தந்தை வழி உறவு...
அண்ணனின் மகன் நல்ல நிலையில் இருப்பதை, புகழ் பெற்ற மருத்துவராகவோ, வழக்குரைஞராகவோ திகழும் போது என் அண்ணனின் மகன் என்று புளங்காகிதம் அடையும் சித்தப்பர்களை காண முடியும். தாய் வழி சொந்தம் போல் நெருங்கிய பாசப் பிணைப்புகள் காணப்படவில்லை என்றாலும், சில சமயங்களில் கஞ்சி ஊற்ற ஆளில்லை என்றாலும் கச்சல் கட்ட ஆளுண்டு என்ற பழமொழிக்கு தகுந்தார் போல் தார்மீக ஆதரவு என்றும் கிடைக்கும்.
ஐந்து வயதில் அண்ணன் தம்பி பத்து வயதில் பங்காளி அதன் பின் பகையாளி என்பது முதுமொழி இது பல இடங்களில் பரம்பரை சொத்துக்கள் பிரித்து கொள்வதில் ஏற்படும் பகை. இவைகளால் பிரியும் சகோதரர்கள் கூட அண்ணனின் பிள்ளைகளை வழியில் கண்டால் பாசமாக பேச எத்தனிப்பார்கள்.
அண்ணனின் மகன் நல்ல நிலையில் இருப்பதை, புகழ் பெற்ற மருத்துவராகவோ, வழக்குரைஞராகவோ திகழும் போது என் அண்ணனின் மகன் என்று புளங்காகிதம் அடையும் சித்தப்பர்களை காண முடியும். தாய் வழி சொந்தம் போல் நெருங்கிய பாசப் பிணைப்புகள் காணப்படவில்லை என்றாலும், சில சமயங்களில் கஞ்சி ஊற்ற ஆளில்லை என்றாலும் கச்சல் கட்ட ஆளுண்டு என்ற பழமொழிக்கு தகுந்தார் போல் தார்மீக ஆதரவு என்றும் கிடைக்கும்.
அண்ணன் குடும்பத்தில் இடர்பாடுகள் ஏற்படும் போது தம்பிமார்களின் உதவி அபரிதமானது.
*தாய் வழி சொந்தம் தானே வந்து ஒட்டிக்கொள்ளும் சொந்தம்.
*தந்தை வழி சொந்தங்களை நாம் சென்று வளர்த்துக்கொள்ள வேண்டும்.
*தந்தையோடு உடன் பிறந்த சகோதரி, அத்தை (மாமி) இவர்களின் பாசம் தானாக வராது ஆனால் நாம் சென்று பார்க்கும் போது. அவர்கள் காட்டும் பாசம் இனிமையானது, இறகுகளால் வருடும் வசந்தம் அது சொல்லில் அடங்காது மாமி என்று நமதூரில் அழைக்கப்படும் அற்புதமான உறவு.
மாலை நேரங்களில் சென்று மாமி(மார்களை)யை பார்க்கும் சிறு பிள்ளைகளுக்கு கிடைக்கும் உபசரிப்புகளும் அவர்களால் வழங்கப்படும் தின்பண்டங்கள் அல்லது காசு என்று கொடுத்து மகிழும் மாமி என்ற அழகிய உறவு. உடன் பிறந்த சகோதரனின் பிள்ளை என்ற பாசம் சொந்த சகோதரனிடம் பாசம் காட்டுவது போல் உணர்வாக இருக்கும்.
*தாய் வழி உறவு என்றும் கிடைக்கும் உணவு, தந்தை வழி உறவு சிறப்பு பதார்த்தம் போன்றது. எபோதாவது ஒரு முறை சாப்பிடுவது போல் தந்தை வழி உறவையும் எப்போதாவது ஒரு முறை சந்திப்பதே நலம்.
*தந்தை வழி சொந்தத்தின் அருமை, நமக்கு ஏதாவது ஆபத்தான நிலை வரும்போது புரியும்.
*தந்தையை இழக்க நேரிட்டால் தந்தையின் உடன்பிறனந்தவர்கள் அண்ணனின் பிள்ளைகளை கவனித்துக் கொள்ள முன்வரும் நிலை இன்றி அமையாத ஒன்று.
*ஒரு தாய் தனது பிள்ளைகளுக்கு எல்லா வகையான உறவின் ஆதரவும் இருக்க வேண்டும் என்ற என்னத்தை ஊட்ட வேண்டும் பெரிய தன்தை, சிறிய தந்தை, மாமி ஆகியோர் பற்றிய நல்ல எண்ணம் ஏற்படும் வகையில் பிள்ளைகளிடம் சொல்லி வளர்க்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் பிள்ளைகளும் உறவை நாடி செல்லும்
*தாயில்லா பிள்ளை, தந்தையை இழந்த பிள்ளை என்று இரண்டில் ஒன்றுக்கு ஏற்படும் பேரிழப்பு தாய் வழியே தாங்கி நிற்கும் என்றாலும் தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு தந்தை வழி சொந்தங்கள் உதவ முன் வருவார்கள் என்பதை காண முடிகிறது.
*தாய் வழி சொந்தங்களின் பாசம் தானே வரும், தந்தை வழி சொந்தங்கள் நாம் தேடி சென்று பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை பதிய விரும்புகிறேன்.
*ஒரு வாசகர் என்னிடம் தொலைபேசி வாயிலாக பேசினார் தாய் வழி சொந்தம் இயற்கையாக அன்பு செலுத்த கூடியவை என்று கூறி இருந்தீர்கள்.ஆனால் இடர்பாடுகள் வந்தால் காக்கை கூட்டத்தில் கல் எறிந்தால் கலைவது போல் கலைந்து விடுவார்கள். தந்தை வழி சொந்தங்கள் தந்தைக்கு இடர் பாடுகள் வந்த போது அவர் சகோதரர் முன் வந்து அவர் கஷ்டத்தை நீக்க முன் வந்தது மட்டுமல்லாமல் அவர் பிள்ளைகள் வளர்ப்பதற்கு உறுதுணையாய் இருப்பார்கள் என்பதை தாங்கள் பதிய வேண்டும் என கேட்டுகொண்டார். பெரும் இடர்பாடு வந்தால் தந்தை வழி சொந்தம் உதவும் என்பதை உணர முடிகிறது.
*பிள்ளைகளிடம் பகையை மிகை படுத்தி கூறி தந்தை வழி மீது துவேசம் கொள்ள செய்வதும். நல்லதை கூறி பாசம் பெற செய்வதும், தாயிடமே உள்ளது கூடுதல் சொந்தங்கள் இருத்தல் நலம் தானே!!.
உறவுகள் தொடரும்...
அதிரை சித்தீக்

