சில வாரங்களுக்கு முன்பு இந்திய மக்கள் தொகை தொடர்பாக செய்திகள் வெளிவந்தது, இந்நிலையில் உலக இஸ்லாம் பற்றி மேலோட்டமாக தெரிந்து கொள்வது பொறுத்தமானதாக இருக்கும். கீழே தரப்பட்டுள்ள செய்திகள் இங்கிலாந்து இஸ்லாமிய இதழ் வெளியிட்ட தகவல்கள். இந்திய மக்கள் தொகை கணக்கீட்டிலேயே பல்வேறு குளறுபடிகள் இருக்கும் போது, உலக அளவில் பார்க்கும்போது முன்பின் வித்தியாசங்கள் சில இருக்கத்தான் செய்யும். இருந்தாலும் உத்தேசமாகவாவது தெரிந்துகொள்வது அவசியம் தானே!
உலக முஸ்லிம் மக்கள் தொகை அடுத்த 20 ஆண்டுகளில் 35% உயரப்போகிறது. இதில் முஸ்லிம்கள் வளர்ச்சி 1.5% ஆக இருக்கும். முஸ்லிமல்லாதவர்கள் வளர்ச்சி 0.7 ஆகத்தான் இருக்கும்.
உலக முஸ்லிம்கள் இன்று 23.4%. இது 2030ல் 26.4 ஆக உயரப்போகிறது இந்த என்ணிக்கையில் இது ஆசிய பசிபிக் நாட்டில் 59.2%ஆகவும், மத்தியக்கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவை சேர்த்து 20% ஆகவும், மற்ற ஆப்ரிக்க பகுதிகளில் 17.6% ஆகவும், ஐரோப்பாவில் 2.7%ஆகவும், அமெரிக்காவில் 0.5% ஆகவும் இருக்கும்.
உலக முஸ்லிம் மக்கள் தொகையில் இந்தோனேசியாவை விட பாகிஸ்தான் 2030ல் முந்தி உலகிலேயே அதிக முஸ்லிம் மக்களை கொண்ட நாடு என்ற பெருமையை அடையப் போகிறது. முஸ்லிம்கள் உண்மையான முஸ்லிமாக இருக்க அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்.
முஸ்லிம்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் தொடர்ந்து சிறுபான்மையராகவே இருப்பர். ஆனால் மொத்த மக்கள் தொகையில் வளர்ச்சி இருக்கும். இதில் ஐரோப்பா, ரஷ்யாவைவிட அமெரிக்காவே வளர்ச்சியில் முன்னனியில் இருக்கும்.
இப்போது 1 மில்லியன் முஸ்லிம்கள் அல்லது அதற்கு மேல் உள்ள நாடுகள் எண்ணிக்கை 72. இது 2030ல் 79 ஆகப்போகிறது.
அமெரிக்கா
கனடாவில் முஸ்லிம்கள் தற்போது 940,000 உள்ளனர்.இது 2030ல் 3 மடங்காகி 2.7 மில்லியனாக மாறும்.அர்ஜென்டினா அமெரிக்காவிலேயே 3 வது அதிக முஸ்லிம்களை கொண்ட நாடாக மாறும். 15 வயதுக்குட்பட்டவர்கள் தற்போது 13% மட்டுமே. அதிக வயதுடையவர்கள் மட்டுமே அதிகமாக குடியேறியது தான் இதற்கு காரணம். 2030ல் அமெரிக்காவில் பிறந்தவர் எண்ணிக்கை குறிப்பிடத்தகுந்த அளவில் உயரும்.இஸ்லாமிய வளர்ச்சி வீதம் தற்போது 0.8 ஆக இருப்பது 2030ல் 1.7 ஆக மாறும். தற்போது 64.5% முஸ்லிம்கள் வெளிநாட்டில் பிறந்தவராக இருக்கும் அமெரிக்காவில் 2030ல் 45% உள் நாட்டில் பிறந்தவராக இருப்பர்.
பசிபிக்-ஆசியா
30% முஸ்லிம்கள் ஆசிய பசிபிக் நாடுகளில் 2030ல் இருப்பர். சீனாவில் முஸ்லிம் மக்கள் தொகை 2% ஆகி 2030ல் உலகின் 19 வது வரிசையில் இருக்கும்.
மத்திய கிழக்கு-வடக்கு ஆப்ரிக்கா
இந்த மண்டலத்தில் 20 நாடுகள் முஸ்லிம் எண்ணிக்கையில் அதிகம் கொண்டதாக இருக்கும். 17.7% முஸ்லிம்களை உடைய இஸ்ரேலில் 2030ல் 23.2% ஆக உயரும். எகிப்து அல்ஜீரியா மொரோக்கோ போன்றவை அதிக எண்ணிக்கை கொண்ட நாடுகளாகும். இந்த மண்டலத்தில் 2 வது பெரிய நாடாக ஈராக் உருவெடுக்கும்.
ஐரோப்பா
இந்த மண்டலத்தில் 2030ல் 10% முஸ்லிம்களை கொண்ட நாடாக பிரான்ஸ், பெல்ஜியம், ரஷ்யா, கொசவா, அல்பேனியா, போஸ்னியா பல்கேரியா ரஷ்யா, ஜார்ஜியா ஆகியவை இருக்கும். ரஷ்ய முஸ்லிம்களின் வளர்ச்சி 0.6%, அதே சமயம் முஸ்லிமல்லாதவர்கள் 0.6% குறைந்து வருகிறார்கள்.பிரான்ஸில் குடியேறிய முஸ்லிம்கள் 68%, இங்கிலாந்தில் குடியேறியவர்கள் 28% மற்ற ஆப்ரிக்க நாடுகளில் 60% வளர்ச்சி இருக்கும்.நைஜீரியாவில் 51.5% முஸ்லிம்கள் இருப்பார்கள்.முஸ்லிம்களின் பிறப்புக் கட்டுப்பாடு 48% ஆக உள்ளது. முஸ்லிமல்லாதவர்கள் கட்டுப்பாடு 63% ஆக உள்ளது.
-- M. H. ஜஹபர் சாதிக்


