
கருணாநிதி:
பட மெடுத்தீர்! தமிழ்த்திரு
நாட்டைத் தீண்டி விட்டீர்!
மின்சாரத்தைத் துண்டித்தீர்! மக்கள்
உம்மைத் தண்டித்து விட்டனர்!
மின்சாரம் இல்லாமலேயே ஷாக்
ட்ரீட்மென்ட் தந்து விட்டனர்!
ஜெயலலிதா:

மதுரைக்கே வேட்டு வைத்த
கண்ணகிக்கு வேட்டு வைத்தீர்!
கற்பில் நிலைத்து நின்றவளுக்கே
இக் கதிதான் உண்டு என்றால்
பொறுப்பில் உள்ளோர் கதி
யாதா குமோ யாரறிவார்?
விஜயகாந்த்:

கொட்டு முரசே! தனிக்காட்டு ராஜ்யம்
நமதென்று கொட்டு முரசே!
பாட்டில் அடிக்காமல் எழுத முடியாது!
பாட்டில் அடிக்காமல் பேச முடியாது!
பாலாறு, தேனாறு ஓடுதோ இல்லையோ,
கோளாறு செய்யும் மது ஆறு ஓடும்!
வைக்கோ :
அம்மாவால் சைக்கோ ஆகுமுன்,

வைக்கோ, இடம் மாற நினைத்தீர்!
நல்ல வேளை தப்பித்தீர்; மாறினால்
உமது நிலைமை என்னவாகும்?
மறு தளர்ச்சி வேண்டாம்; மீண்டும்
புது மறுமலர்ச்சி மலரட்டும்!
தா. பாண்டியன்:

சொந்த அரிவாள் அதனால்
கதிர் அறுக்க முடிய வில்லை!
சொந்த அறிவாலும் அறுவடை
நடத்தத் துணிவில்லை; உமது
கூரிய அறிவாள் செங்கோல்
என்றுதான் நிமிர்ந்து நிற்கும்!
ராமதாஸ்:

அரசியலில் மகா மருத்துவர் நீர்!
உமது ட்ரீட்மென்ட் என்ன ஆச்சு?
எக்ஸ்ரே, ஸ்கேனிங் எல்லாம்
மிகவும் பழுதாகிப் போயினவோ?
புதிதாக வாங்கி வைக்க,
அய்யாவுக்கு ஐடியா உண்டா!

தங்கபாலு:
வெளியேறி யவரோ கராத்தேக்காரர்!
சகாக்களுடன் செய்தீர் கராத்தே!
என்ன சொன்னாலும் உமக்கு வராதே!
பொற்கைப் பாண்டியனின் கை,
ஜோஷ்யக் கையாய்ப் போனதேனோ?
விதி ரேகை சொல்லுமா விளக்கம்?
உமர்தம்பிஅண்ணன்
நன்றி : Zakir Hussain