
இந்து மத விசேஷங்கள் அனைத்தும் சோதிடத்தை முழுவதும் அடிப்படையாகக் கொண்டவையே. ஆனால், துரதிர்ஷ்டமாக முஸ்லீம்கள் சிலரும்கூட, சோதிடம், சகுணம், பால் கிதாபு, நட்சத்திர நம்பிக்கை போன்றவைகளில் ஈடுபாடு கொண்டுள்ளனர் என்பதை எண்ணி கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. இவைகள் மிகப் பெரும் ஷிர்க் என்பதிலும் யாருக்கும் சந்தேகம் இல்லை.
சோதிடமும் அறிவியலே என்று வாதிடுவோர்க்களுக்கு, நாம் அவர்கள் முன் வைக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும். கேள்விகளை அடிப்படையாக வைத்து - அதன் சுழற்சி,தங்கும் இடங்களை வைத்து, சோதிடம் சொல்லப்படுகிறது என்றால் அதன் மூலம் பலன்கள் இருக்கிறது என்றால், முன்பு 9 கோள்கள் என்று சொன்ன அறிவியல் இப்போதோ புது புதிதாக கண்டு பிடித்துக் கொண்டே உள்ளதே, அது எப்படி ? அதனுடைய பலன்கள் என்ன ? இதன் மூலம் ஏக இறைவனாகிய அல்லாஹ், கோள்கள் அனைத்தையும், மற்றவைகளையும் படைத்து விட்டு, சும்மா இருந்து விடவில்லை. புதிது புதிதாக படைத்துக் கொண்டிருக்கின்றான் என்பதையும், அவன் இயங்கிக் கொண்டே இருக்கிறான் என்றும் விளக்குறதா ? அல்லது புதிதாக கண்டு பிடிக்கப்பட்டு கொண்டு இருக்கும் கோள்களின் கிரக ராசி என்ன ? அதைப் பற்றி ஏன் மூச்சு விட மறுக்கிறது சோதிடம்.
முன்பு புளோட்டோ என்று அறியப்பட கோள் இன்று விஞ்ஞானிகளால் ஒரு கோளாக அடையாளம் காட்டப்படுவதில்லை. முன்பு புளுட்டோவை வைத்து கணித்த முறைகள் இப்போது செல்லுபடியாகதே ! அதற்கு சோதிடம் என்ன சொல்லப் போகின்றது. இனி அதை வைத்து இப்போது சோதிடம் சொல்ல முடியாத நிலைக்கு சோதிடப் புரட்டர்களின் பதில்தான் என்ன ?
கார்ல் பாப்பர் என்ற விஞ்ஞானியின் கூற்றுப்படி, எந்த அறிவியல் கொள்கையும் ஒரே ஒரு தடவை உண்மையற்றது என நிருபிக்கப்படுமானால், அந்த விஞ்ஞானக் கொள்கையே உண்மையற்றதாக ஆகிவிடும். ஆனால், சோதிடத்தில் பலிப்பதைவிட, பொய்ப்பதுதான் மிக அதிகம். ஒவ்வொரு சோதிடனும் ஒவ்வொரு மாதிரி சொல்வார். அதில் யார் சொல்வது சரி ? இப்படி பொய்ப்பதன் மூலம், சோதிடம் பொய்யானது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால், இஸ்லாத்தின் எந்தக் கொள்கைகளும் இன்று வரை பொய்யானதில்லை. இன்றும் திருக்குர்ஆன் உலகமக்கள் யாவரிடமும் சவால் விட்டுக் கொண்டுள்ளது. இஸ்லாம் சொல்லும் கொள்கையின்படிதான் அறிவியலும் சென்றாக வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும். உதாரணமாக ! மனிதப் படைப்பு, பிரபஞ்ச தோற்றம், கரு உருவாவது, மழைநீர், இப்படி சொல்லிக் கொண்டே போக முடியும். அறிவியல் ஒன்று சொல்லும் கருத்து, குர்ஆனுக்கு ஆரம்பத்தில் மாற்றமாக இருந்தால், கடைசியில் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, குர்ஆன் என்ன சொல்கிறதோ, அந்தக் கொள்கையில் வந்து நின்று விடுகிறது அந்த அறிவியல்.
இதுவரையில் சொன்னவை அனைத்தும் பொய்க்காத சோதிடரை யாரும் கண்டதுண்டா ? முடியவே முடியாது ! காரணம் சோதிடமும் ஒரு மிகைப் படுத்தப்பட்ட ஒரு பெரிய பொய் என்பதில் என்ன சந்தேகம் இருக்கிறது.
இதை சில பெயர் தாங்கி முஸ்லீம்கள் நம்புகிறார்கள் என்பதுதான் மன வேதனை. இது ஒரு மனநோய் அல்லது அதன் ஆரம்ப அறிகுறி என்று கூட கூற இயலும்.
சிலரைப் பார்த்தால், ஒரு தினசரி நாளிதழை கையில் விரித்துக் கொண்டு, அவர்களின் அன்றைய ராசி - பலன்கள் என்ன போட்டிருக்கிறது என்று பார்ப்பவர்கள் அதை நம்புவார்கள். அதே போன்று செயல்பட ஆரம்பிப்பார்கள். காலண்டரையும் நாளிதழ்களையும் பார்த்து, பார்த்து சோம்பேறிகளாக, மடையர்களாக, மன நோயாளிகளாக என்று மாறிப் போய் விடுவார்கள் .
இந்த சோதிடம் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது ?
இன்ஷா அல்லாஹ் தொடரும் !
இப்னு அப்துல் ரஜாக்