயுதமேந்தி போராடுகிறார்கள். இராணுவத்தில் உள்ள அஹ்லுஸ்ஸுன்னா கொள்கையுடம் வீரார்கள் FREE SYRIYAN ARMY என்ற பெயரில் சிரியா பஸர் அசாத் இராணுவத்தை எதிர்த்து போரிட்டு பல இடங்களை கைப்பற்றிய வண்ணம் உள்ளார்கள். அன்மைகால நிகழ்வுகளாக 3 முக்கிய எல்லை பகுதியை  FREE SYRIAN ARMY பசர் இரணுவத்திடமிருந்து கைப்பற்றியுள்ளார்கள், பசர் அசதுக்கு நெருக்கமான 4 முக்கிய பிரமுகர்களை கொன்றதன் மூலம் பசர் அசத்தின் கோபம் உச்சக்கட்டத்தை எட்டி கடுமையான தாக்குதலை இப்புனித ரமளானில் அஹ்லுஸ்ஸுன்னா மக்களின் மீது தொடுத்து கொன்று குவித்து வருகிறான், இது வரை கடந்த 1 வருடத்தில் மட்டும் 15,000 அஹ்லுஸ்ஸுன்னா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

பசர் அசாதுக்கு சவாலாக இருக்கும்  FREE SYRIAN ARMYயின் செயல்பாடுகள் தாக்குதல் பற்றிய செய்தி தொகுப்புகளை பின் வரும் காணொளிகளில் பார்க்கலாம்.
guardian 
 

Aljazeera
 
 Channel 4 
 

சிரியாவில் நடக்கும் இந்த நிகழ்வுகளில் நமக்கு நிறைய படிப்பினைகள் உள்ளது. 

அல்லாஹ்வை ஏகனாக ஏற்று முஹம்மது (ஸல்) அவர்களை நபியாக ஏற்ற ஒரே காரணத்துக்காக, அக்கிரமக்கார ஆட்சியாளர்களால் சிரியா மக்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த கஷ்டமான காலகட்டத்திலும் அல்லாஹு அக்பர் என்று அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டிருகிறார்கள் இந்த மக்கள். 

அல்லாஹ் நமக்கு நல்ல சூழ்நிலைகளை தந்தும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் தொழுகை இபாதத்துக்களில் எவ்வளவு பொடுபோக்காக இருக்கிறோம் என்பதை சிறிதேனும் சீர்தூக்கி பார்க்க வேண்டும். எவ்வளாவுதான் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டாலும் அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் வணங்கமாட்டேன் என்ற உறுதியில் ஷஹாபாக்களின் வரலாறுகளை படித்திருப்போம் கேட்டிருப்போம். ஆனால், இன்று சிரியாவில் குர்ஆன் சுன்னாவை அடிப்படை நெறியாக கொண்டுள்ள சிரியா அஹ்லுல் சுன்னத்துவல் ஜமாத்து மக்களிடமிருந்து நமக்கு நிறைய படிப்பினைகள் உள்ளது. 

மிகப்பெரிய மார்க்க மேதைகளை உருவாக்கிய இந்த சிரியா நாட்டில் முஸ்லீம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் நாம் செய்ய வேண்டிய பரிகாரம் அவர்களுக்காக துஆ செய்வது தான் இத்தருணத்தில் கட்டாயம் தேவை. 

யா அல்லாஹ்! சிரியா முஸ்லீம் மக்களுக்கு பொறுமையை வழங்குவாயாக… 

யா அல்லாஹ்! பெற்ற தாய் தந்தையர்கள், பிள்ளைகள் இழந்து வாடும் சிரியா மக்களுக்கு மன நிம்மதியை அளித்தருள்வாயாக.. 

யா அல்லாஹ்! அவர்களுக்கு நல்லருள் புரிவாயாக.. 

யா அல்லாஹ்! இந்த அசாத் பஷாரை தண்டிப்பாயாக…! உன்னுடைய சாபத்தை அவன்மீது உண்டாக்குவாயாக… 

யா அல்லாஹ்! சிரியாவில் குர்ஆன் சுன்னாவை நிலைநாட்ட அஹ்லுல் சுன்னத்துவல் ஜமாத்து உம்மத்திற்கு வெற்றியை தந்தருள்வாயாக... 

 புனித ரமளான் மாதத்தில் ஒவ்வொரு முஸ்லீமும் செய்ய வேண்டியது:

நம் ஒவ்வொருவரின் பிரார்த்தனையிலும் சிரியாவில் வாழும் முஸ்லீம்கள் அனைவரின் பாதுகாப்பிற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் கையேந்துவோம், இதுவே நாம் அவர்களுக்கு செய்யும் உதவி…. அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு உங்கள் அனைவரையும் உருக்கத்துடன் கேட்டுக்கொள்கிறோம். 

 தொகுப்பு: அதிரைநிருபர் குழு

ரமளான் காணொளி: அந்த நாள் வரும் முன் 0

அதிரைநிருபர் | July 29, 2012 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அல்லாஹ்வின் பேருதவியால் இந்த வருடம் ரமளான் மிகச் சிறப்பாக அனைவருக்கும் அமைந்திருக்கலாம் இன்ஷா அல்லாஹ்...

மார்க்க சொற்பொழிவு:

தலைப்பு: அந்த நாள் வரும் முன்

உரை: கோவை S அய்யூப் அவர்கள்



அதிரைநிருபர்

வெலக்காத்தெரு (பெண்கள் கடைத்தெரு) - இன்று ஒரு தகவல் 40

அதிரைநிருபர் பதிப்பகம் | July 29, 2012 | , , ,


இப்படி படிக்கிற யாருக்குமே இதன் அர்த்தம் நேரடியாக தெரியுமா என்பது கேள்வியானாலும், ஆனால் அந்த இடம் மட்டும் நன்றாகத் தெரியும். எனக்கும் தெளிவில்லைதான், ஒரு சமயம் “விலைகாரத் தெரு”வாக இருக்குமா அல்லது வெளியாட்கள் அதிகம் வந்து கடைவிரித்து வியாபரம் தெரு ஓரம் செய்வதனால் ”வெளிக்காரர்” மருவி ”வெலக்காத்தெரு”வானதோ ? இதுக்கு போய் ஏன் இப்படியான ராக்கெட் சயின்ஸ் ரேன்ஞ்சுகு ஆராய்சியெல்லாம் என்ற கேட்பது காதில் விழுகிறது. சரி சரி இத்தோடு இந்த ஆய்வை நிறுத்திடுவோம். என்னோட இந்த கருத்துக்கு மேலே நீங்களும் வரக்கூடாது நானும் வரமாட்டேன், இரத்தம் வர்ராப்லயா இருக்கு ?!!!

இங்கே எங்க கடற்கரைத் தெருவில் உள்ள “வெலக்காத்தெரு”வை சொல்லியே ஆகனும் ஏனென்றால், மீன் தோன்றி இறால் வலையில் சிக்காத காலத்திற்கு முன் தோன்றியது (!!!) கடற்கரைத் தெரு பெண்கள் வெலக்காத்தெரு. ஒரு ஊரின் திறவு வாயில் அதன் கடற்கரைப் பகுதியைத்தான் பெரும்பாலும் குறிக்கும். பட்டுக்கோட்டைக்கு எப்படி என்று யாரோ முனுமுனுப்பது ஏதோ கொஞ்சம் ஒவராத்தான் போய்ட்டோமோ என்ற உணர்வை தருகிறது. அதன்படி பல தெருக்களுக்கு தாய் தெருவான கடற்கரைத் தெருவின் பெண்கள் மார்க்கெட்டை அறியாத நடுத்தர வயதினர் குறைவே. அந்த அளவிற்கு வசதி வாய்ப்புகளுக்காவும், புளிய மரத்தை வெறுத்தும், கடற்கரைத் தெருவின் உப்பு வீட்டை அரித்து அப்புறபடுத்தி விடும் என்று பயந்தும் ஊரின் மற்ற பகுதிகளுக்கு புலம்பெயர்ந்து சென்றவர்களும் இந்த லேடீஸ் மார்க்கெட்டை மறக்காமல் ஆட்டோபிடித்து வந்தாவது ஒரு கெளக்கமீனையோ, உயிர் கெண்டை மீனையோ வாங்கி செல்வது இன்றும் கண்கொள்ளா காட்சி!


எனக்கு தெரிந்தவரை தமிழ்நாடு அளவில், அட ! இந்திய அளவில் ஏன் உலக அளவில் கூட பார்த்தோம்ண்டா(ங்க) பெண்களுக்காக இயங்கும் ஒரு மீன் மார்க்கெட் கடற்கரைத் தெரு பெண்கள் வெலக்காதெருதான் (வேற எங்கேயும் இருந்தாலும் இதான் ரோல் மாடலாக இருக்ககூடும் !!! நம்பும்படியாக இருக்கா !). இதை கின்னஸ்காரனுங்ககிட்ட கொஞ்சம் அமெரிக்கவுல இருக்கிற சகோ. கிரவுன் எடுத்து சொன்னா நல்லது அவனுங்க தானே கண்ணுல ஒத்திக்கொள்வதையும் / கண்றாவியையும் போடுறானுங்க.

எனக்கு தெரிந்தவரை வெலக்காத்தெரு மார்க்கெட்டின் நீண்ட கால கதாநாயகி செல்லம்மா ஆச்சிதான். அந்த ஆச்சி குட்டானை (பனை ஓலையில் செய்தது) தலைகீழா கவுத்தி அதில் சோளக்கதிறு, நிலக்கடலை, வெள்ளரிப்பிஞ்சு, பயறு, நடுவிலே மாங்கய் தூண்டு, பக்கத்தில் அவிச்ச சக்கரவள்ளிகிழங்கு, அட போங்க… ஒரு பெரிய சூப்பர் மார்கெட்டின் செல்ஃப்லேயே இவ்வளவு சின்ன இடத்தில் இத்தனை நேர்த்தியாக அடுக்கி வைத்திருக்க முடியாது, அந்த அளவிற்கு அடுக்கி வைத்து இருக்கும். ஏதோ ஒரு பக்கத்து கிராமத்தில் இருந்து பொடி நடையாக வரும் அந்த குமரி(க்)கிழவி, சில்லறையாக குடுத்தால் சிரித்து கொண்டே பொருள் கொடுக்கும் செல்லம்மா. பெரிய பணத்தை கொடுத்தா “டேன்ஞ்ர் மூஞ்சு” வச்சிக்கிட்டு ஏதோ எதிரியை பார்ப்பதுபோல் பார்க்கும், பல வருடங்கள் தன் ஜீவிதத்தை அந்த மார்கெட்டிலேயே ஓட்டிக் கழித்தது அந்த இளம்கிழவி !


அடுத்த எனக்கு தெரிந்த மிகப்பிரபலமான காய்கறி வியாபாரி. போஸ்ட் ஆபீஸ் சல்மா ஹோட்டல் (மர்ஹும் சாகுல்ஹமீது) அவரின் தாயார், மிக கஷ்டப்பட்டு காய்காறி வியாபாரம் செய்து தன் குழந்தைகளை காப்பாற்றினார்கள், அனைத்து காய்கறிகளும் பிரிட்ஜ் இல்லாமலேயே ஃபிரஷ்-ஷாக இருக்கும் அவர்களின் கடையில்.

அப்புறம் கொடுவா மீன் விற்க்கும் வியாபாரிகள், கில்லட் மெசின் கண்டுபிடித்த ஜெர்மன் ஆசாமிகள் நம்ம ஊரின் கொடுவாமீன் பிஸ்க்கை (பீஸ்) பார்த்தா அவர்களின் காப்புரிமைக்கு வேட்டு வைத்து விடுவோமோ என்று தலைதெரிக்க ஓடிவிடுவார்கள். அந்த அளவிற்க்கு முடியைவிட சிறிது அகலமாக பீஸை வெட்டுவதில் கில்லா(ட்)ட்டிகள் நம்ம ஆட்கள். சரிங்க! உங்களிடம் ஒரே ஒரு கேள்வி (எனக்கும் தெரியாமாத்தான் கேட்கிறேன்)  அது ஏன் மீன் வெட்டியதும் அதன் மீனின் இரத்ததை தடவுவதன் மர்ம்ம் என்னங்க.

அப்புறம் மண் புரட்டி இறால் விற்கும் வியாபாரிகள், தரகர் தெரு ஜெய்லானி கடை, டெம்பரவரியாக ஐஸ் மோர் விற்கும் ஸ்கூல் பசங்க இப்படியாக பெண்கள் தலைகள் மட்டுமே தெரிய களைக்கட்டி நிற்கும் கடற்கரைத் தெரு வெலக்காத் தெரு. முன்பெல்லாம் ஆண்கள் அங்கே நுழைந்து விட்டால், அந்த செய்தி புளிய மரத்தடியில் குச்சி ஐஸ் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் சமுகக்காவலர்களுக்கு எட்டியதும் உள்ளே நுழைந்தவருக்கு சில சமயம் அவருக்கு அபராதம் அல்லது தர்ம அடி கொடுப்பார்கள். அந்த காலமெல்லாம் ஐஸ் போல கரைந்து விட்ட பிரம்மை மனத்திரையில் ஓடுகிறது. பெண்களின் நெகோஷியஷன் திறமைகளை அங்கே காணலாம், ஆனால் இப்போது அப்படி இல்ல பல்லு உள்ளவன் பக்கோடா திண்கிறான் என்பதுபோல் பணம் உள்ளவன்(ர்) பெரியமீன் சாப்பிடுறாங்க, பணம் இல்லாதவன்(ர்) ”பொடிபட்டு” வாங்கி வந்து அவியல் வைச்சு தான் வாழ்வை வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இரண்டு பேரின் வயிறும் நிரம்பித்தான் போகுது.

சரிங்க ! ஒரு சின்ன மேட்டரை எவ்வளவு(தான்) சவ்வு போல இழுத்தாலும் இதற்கு மேல வெலக்காத்தெருவப் பத்தி எழுத முடியல. என்னுடைய சீனியர்கள் (கவிக்காக்கா, சாவன்னா காக்கா, ஜாஹிர் காக்கா இடிசி.....) இதனைக் கொஞ்சம் சிரியஸாக எடுத்துகொண்டு பின்னூட்டத்தில் போட்டா அது செல்லம்மாவுக்கு நாம் கொடுக்கும் சில்லரை காசுகளின் சந்தோஷம் முகத்தில் காணலாம் உத்திரவாதம்!

ச்ச்சும்மா டைம்பாஸூக்காக… (எல்லோரும் சீரியஸா எழுதுறாங்களே அதனாலதானுங்க இப்புடி…)

முகமதுயாசிர்
நிழற்படம் உதவி : S.ஹமீத்

ரமளான் காணொளி: மனித நேயம் - ஓர் இஸ்லாமிய பார்வை 1

அதிரைநிருபர் | July 28, 2012 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அல்லாஹ்வின் பேருதவியால் இந்த வருடம் ரமளான் மிகச் சிறப்பாக அனைவருக்கும் அமைந்திருக்கலாம் இன்ஷா அல்லாஹ்...

மார்க்க சொற்பொழிவு:

தலைப்பு: மனித நேயம் - ஓர் இஸ்லாமிய பார்வை

உரை: அப்துல் ஹமீத் ஷரயி அவர்கள்


அதிரைநிருபர் குழு

ரமளான் பரிசு ! [அமெரிக்காவில் புதிய பள்ளிவாசல்கள்] 9

அதிரைநிருபர் பதிப்பகம் | July 28, 2012 | , , ,

அல்ஹம்துலில்லாஹ் !

நாங்கள் வசிக்கும் கலிபோர்னியா மாகாணம் vallejo எனும் ஊரில் கணிசமான முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர் .

குறிப்பாக அதிரையை சேர்ந்தவர்களும் அதிகளவில் வசிக்கின்றனர். அரேபியர், பாகிஸ்தானியர், மற்றும் இந்திய முஸ்லிம்கள் என பல தரப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். 

இங்கு ஒரு பள்ளிவாசல் இருந்து, அது சிறியதாக இருந்ததாலும்,முஸ்லிம் சனத்தொகை கூடுவதாலும் அதிக மக்கள் தொழுவதற்கு சிரமமாக இருந்தது. அச்சூழ்நிலையில் புதிதாக பள்ளி வாசல் கட்டுவதாக இருந்தால் இரண்டு / மூன்று மில்லியன் டாலர் தேவைப்படும். இதற்கிடையே, நம்மவர்கள் பல தரப்பட்ட முயற்சியில் ஈடுபட்டுவந்தார்கள்.

இந்த சூழ்நிலையில் பெரிய சர்ச் புதிய கட்டிடமாக கட்டிய நிலையைல் சில மாதங்களிலேயே மக்களின் வருகையின்மையால் நிர்வாகம் அந்த தேவாலத்தை மூடி விட்டார்கள். தேவாலயத்தை கட்ட அதன் நிர்வாகம் வங்கியில் கடன் வங்கியிருந்ததால் அதை செலுத்தாமல் போகவே.. வங்கி அந்த கட்டிடத்தை கையாக படுத்தி கொண்டது.

இதையறிந்த vallejo இஸ்லாமிக் சென்டர். நிர்வாகிகள் நியாயமான விலையில் அந்த கட்டிடத்தை விலைக்கு வாங்கி புனரமைப்பு செய்து நவீன வசதியோடு விசாலமான பெரிய பள்ளியாக இன்று காட்சி தருகிறது. ரமலான் முதல் பிறையில் தொழுகையும் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ் ! 


*அதான் (பாங்கு ஓசை) நவீன ஒலி பெருக்கியில் ஒலிக்கிறது.
*எல்லாத் தொழுகைகளுடன் - இரவுத் தொழுகையும் நடை பெறுகிறது .

இது எங்களுக்கு ரமலான் பரிசாக அல்லாஹ் தந்துள்ளதாகவே கருதுகிறோம் .

அதே போன்று எங்கள் ஊரில் அருகில் உள்ள பேர்பீல்ட் என்ற ஊரிலும் (முன்பு சிறிய பள்ளியாக இருந்தது) சென்ற வாரம் புதிய பள்ளிவாசல் திறக்கப்பட்டது. இங்கும் அதிரை மக்கள் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், எங்கள் பக்கத்து கவுண்டியான சொனோமா கவுண்டியில் உள்ள பள்ளிவாசல் தற்போது - கிறிஸ்தவ ஆலயத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்டு - தொழுகை நடந்து வருகிறது, இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் புதிய பள்ளிவாயில் கட்ட உள்ளார்கள்.

அந்தப் பள்ளியின் ஜும்மா பயான் கேட்க இங்கு கிளிக்கவும் http://j1fx.org/ISSR

மேலும் உலகம் முழுதும் உள்ள முஸ்லிம்களுக்கு இதே போன்று ரமலான் பரிசு கிடைக்கட்டும், ஆமீன்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். "உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குச் சென்றால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்!" என அபூ கதாதா(ரலி) அறிவித்தார். SAHIH AL BUKHARI # 444

அதிரை சித்தீக்
நன்றி : பேனா முனை

பசிக்க வைத்த நோன்பு ருசிக்க வைத்த மாண்பு 16

அதிரைநிருபர் பதிப்பகம் | July 28, 2012 | , , , ,

ஆன்மாவின் உணவாக
      ஆகிவிட்ட ரமலானே
நோன்பும்தான் மருந்தாகி
      நோய்முறிக்கும் ரமலானே!

பாரினிலே குர்ஆனைப்
      பாடமிட்ட ஹாபிழ்கள்,
காரிகளின் கிர்ஆத்கள்
      காதுகளில் சொட்டுந்தேன்!

பகைவனான ஷைத்தானைப்
      பசியினாலே முறியடித்தாய்த்
தொகையுடனே வானோர்கள்
      தொடரவும்தான் நெறியளித்தாய்!

இருளான ஆன்மாவை
       இறைமறையின் ஒளியாலே
அருளான பாதைக்கு
        அழைத்திடுமுன் வழியாமே!

நண்பனாக மாற்றினாயே
       நாங்களோதும் குர்ஆனை
நண்பனாகப் போற்றுகின்றோம்
       நோன்பையும்தான் மாண்பாக

இம்மாதம் மறையோதி
       இரட்டிப்பு நன்மைகளை
இம்மைக்கும் மறுமைக்கும்
       இனிப்பாகத் தந்திடுமே

புடமிடும்நல் லுடற்பயிற்சிப்
       புதுச்சுவையும் பெருகிடவும்
திடமுடன்நாம் பெறுதலுக்குத்
       தினந்தொழுத தராவிஹூமே
--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை) 
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844 
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

அதிரை ஷிஃபா மருத்துவமணையில் இலவச மருத்துவ முகாம் ! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | July 27, 2012 | ,


அதிரை மக்களின் மருத்துவ சேவையில் தொடர்ந்து ஈடுபடுத்தி வரும் ஷிஃபா மருத்துவமணை வரும் ஞாயிற்று கிழமை, 29-ஜூலை-2012 காலை 10:00 மணிமுதல் மதியம் 02:00 மணிவரை அலர்ஜி, ஆஸ்துமா விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் இலவச மருத்துவம் முகாம் நடைபெற இருக்கிறது.

அதிரைப் புதல்வன் மருத்தவர் M.M.ஷேக் அலி M.B.B.S.DCH அவர்களால் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.
  • மூச்சுத் தினறல்
  • முச்சுக் காற்றோடு வரும் இரைச்சல்
  • தூசி, புகை ஏற்படுத்தும் சிரமங்கள்
  • நுரையீரல்,மூச்சுக் குழாய் தொடர்பான சோதனைகள்
  • மூச்சுத் தினறாலால் இரவு தூக்கமின்மை
  • சளியுடன் கூடிய தொடர் இருமல்...
இன்னும் பரிசோதனையில் தெரியவரும் பிரச்சினைகளுக்கு தகுந்த ஆலோசனையும் மருத்துவ அறிவுரையும் வழங்கப்படும்.

தேவையுடையவர்கள் தவறாமல் மேற்கண்ட சிகிச்சையில் கலந்து கொண்டு பயனையடைய அன்புடன் வேண்டுகிறோம்.


அதிரைநிருபர் குழு

ரமளான் காணொளி: நபி(ஸல்) அவர்களை அழ வைத்த நிகழ்வு 0

அதிரைநிருபர் | July 27, 2012 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அல்லாஹ்வின் பேருதவியால் இந்த வருடம் ரமளான் மிகச் சிறப்பாக அனைவருக்கும் அமைந்திருக்கலாம் இன்ஷா அல்லாஹ்...

மார்க்க சொற்பொழிவு:

தலைப்பு: நபி(ஸல்) அவர்களை அழ வைத்த நிகழ்வு
உரை: முஹம்மது ஜமால் மதனி அவர்கள்


அதிரைநிருபர் குழு

டிசைன்ஸ் - தொழில் முனைவோர் ! தொடர்கிறது... 20

அதிரைநிருபர் பதிப்பகம் | July 27, 2012 | , , ,


அதிரை சகோதரர்களின் தொழில் முனைவோர் என்ற வரிசையில் அதிரைநிருபரில் தொடர் பதிவுகளாக பதிந்து வருகிறோம் அதில் கடந்த பதிவில் அதிரை டிபார்மண்டல் ஸ்டோர்ஸ் பற்றிய தகவல்கள் பதிந்திருந்தோம், இவ்வாறான பதிவுகள் சுயதொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவதாற்கே அன்றி தனிப்பட்ட விளம்பரமாக அல்ல.

அதிரையில் டிசைன்ஸ் என்ற பல்பொருள் அலங்கார மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்து வரும் நிறுவனம் கடந்த ஒரு வருடமாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது. நண்பர்கள் கூட்டாக இணைந்து ஆரம்பித்த நிறுவனத்தில் பங்குதாரர்களில் ஒருவர் LMS அபூபக்கர், வெளிநாடுகளில் வேலை செய்தவர், கடைசியாக ஜப்பானில் வேலை செய்துவிட்டு தாயகம் திரும்பியதும், பிறகு அதிரையில் டிசைன்ஸ் என்ற ஸ்தாபனத்தை நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிறார்.

அதிரைவாசிகள் இது போன்ற உள்ளூர்காரர்களின் சுயதொழில் முயற்சியினை ஊக்கப்படுத்த வேண்டும். வீடுகளுக்கு தேவையான பொருட்கள் வாங்க பட்டுக்கோட்டை தஞ்சாவூர் சென்னை என்ற அலைச்சலான தேடல்களை சுருக்கிக் கொண்டு அனைத்தும் அதிரையிலேயே கிடைக்கிறது என்பதை அறிய வேண்டும்.



டிசைன்ஸ் ஸ்தாபனத்தின் சிறப்பு அம்சங்கள்:
  • தரமான ஃபேசன் ஜுவல்லரி
  • டிசைனர் சுடிதார் வகைகள்
  • அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புர்கா மற்றும் ஸ்கார்ஃப்
  • இறக்குமதி செய்யப்பட்ட காஸ்மெடிக்ஸ்
  • தரமான லெதர்ஹேண்ட் பேக்குகள்.
  • இறக்குமதி செய்யப்பட்ட பெண்களுகான லெதர் கலனிகள்
  • பிறந்த குழந்தைகளுக்கான அவசியப் பொருட்கள் - JUST BORN BABY GIFT ITEMS.
  • இறக்குமதி செய்யப்பட்ட சாக்லெட் வகைகள், tang powder, oats வகைகள்.
  • அனைத்து விதமான உயர் தரமான பரிசுப்பொருட்கள்.

மற்றும் பல பயனுள்ள வீட்டு பெருட்கள் இங்கு கிடைக்கும், சில்லரையாகவும் மொத்தமாகவும் கிடைக்கும்.


மேலும் விபரங்களுக்கு கீழ் உள்ள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

LMS அபூபக்கர்,
No.50, மெயின் ரோடு 
(இந்தியன் வங்கி அருகில், டாக்டர் ஹனீப் மருத்துவமனை எதிரில்)
அதிராம்பட்டினம் - 614701

அலைபேசி எண்கள்: +91 9944116240 / +91 9566115550
மின்னஞ்சல்: dezignz.adirai@gmail.com

சுய தொழில் செய்து தாய்நாட்டில் சம்பாதிக்க முனையும் இவர்களைப் போன்ற சகோதரர்களை ஊக்கப்படுத்துவதில் முன்னிருப்போம். இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் குழு

பனி வீழ்ந்தெழுந்த மலர்வனம் ! - பேசும் படம் 44

அதிரைநிருபர் பதிப்பகம் | July 26, 2012 | , , , ,


லண்டன் ! பெரும்பாலோரின் கனவுக்குள் வந்து செல்லும் நகரம், ஒலிம்பிக் போட்டிகளுக்காக தயாராகி வரும் நகரம் என்ற கூடுதல் தகவலை சொல்லித்தான் தெரிய வேண்டுமா !?

இதற்கு முன்னர் பனிப்பொழிவில் என்மொழி என்று அழகிய பேசும் படங்களை நம் அதிரைநிருபரில் பதிந்தோம், அதனைத் தொடர்ந்து பனி வீழ்ந்த பொழுதுகள் கழிந்ததும் மலர் எழுந்து மனதிற்கு குதூகலம் தரும் இந்த மலர்வனம். 

கண்களால் கைது செய்தால் என்னோடு இருந்திடுமே ஆதலால், கையடக்க கேமராவின் துணை கொண்டு அடைத்துக் கொண்டேன் என் மனத் திரையிலும் இந்த பதிவில் பளிச்சிடும் படங்களாக.

இதோ உங்களின் பார்வை பட்டு மலர்களும் மயங்கட்டும் !
































M.H.ஜஹபர் சாதிக்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு