அன்பிற்கினியவர்களுக்கு !

அதிரையில் ஸ்திரமான தாஃவாக் களம் அமைத்து மிகச் சிறப்புடன் செயல்பட்டு வரும்
அதிரை தாருத் தவ்ஹீத் கடந்த மே-2014 பள்ளி விடுமுறையில் இருந்த மாணவ மணிகளுக்கென்று நடத்திய 'கோடகால பயிற்சி முகாம்' அனைவருக்கும் நினைவில் இருக்கலாம்.
அதிரைநிருபரில் அனைவரின் பேராதரவைப் பெற்று தொடராக பதிக்கப்பட்ட
"மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள்" தொடர் வெளிவந்து கொண்டிருக்கும்போதே, அதிரை தாருத் தவ்ஹீத் சகோதரர்கள் வேண்டிக் கொண்டதன் படி கடந்த மே மாதம் 3ம் தேதி ஆரம்பித்த பயிற்சி முகாமில் ஒரு பகுதியாக எங்களது மூத்த பங்களிப்பாளர்
சகோதரர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் மே மாதம் 10 தேதி அன்று மாணவ மணிகளுக்கு (கூட்டாக) ‘சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம் வீரர்களின் தியாக வரலாறு’ என்ற தலைப்பில் சிறப்பானதொரு உரை நிகழ்த்தினார்கள்.
அதில் பங்கெடுத்த மாணவமணிகள் அனைவரின் ஆர்வமும், அவர்கள் அந்த உரையில் மோற்கோளிட்ட நிகழ்வுகளை குறிப்பெடுப்பதில் காட்டிய துடிப்பும் மகிழ்வை அளித்தது.
அதிரை இளைய சமுதாயம் விழி கொண்டும் மொழி கொண்டும் தீர்க்கமான, தூய்மையான இறைகோட்பாட்டிற்குட்பட்டு நபிவழியில் வெற்றியடைய மனதார வாழ்துகிறோம்... இன்ஷா அல்லாஹ் !
அதிரைநிருபர் பதிப்பகம்
காணொளி பகிர்வு (நன்றி) : ADT